உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
28 வெள்ளி

தாதியர்களுக்கு அவசர எச்சரிக்கை!

இலங்கை செய்திகள் 2 மாதங்கள் முன்
52 பார்வைகள்

தாதியர்களின் வருடாந்த இடமாற்றங்களை வழங்குவதாகக் கூறி, சட்டவிரோதமான முறையில் பணம் அறவிடும் மோசடி கும்பல் ஒன்று இயங்கி வருவதாக சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக விசேட அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ள அமைச்சின் செயலாளர், இவ்வாறான மோசடிக்காரர்களிடம் சிக்கி ஏமாற வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளார்.

தாதியர்களின் இடமாற்றங்கள் சட்டப்பூர்வமான வழிமுறைகளின்படி, சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சினாலோ அல்லது மாகாண சுகாதார அமைச்சுக்களினாலோ மட்டுமே மேற்கொள்ளப்படும் என அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதற்கமைய, அமைச்சின் அங்கீகாரம் பெற்ற அதிகாரி ஒருவரால் விடுக்கப்படும் எழுத்துப்பூர்வமான கோரிக்கைக்கு புறம்பாக, வேறு எந்தவொரு தரப்பினருக்கும் தாதியர்கள் தங்களின் தகவல்களை வழங்கக் கூடாது என சுகாதார அமைச்சின் செயலாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

இவ்வாறான மோசடிகள் அல்லது ஊழல்கள் தொடர்பான தகவல்கள் ஏதேனும் இருப்பின், அதனை உடனடியாக அமைச்சுக்கு அறிவிக்குமாறும் சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சின் செயலாளர் கோரியுள்ளார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

கோர விபத்து; பெண் உட்பட இருவர் உயிரிழப்பு.!

காலி, அம்பலன்வத்தை, அனகாரிக தர்மபால மாவத்தையில் நேற்று வியாழக்கிழமை முற்பகல் இடம்பெற்ற உந்துருளி மற்றும் முச்சக்கரவண்டி விபத்தில் பெண் ஒருவரும் ஆண் ஒருவரும் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். அம்பலன்வத்தையிலிருந்து…

22 0 0
இலங்கை செய்திகள்

குருக்கள்மடம் ஸ்ரீலஸ்ரீ செல்லக்கதிர்காம ஆலய தேர்த் திருவிழா.!

கிழக்கிலங்கையின் வரலாற்று சிறப்புமிக்க மட்டக்களப்பு, குருக்கள்மடம் அருள்மிகு ஸ்ரீலஸ்ரீ செல்லக்கதிர்காம ஆலயத்தின் சித்திரத் தேர்த் திருவிழா நேற்று ஆயிரக்கணக்கான அடியார்கள் புடைசூழ சிறப்பாக நடைபெற்றது. மட்டக்களப்பு மாவட்டத்தில்…

29 0 0
இலங்கை செய்திகள்

இரணைமடு குளத்தின் நீர்மட்டம் குறைவு!

நாட்டில் ஏற்பட்டுள்ள எல்நினோ தாக்கம் காரணமாக கிளிநொச்சி மாவட்டத்தில் பிரதான நீர்ப்பாசன குளங்களில் ஒன்றான இரணைமடுக்குளம் மற்றும் ஏனைய குளங்களின் மொத்த நீர்க்கொள்ளவு 20 வீதத்தில் காணப்படுவதாக…

67 0 0
இலங்கை செய்திகள்

யாழ்ப்பாணத்தில் அதிக விலைக்கு குடிநீர்ப் போத்தலை விற்பனை செய்தவருக்கு 9.5 லட்சம் அபராதம்

நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச சில்லறை விலையை விட அதிக விலைக்கு போத்தல் குடிநீரை விற்பனை செய்த யாழ்ப்பாணத்தில் உள்ள உணவகம் ஒன்றுக்கு, யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றம் 9 இலட்சத்து…

74 0 0