உள்ளடக்கத்திற்குச் செல்க
ஜூலை 2026
14 செவ்வாய்

யாழில் ரயிலில் பாய்ந்து உயிர் மாய்த்த குடும்பஸ்தர்.!

இலங்கை செய்திகள் 4 நாட்கள் முன்
19 பார்வைகள்

யாழில் நோயின் வீரியம் தாங்க முடியாத இளம் குடும்பஸ்தர் ஒருவர் ரயிலில் பாய்ந்து உயிர் மாய்த்துள்ளார்.

கொழும்புத்துறையை சேர்ந்த தங்கவடிவேலு பிரபாகரன் (வயது 42) என்ற மூன்று பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இது குறித்து மேலும் தெரியவருகையில்,
இவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு நீண்டகால சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

இந்நிலையில் நோயின் வீரியம் தாங்க முடியாமல் கச்சேரிக்கு முன்பாக உள்ள ரயில் கடவையடிக்கு சென்று, அநுராதபுரத்தில் இருந்து வந்த யாழ்ராணி ரயில் மீது பாய்ந்து உயிர் மாய்த்துள்ளார்.

பின்னர் அவரது சடலமானது ரயிலில் யாழ்ப்பாணம் புகையிரத நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, பின்னர் உடற்கூற்று பரிசோதனைகளுக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது.

அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.

மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல்; 200 பேரிடம் வாக்குமூலம் பதிவு.!

நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதல் சம்பவம் தொடர்பில் இதுவரையில் 200 பேரிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். இன்று (14) செவ்வாய்க்கிழமை…

56 0 0
இலங்கை செய்திகள்

கிராமிய பாலங்களை அபிவிருத்தி செய்யும் வேலைத்திட்டம் ஆரம்பித்து வைப்பு.!

நாடுபூராகவும் 1000 மில்லியன் ரூபாய் செலவில் 887 கிராமிய பாலங்கள் அபிவிருத்தி செய்யும் திட்டம் இன்று ஆரம்பிக்கப்பட்டது. அதன் ஆரம்ப நிகழ்வாக இன்றையதினம் 107 கிராமிய பாலம்…

55 0 0
இலங்கை செய்திகள்

டித்வா புயலால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு வலைகள், படகுகள் வழங்கி வைப்பு.!

டித்வா புயலினால் பாதிக்கப்பட்ட கிளிநொச்சி மீனவர்களுக்கு வலைகள் மற்றும் படகுகள் வழங்கி வைக்கப்பட்டன. நாட்டில் ஏற்பட்ட டித்வா புயலினால் கடற்றொழிலாளர்களும் பெரிதும் பாதிக்கப்பட்டனர். படகுகள், வலைகள் அழிவடைந்தன.…

40 0 0
இலங்கை செய்திகள்

சாய்ந்தமருதில் நுளம்பு கட்டுப்பாட்டு பரிசோதனை.!

சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி தலைமையில் இன்று சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் நுளம்பு கட்டுப்பாட்டு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதன்போது, நுளம்புகள் பெருகக்கூடிய இடங்கள் அடையாளம்…

28 0 0