உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
28 வெள்ளி

காத்தான்குடி நகரசபை உறுப்பினர் கைது.!

இலங்கை செய்திகள் 2 மாதங்கள் முன்
45 பார்வைகள்

ஐக்கிய மக்கள் சக்தி (SJB) சார்பில் தேசிய பட்டியல் ஊடாக காத்தான்குடி நகரசபைக்கு நியமிக்கப்பட்ட உறுப்பினர் ஒருவர், பாலியல் துஷ்பிரயோக முயற்சி குற்றச்சாட்டின் கீழ் காத்தான்குடி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

காத்தான்குடி கடற்கரைப் பகுதியில் அமைந்துள்ள, குறித்த நகரசபை உறுப்பினருக்குச் சொந்தமான சுற்றுலாப் பயணிகள் விடுதியில் (Guest House) பணியாற்றி வந்த 21 வயதுடைய பெண் ஒருவரை, அவர் பாலியல் துஷ்பிரயோகம் செய்ய முயன்றதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இச்சம்பவத்தினால் பாதிக்கப்பட்ட பெண், காத்தான்குடி பொலிஸ் நிலையத்தின் சிறுவர் மற்றும் மகளிர் பிரிவில் முறைப்பாடு செய்துள்ளார்.

இந்த முறைப்பாட்டின் அடிப்படையில், ஆரம்பகட்ட விசாரணைக்காக பொலிஸ் நிலையத்திற்கு அழைக்கப்பட்ட நகரசபை உறுப்பினர், முதற்கட்ட விசாரணைகளின் பின்னர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.

இச்சம்பவம் குறித்து காத்தான்குடி பொலிஸார் மேலதிக விசாரணைகளை தீவிரமாக முன்னெடுத்து வருகின்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

இரணைமடு குளத்தின் நீர்மட்டம் குறைவு!

நாட்டில் ஏற்பட்டுள்ள எல்நினோ தாக்கம் காரணமாக கிளிநொச்சி மாவட்டத்தில் பிரதான நீர்ப்பாசன குளங்களில் ஒன்றான இரணைமடுக்குளம் மற்றும் ஏனைய குளங்களின் மொத்த நீர்க்கொள்ளவு 20 வீதத்தில் காணப்படுவதாக…

66 0 0
இலங்கை செய்திகள்

யாழ்ப்பாணத்தில் அதிக விலைக்கு குடிநீர்ப் போத்தலை விற்பனை செய்தவருக்கு 9.5 லட்சம் அபராதம்

நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச சில்லறை விலையை விட அதிக விலைக்கு போத்தல் குடிநீரை விற்பனை செய்த யாழ்ப்பாணத்தில் உள்ள உணவகம் ஒன்றுக்கு, யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றம் 9 இலட்சத்து…

72 0 0
இலங்கை செய்திகள்

அழகுநிலையம் ஒன்றில் இருந்து 7 கோடி ரூபாய் மதிப்பிலான போ@தைப்பொருள் மீட்பு : தம்பதியினர் கைது!

மாத்தறை ரயில் நிலைய வீதியில் அமைந்துள்ள அழகு நிலையம் ஒன்றில் வைத்து இன்று (27) சுமார் 7 கோடி ரூபாய் மதிப்பிலான ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருட்களுடன்…

75 0 0
இலங்கை செய்திகள்

சிறப்பு மருத்துவர்களுக்கென ஒரு தனிச் சேவைப் பிரிவை நிறுவுவதற்கு அமைச்சரவை ஒப்புதல்!

சிறப்பு மருத்துவர்களுக்கென ஒரு தனித்துவமான சேவைப் பிரிவை நிறுவுவதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இது குறித்துக் கருத்து தெரிவித்த சிறப்பு மருத்துவர் ஆர். ஞானசேகரம், அமைச்சரவையின் இந்த…

63 0 0