உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
28 வெள்ளி

நீர்கொழும்பு சிறைச்சாலை வன்முறை; யாழ். சிறைச்சாலைக்கு கைதிகள் மாற்றம்.!

இலங்கை செய்திகள் 2 மாதங்கள் முன்
25 பார்வைகள்

நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட வன்முறைச் சம்பவங்களைத் தொடர்ந்து, அங்கிருந்த கைதிகளில் 60 பேர் இன்று யாழ்ப்பாணம் சிறைச்சாலைக்குக் கொண்டு வரப்படுகின்றனர்.

நீர்கொழும்பு சிறைச்சாலையில் கடந்த இரு தினங்களாகக் கைதிகளுக்கிடையில் இடம்பெற்ற பயங்கர மோதல்களில் சிறைக் காவலர்கள் உட்பட 30 பேர் உயிரிழந்துள்ளமையுடன் 100 இற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

இந்தக் கோர சம்பவத்தையடுத்து, நீர்கொழும்பு சிறைச்சாலை அமைந்துள்ள பகுதி முழுவதும் தற்போதும் பெரும் பதற்றமான சூழல் நிலவி வருகின்றது.

இதன் காரணமாக, அங்குள்ள கைதிகளின் பாதுகாப்பைக் கருத்திற்கொண்டும், நிலைமையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் நோக்கிலும் நீர்கொழும்பு சிறையிலுள்ள கைதிகள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள சிறைச்சாலைகளுக்குப் பிரித்து அனுப்பப்பட்டு வருகின்றனர்.

இந்த அவசர இடமாற்ற நடவடிக்கையின் அடிப்படையிலேயே, பலத்த பாதுகாப்புடன் 60 கைதிகள் இன்று யாழ்ப்பாணம் சிறைச்சாலைக்குக் கொண்டு வரப்படுகின்றனர் என்று அதிகாரிகள் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

நேபாள வெள்ளப்பெருக்கை அடுத்து இலங்கைக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை.!

நேபாளம் மற்றும் திபெத் எல்லைப் பகுதியில் திடீரென ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு, அப்பகுதியில் நிலநடுக்கம் மற்றும் பனிச்சரிவு காரணமாகவே உருவாகியுள்ளது என பேராதனைப் பல்கலைக்கழகத்தின் புவியியல் துறையின் முன்னாள்…

41 0 0
இலங்கை செய்திகள்

கண்டி ஸ்ரீ தலதா மாளிகையில் வழிபாடு செய்தார் ஜனாதிபதி.!

ஸ்ரீ தலதா மாளிகையின் வருடாந்த எசல பெரஹரா விழாவை முன்னிட்டு கண்டிக்கு விஜயம் செய்துள்ள ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, நேற்று பிற்பகல் வரலாற்று சிறப்புமிக்க தலதா மாளிகைக்கு…

50 0 0
இலங்கை செய்திகள்

22ஆவது திருத்தம் குறித்து ஜனாதிபதி வெளியிட்ட கருத்துகள் முற்றிலும் தவறானவை.!

அரசமைப்பின் 22ஆவது திருத்தம் தொடர்பாக ஜனாதிபதி வெளியிட்ட கருத்துகள் முற்றிலும் தவறானவை என்றும், அவர் இந்த நாட்டின் உரிமையாளர் அல்ல, மாறாக மக்களின் பிரதிநிதி மாத்திரமே என்பதை…

45 0 0
இலங்கை செய்திகள்

உடலுக்குள் மறைத்து தங்கம் கடத்த முயன்றவர்களுக்கு நீதிமன்றம் வழங்கிய உத்தரவு.!

இலங்கையிலிருந்து இந்தியாவுக்கு உடலுக்குள் மறைத்துத் தங்கம் கடத்த முயன்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 11 பேரையும் எதிர்வரும் 9ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மல்லாகம் நீதிவான்…

39 0 0