• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Friday, July 10, 2026
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home இலங்கை செய்திகள்

முல்லைத்தீவு கடற்பரப்பில் இடம்பெறும் சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகளைக் கட்டுப்படுத்துக.!

Mathavi by Mathavi
July 10, 2026
in இலங்கை செய்திகள், முல்லைதீவு செய்திகள்
0
முல்லைத்தீவு கடற்பரப்பில் இடம்பெறும் சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகளைக் கட்டுப்படுத்துக.!
Share on FacebookShare on Twitter

தற்போது முல்லைத்தீவுக் கடற்பரப்பில் அதிகரித்துள்ள சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகளைக் கட்டுப்படுத்த துரித நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் மற்றும் பிரதி அமைச்சர் ரத்ன கமகே ஆகியோரிடம் வலியுறுத்தியுள்ளார்.

இந்நிலையில் குறித்த சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகளைக் கட்டுப்படுத்த துரித நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கடற்படை மற்றும் துறைசார்ந்த உரிய அதிகாரிகளுக்கு கடற்றொழில் அமைச்சரும், பிரதி அமைச்சரும் உடனடியாக உத்தரவிட்டுள்ளனர்.

நாடாளுமன்ற கட்டடத்தொகுதியில் அமைந்துள்ள கடற்றொழில் அமைச்சிற்குரிய அலுவலகத்தில் 09.07.2026 நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலின்போதே இவ்வாறு சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகளைக் கட்டுப்படுத்துவது தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.

குறித்த கலந்துரையாடல் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையில்,
முல்லைத்தீவு மாவட்டத்தில் தொடர்ச்சியாக சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகள் இடம்பெற்று வருகின்றன.

இந்நிலையில் சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகளைக் கட்டுப்படுத்துமாறு நாமும் தொடர்ச்சியாக நாடாளுமன்றிலும், கடற்றொழில் அமைச்சரிடமும், உரிய துறைசார்ந்த தரப்பினரிடமும் வலியுறுத்தி வருகின்றோம்.

அந்தவகையில் முல்லைத்தீவு கடற்பரப்பில் அண்மை நாட்களாக வெளிச்சம்பாய்ச்சி மீன்பிடித்தல், சுருக்குவலை, டைனமெட் வெடிவைத்து மீன்பிடித்தல் உள்ளிட்ட சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகள் அதிகரித்துக் காணப்படுவதாக 09.07.2026 நேற்று முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழில் அமைப்புக்களின் பிரதிநிதிகள் என்னிடம் முறையிட்டிருந்தனர்.

அவ்வாறு சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகள் முல்லைத்தீவுக் கடற்பரப்பில் இடம்பெறுவதை உறுதிப்படுத்தும் வகையில் புகைப்படங்கள், காணொளிகள் உள்ளிட்டவற்றையும் ஆதாரங்களாக தம்மால் சமர்ப்பிக்க முடியுமெனவும் கடற்றொழில் அமைப்புக்களின் பிரதிநிதிகளால் என்னிடம் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இத்தகைய சூழலில் உடனடியாக நாடாளுமன்றில் கடற்றொழில் அமைச்சருக்குரிய அலுவலகத்திற்குச் சென்று கடற்றொழில் அமைச்சர் மற்றும் கடற்றொழில் பிரதி அமைச்சர் ஆகியோரிடம் குறித்த சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகள் தொடர்பாக விரிவாக எடுத்துக் கூறியிருந்தேன்.

குறிப்பாக சிறுதொழிலாளர்கள் படும் துன்பங்களையும், வேதனைகளையும் கடற்றொழில் அமைச்சர் மற்றும் பிரதி அமைச்சர் ஆகியோரது கவனத்திற்குக் கொண்டுவந்துள்ளேன்.

இவ்வாறு சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகள் முல்லைத்தீவு மாவட்டத்தில் அதிகரித்திருப்பதால், சிறு தொழிலாளர்கள் கடற்றொழில் செய்ய முடியாத நிலை காணப்படுவதை அவர்களிடம் சுட்டிக்காட்டியிருந்தேன்.

சட்டவிரோதிகள் மாத்திரம்தான் கடற்றொழில் செய்ய முடியுமா எனவும் இதன்போது அவர்களிடம் கேள்வி எழுப்பியிருந்தேன்.

அத்தோடு கடற்படையினர் கடலில் ரோந்து நடவடிக்கைகளை மேற்கோள்ளும்போது சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகளை மேற்கொள்பவர்கள் மீது நடவடிக்கைகள் எதனையும் மேற்கொள்வதில்லை எனவும், மாறாக சட்டமுறைகளுக்கு உட்பட்டு கடற்றொழில் செயற்பாடுகளில் ஈடுபடுகின்ற சிறுதொழிலாளர்களிடம் அனுமதிப்பத்திரங்கள் இருக்கின்றதா என பலதரப்பட்ட விசாரணைகளை மேற்கொள்வதாக கடற்றொழிலாளர்கள் என்னிடம் முறையிட்டிருந்தனர். அதனை நான் கடற்றொழில் அமைச்சருக்கும் பிரதி அமைச்சருக்கும் தெரியப்படுத்தியிருந்தேன்.

அதேவேளை இத்தகைய சட்டவிரோத கடற்றொழிலாளர்களுக்கு எதிராக உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தியிருந்தேன்.

இந்நிலையில் சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகளை நிறுத்துமாறு தாம் தொடர்ந்து கூறிவருவதாகவும், அவ்வாறான சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகளைக் கட்டுப்படுத்துவதற்குரிய நடவடிக்கைகள் தம்மால் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் இதன்போது கடற்றொழில் அமைச்சர் மற்றும் பிரதி அமைச்சர் ஆகியோரால் என்னிடம் தெரிவிக்கப்பட்டடிருந்தது.

அத்தோடு இவ்வாறாக முல்லைத்தீவு கடற்பரப்பில் தற்போது அதிகரித்துள்ள சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகளைக் கட்டுப்படுத்த துரித நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கடற்படையினருக்கும், துறைசார் திணைக்கள அதிகாரிகளுக்கும் எனக்கு முன்பாகவே கடற்றொழில் அமைச்சர் மற்றும் பிரதி அமைச்சர் ஆகியோரால் உத்தரவிடப்பட்டிருந்தது.

இந்நிலையில் தற்போது முல்லைத்தீவு மாவட்டத்தில் சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகள் அதிகரித்துக் காணப்படுவதை உறுதிப்படுத்தும் வகையில் புகைப்படங்கள் மற்றும் காணொளிகளை 10.07.2026 கடற்றொழில் அமைச்சரிடமும், பிரதி அமைச்சரிடமும் சமர்ப்பிப்பதாகக் கூறிவிட்டு வந்திருக்கின்றேன்.

அந்தவகையில் இத்தகைய சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகளுக்கெதிராக விரைவில் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என எதிர்பார்க்கின்றேன் – என்றார்.

Related Posts

யாழில் யாசகம் பெற்றோரை அகற்றிய பொலிஸார்.!

யாழில் யாசகம் பெற்றோரை அகற்றிய பொலிஸார்.!

by Mathavi
July 10, 2026
0

யாழ். நகர்ப் பகுதியில் சுற்றுச்சூழலுக்கு அசௌகரியங்களை ஏற்படுத்தும் விதமாகவும் சுற்றுலாவிகளுக்கு இடையூறுகளை ஏற்படுத்தும் வகையிலும் நடமாடிய 30 இற்கும் அதிகமான யாசகர்கள் இன்று யாழ் பொலிஸாரின் பங்களிப்புடன்...

டெங்கு நுளம்புகள் பெருகுவதை தடுக்க மஸ்கெலியா பிரதேச சபை நடவடிக்கை.!

டெங்கு நுளம்புகள் பெருகுவதை தடுக்க மஸ்கெலியா பிரதேச சபை நடவடிக்கை.!

by Mathavi
July 10, 2026
0

மஸ்கெலியா நகரில் டெங்கு நுளம்புகள் பெருகுவதை தடுக்க மஸ்கெலியா பிரதேச சபையினால் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. இந்த நிகழ்வு இன்று காலை 10 மணிக்கு மஸ்கெலியா பிரதேச சபையின்...

பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் மாதாந்த அமர்வு; பல முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றம்.!

பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் மாதாந்த அமர்வு; பல முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றம்.!

by Mathavi
July 10, 2026
0

கிளிநொச்சி பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் மாதாந்த அமர்வு இன்றைய தினம் சபையின் தவிசாளர் சுரேன் தலைமையில் ஆரம்பமாகியது. கூட்டத்தின் தொடக்கத்தில், அண்மையில் மறைந்தவர்களுக்காக சிறிது நேர மௌன...

நூதனமான முறையில் போதைப்பொருள் கடத்தல்; யாழில் ஒருவர் கைது.!

நூதனமான முறையில் போதைப்பொருள் கடத்தல்; யாழில் ஒருவர் கைது.!

by Mathavi
July 10, 2026
0

வாசனை சவர்க்காரத்திற்குள் நூதனமான முறையில் போதைப்பொருளை கடத்தி யாழ்ப்பாணத்தின் நகர்புறப் பகுதியில் விற்பனைக்காக கொண்டு சென்ற ஒருவர் யாழ்ப்பாணம் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினரால் நேற்று (9)...

யாழில் கூரிய வாள்களுடன் ஐவர் கைது.!

யாழில் கூரிய வாள்களுடன் ஐவர் கைது.!

by Mathavi
July 10, 2026
0

திட்டமிட்ட வாள்வெட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் அபாயகரமான கூரிய இரு வாள்களுடன் ஐவர் யாழ். மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த சந்தேக நபர்களுடன் யாழ்ப்பாணத்தின்...

போதைப்பொருளுடன் ஒருவர் கைது.!

காத்தான்குடி நகரசபை உறுப்பினர் கைது.!

by Mathavi
July 10, 2026
0

ஐக்கிய மக்கள் சக்தி (SJB) சார்பில் தேசிய பட்டியல் ஊடாக காத்தான்குடி நகரசபைக்கு நியமிக்கப்பட்ட உறுப்பினர் ஒருவர், பாலியல் துஷ்பிரயோக முயற்சி குற்றச்சாட்டின் கீழ் காத்தான்குடி பொலிஸாரால்...

மட்டக்களப்பில் தற்காலிக பாலம் திறந்து வைப்பு.!

மட்டக்களப்பில் தற்காலிக பாலம் திறந்து வைப்பு.!

by Mathavi
July 10, 2026
0

மட்டக்களப்பு நகருக்குள் வரும் பிரதான பாலங்களில் ஒன்றாகவும் அண்மையில் இடிந்து வீழ்ந்த பாலமாகவும் உள்ள புதுப்பாலத்தில் அமைக்கப்பட்ட தற்காலிக பாலம் இன்று திறந்து வைக்கப்பட்டது. அண்மையில் இந்த...

வீதியோரங்களில் வீசப்படும் கழிவுகள்; வீதி திருத்தப் பணியாளர்கள் கடும் அவதி.!

வீதியோரங்களில் வீசப்படும் கழிவுகள்; வீதி திருத்தப் பணியாளர்கள் கடும் அவதி.!

by Mathavi
July 10, 2026
0

தொண்டமானாறு - அச்சுவேலி வீதிப் புனரமைப்புப் பணிகள் தற்போது மிக வேகமாக முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், அப்பகுதி மக்கள் வீதியோரங்களில் வீசும் கழிவுகளால் தாம் பெரும் அசௌகரியங்களை...

கதிர்காம பாதயாத்திரை; பக்தர்களின் பயன்பாட்டிற்காக காட்டுப் பாதை திறப்பு.!

கதிர்காம பாதயாத்திரை; பக்தர்களின் பயன்பாட்டிற்காக காட்டுப் பாதை திறப்பு.!

by Mathavi
July 10, 2026
0

வரலாற்றுச் சிறப்புமிக்க கதிர்காம கந்தன் ஆலயத்தின் வருடாந்த ஆடி வேல் விழாவை முன்னிட்டு, பாதயாத்திரையில் ஈடுபடும் ஆயிரக்கணக்கான பக்தர்களின் பயன்பாட்டிற்காக உகந்தை வழியூடான காட்டுப் பாதை இன்று...

நீரில் மூழ்கி சிறுவன் உயிரிழப்பு.!

நீரில் மூழ்கி சிறுவன் உயிரிழப்பு.!

by Mathavi
July 10, 2026
0

மட்டக்களப்பு, வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வாழைச்சேனை - 4 ஹைராத் ஆற்றங்கரை பகுதியில் சிறுவன் ஒருவன் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். வாழைச்சேனை - 5...

Load More
Thinakaran

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி