உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
28 வெள்ளி

வேறு சிறைச்சாலைகளுக்கு மாற்றப்பட்ட கைதிகள் மீது அதிகாரிகள் சித்திரவதை.!

இலங்கை செய்திகள் 2 மாதங்கள் முன்
30 பார்வைகள்

நீர்கொழும்பு சிறைச்சாலை வன்முறைச் சம்பவங்களைத் தொடர்ந்து, அங்கிருந்து நாட்டின் ஏனைய சிறைச்சாலைகளுக்கு அவசரமாக மாற்றப்பட்ட கைதிகள் மீது நடத்தப்பட்டு வரும் கொடூரத் தாக்குதல்கள் மற்றும் சித்திரவதைகளைச் சிறை அதிகாரிகள் உடனடியாக நிறுத்த வேண்டும் என்று கைதிகள் உரிமைகளைப் பாதுகாக்கும் குழு அவசர கோரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பாக அந்தக் குழுவினால் விடுக்கப்பட்டுள்ள விசேட ஊடக அறிக்கையிலேயே இந்த அதிர்ச்சித் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
“நீர்கொழும்பு சிறைச்சாலையிலிருந்து வெலிக்கடை சிறைச்சாலை உள்ளிட்ட நாட்டின் ஏனைய சிறைச்சாலைகளுக்கு மாற்றப்பட்ட கைதிகள், அங்குள்ள சிறை அதிகாரிகளால் மிகக் கொடூரமான முறையில் தாக்கப்படுவதோடு, பல்வேறு சித்திரவதைகளுக்கும் ஆளாக்கப்பட்டு வருகின்றனர் என்று எமக்கு நம்பகமான தகவல்கள் கிடைத்துள்ளன.

தடுப்புக்காவலில் உள்ள கைதிகளுக்கு எதிராக இவ்வாறான வன்முறைகளைப் பிரயோகிப்பது அவர்களின் அடிப்படை மனித உரிமைகளை முற்றாக மீறும் செயலாகும். எனவே, இந்த மனிதாபிமானமற்ற கொடூரத் தாக்குதல்களைச் சிறைச்சாலை அதிகாரிகள் எவ்வித தாமதமுமின்றி உடனடியாக நிறுத்த வேண்டும் என எமது குழு பலத்த அதிருப்தியை வெளியிடுவதுடன் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கின்றது.” – என்றுள்ளது.

கைதிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறும், இடமாற்றம் செய்யப்பட்ட கைதிகளைக் கையாளும் போது சர்வதேச மனித உரிமைத் தரநிலைகளைப் பின்பற்றி நடக்குமாறும் பொறுப்பு வாய்ந்த அனைத்து உயர் அதிகாரிகளுக்கும் கைதிகள் உரிமைகளைப் பாதுகாக்கும் குழு இந்த அறிக்கையின் ஊடாக அவசர அழைப்பு விடுத்துள்ளது.

இதேவேளை, நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட பயங்கர வன்முறை மற்றும் பதற்றமான சூழலைத் தொடர்ந்து, அங்குள்ள கைதிகளின் பாதுகாப்பு நிமித்தம் சுமார் 734 கைதிகள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள சிறைச்சாலைகளுக்கு அவசரமாகப் பிரித்து அனுப்பப்பட்டுள்ளனர் என்று நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார நாடாளுமன்றத்தில் நேற்று தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

உடலுக்குள் மறைத்து தங்கம் கடத்த முயன்றவர்களுக்கு நீதிமன்றம் வழங்கிய உத்தரவு.!

இலங்கையிலிருந்து இந்தியாவுக்கு உடலுக்குள் மறைத்துத் தங்கம் கடத்த முயன்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 11 பேரையும் எதிர்வரும் 9ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மல்லாகம் நீதிவான்…

27 0 0
இலங்கை செய்திகள்

22ஆவது திருத்தத்தால் ஊழல் வழக்குகளை விரைவுபடுத்த முடியாது.!

முன்வைக்கப்பட்டுள்ள 22ஆவது அரசமைப்பு திருத்த யோசனையின் மூலம் ஊழல் வழக்குகளை ஒருபோதும் விரைவுபடுத்த முடியாது என்றும், அரசு கூறிவரும் கருத்துக்கள் முற்றிலும் பொய் என்பது இதன் மூலம்…

30 0 0
இலங்கை செய்திகள்

அடுத்த ஒன்றரை மாதங்களில் சிறைச்சாலை நெரிசல் குறையும்.!

அரச பகுப்பாய்வாளர் திணைக்களத்தின் அறிக்கைகளை வழங்கும் நடைமுறையை விரைவுபடுத்துவதற்கு அரசு நடவடிக்கை எடுத்துள்ளதால், அடுத்த ஒரு மாதம் அல்லது ஒன்றரை மாதங்களுக்குள் சிறைச்சாலைகளின் நெரிசல் முற்றாகக் குறைக்கப்படும்…

61 0 0
இலங்கை செய்திகள்

நீதித்துறை, பொருளாதாரம் தொடர்பில் பேச ராஜபக்ஷக்களுக்குத் தார்மீக உரிமை இல்லை.!

அரசு சிறந்த பல திட்டங்களை முன்னெடுக்கும் போது ஊழல்வாதிகள் அனைவரும் அதற்கு எதிராக ஒன்றிணைந்துள்ளனர் என்று தெரிவித்த தொழில் பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க, நீதித்துறை சுதந்திரம்…

52 0 0