உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
28 வெள்ளி

சிறை மோதல் தீவிரமடைய அரசே சூழலை ஏற்படுத்தியது! 

இலங்கை செய்திகள் 2 மாதங்கள் முன்
36 பார்வைகள்

நீர்கொழும்பு சிறைச்சாலையில் முதல் நாள் இடம்பெற்ற மோதல் சம்பவத்தை அதிகாரிகள் முறையாகக் கட்டுப்படுத்தியிருந்தால், இரண்டாம் நாள் பாரிய மோதல் ஒன்று ஏற்பட்டிருக்காது. இந்த வன்முறை தீவிரமடைவதற்கான சூழலை அரசே திட்டமிட்டு ஏற்படுத்திக் கொடுத்துள்ளது” என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்‌ஷ தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற தொல்பொருளியல் கட்டளைச் சட்டத்தின் கீழான ஒழுங்குவிதிகள் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இந்தக் குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது:-

“நீர்கொழும்பு சிறைச்சாலையில் அரங்கேறியுள்ள கொடூரச் சம்பவமானது இந்த அரசின் நிர்வாகப் பலவீனத்தை மிகத் தெளிவாக வெளிப்படுத்தியுள்ளது. முதல் நாள் மோதல் வெடித்த போதே அதனை ஒடுக்கத் தவறியதால் தான் அடுத்த நாள் வன்முறை தீவிரமடைந்தது.

தற்போதைய அரச நிர்வாகக் கட்டமைப்பு முழுமையாக அரசியல்மயமாக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, அரச ஊழியர்களால் எவ்வித அழுத்தங்களுமின்றித் தனித்துவமான முறையில் சரியான தீர்மானங்களை எடுக்க முடியாத துரதிர்ஷ்டவசமான சூழல் இன்று நாட்டில் ஏற்பட்டுள்ளது.

கடந்த 2020ஆம் ஆண்டு இவ்வாறானதொரு சம்பவம் இடம்பெற்ற போது, அதற்குப் பொறுப்பேற்று சிறைச்சாலைகளுக்குப் பொறுப்பான அமைச்சர் உடனடியாகத் தனது பதவியை விலகினார். அதனைத் தொடர்ந்து சுயாதீன விசாரணைகளும் முன்னெடுக்கப்பட்டன. ஆனால் தற்போதைய அரசில் அவ்வாறான பொறுப்புக்கூறும் தன்மை எதனையும் காண முடியவில்லை.

இலங்கையில் உள்ள சிறைச்சாலைகளில் அதிகபட்சமாக 10 ஆயிரம் கைதிகளை மட்டுமே வைப்பதற்கான பௌதீக வளங்கள் மற்றும் வசதிகள் காணப்படுகின்றன. ஆனால் தற்போது போதைப்பொருள் தடுப்பு என்ற பெயரில் முறையான திட்டமிடல் இன்றி முன்னெடுக்கப்படும் கைதுகளினால், சிறைகளில் சுமார் 40 ஆயிரம் முதல் 45 ஆயிரம் பேர் வரை அடைக்கப்பட்டுள்ளனர். பௌதீகக் கொள்ளளவைத் தாண்டி இவ்வளவு அதிகமானோரைச் சிறையில் அடைக்கும் போது, அங்குள்ள நெரிசல் நிலைமையும் மன அழுத்தமும் மேலும் தீவிரமடையும். நீர்கொழும்பிலும் இதுவே வன்முறையாக வெடித்துள்ளது.” – என்றார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

நீதித்துறை, பொருளாதாரம் தொடர்பில் பேச ராஜபக்ஷக்களுக்குத் தார்மீக உரிமை இல்லை.!

அரசு சிறந்த பல திட்டங்களை முன்னெடுக்கும் போது ஊழல்வாதிகள் அனைவரும் அதற்கு எதிராக ஒன்றிணைந்துள்ளனர் என்று தெரிவித்த தொழில் பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க, நீதித்துறை சுதந்திரம்…

48 0 0
இலங்கை செய்திகள்

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் செம்மணி விவகாரம் தொடர்பில் அழுத்தம் பிரயோகிக்க வேண்டும்.!

செம்மணி மனிதப் புதைகுழி குறித்துச் சுயாதீன விசாரணைகள் நடத்தப்படுவதை உறுதி செய்வதை இலக்காகக் கொண்டு இலங்கை அரசுடன் பேச்சுகளில் ஈடுபடுவதுடன், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில்…

47 0 0
இலங்கை செய்திகள்

கோர விபத்து; பெண் உட்பட இருவர் உயிரிழப்பு.!

காலி, அம்பலன்வத்தை, அனகாரிக தர்மபால மாவத்தையில் நேற்று வியாழக்கிழமை முற்பகல் இடம்பெற்ற உந்துருளி மற்றும் முச்சக்கரவண்டி விபத்தில் பெண் ஒருவரும் ஆண் ஒருவரும் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். அம்பலன்வத்தையிலிருந்து…

28 0 0
இலங்கை செய்திகள்

குருக்கள்மடம் ஸ்ரீலஸ்ரீ செல்லக்கதிர்காம ஆலய தேர்த் திருவிழா.!

கிழக்கிலங்கையின் வரலாற்று சிறப்புமிக்க மட்டக்களப்பு, குருக்கள்மடம் அருள்மிகு ஸ்ரீலஸ்ரீ செல்லக்கதிர்காம ஆலயத்தின் சித்திரத் தேர்த் திருவிழா நேற்று ஆயிரக்கணக்கான அடியார்கள் புடைசூழ சிறப்பாக நடைபெற்றது. மட்டக்களப்பு மாவட்டத்தில்…

33 0 0