உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
28 வெள்ளி

அநுர அரசின் பழிவாங்கல் படு தீவிரம்.!

இலங்கை செய்திகள் 2 மாதங்கள் முன்
46 பார்வைகள்

தற்போதைய ‘திசைகாட்டி’ அரசு சட்ட நடவடிக்கைகளைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்தி, எதிர்க்கட்சியினருக்கு எதிரான அரசியல் பழிவாங்கல்களைத் தீவிரப்படுத்தியுள்ளது என்று முன்னாள் ஜனாதிபதியும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவருமான மஹிந்த ராஜபக்ஷ குற்றம் சாட்டினார்.

கொழும்பில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற விசேட நிகழ்வொன்றில் கலந்துகொண்டதன் பின்னர், ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு மேலும் தெரிவித்ததாவது,
“நாட்டின் தற்போதைய பொருளாதார நெருக்கடி காரணமாகப் பொதுமக்கள் மிகக் கடுமையான முறையில் பாதிக்கப்பட்டுள்ளார்கள். வாழ்க்கைச் செலவுகள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் நாளாந்தம் கட்டுக்கடங்காமல் அதிகரித்துச் செல்கின்றன. மக்களின் இந்த அடிப்படை வாழ்வாதார நலன்கள் மற்றும் துயரங்கள் தொடர்பில் தற்போதைய அரசு எவ்வித கவனமும் செலுத்தவில்லை. மாறாக, தங்களது அரசியல் எதிரிகளைப் பழிவாங்குவதற்கு மாத்திரமே முழு அரச கட்டமைப்பையும் பயன்படுத்தி, அதற்கு முன்னுரிமை அளித்து வருகின்றது.

இவ்வாறான சட்ட நடவடிக்கைகள் மற்றும் அதிகாரப் பிரயோகங்கள் ஊடாக அரசு முன்னெடுத்து வரும் அரசியல் பழிவாங்கல்களை முறியடிப்பதற்கு, நாட்டில் உள்ள சகல எதிர்க்கட்சிகளும் தங்களுக்குள் இருக்கும் முரண்பாடுகளை மறந்து, தற்போதைய சூழலில் ஒன்றிணைந்து செயற்பட வேண்டியது அவசியமாகும். அவ்வாறு எதிர்க்கட்சிகள் அனைத்தும் கைகோர்த்தால் நாடாளுமன்றத்திலும், மக்கள் மத்தியிலும் தற்போது மிக பலமான சக்தியாக உருவெடுக்க முடியும்.

நான் அரசியலில் இருந்து ஓய்வுபெறப் போவதாக வெளியாகும் தகவல்களில் எவ்வித உண்மையும் இல்லை. தற்போதைய சூழலில் எனக்கு அரசியலில் இருந்து ஓய்வுபெற வேண்டிய எவ்வித அவசியமும் கிடையாது. ஏனெனில், மக்களுக்காக முன்னெடுக்கப்படும் உன்னதமான அரசியல் சேவையில் ‘ஓய்வு’ என்ற வார்த்தைக்கே இடமில்லை. ஒரு கட்சி என்ற அடிப்படையில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன இன்னும் நாடெங்கிலும் பலமாகவே உள்ளது.

எனவே, அரசியல் பழிவாங்கல்களுக்காக மாத்திரம் முழு அரச இயந்திரத்தையும் வீணடிப்பதைக் கைவிட்டு, மக்களின் அன்றாட அடிப்படைப் பிரச்சினைகளுக்கும், பொருளாதார நெருக்கடிகளுக்கும் தீர்வு காண்பதற்கு அரசு உடனடியாகக் கவனம் செலுத்த வேண்டும்.” – என்றார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

விவசாயத்துக்கான ஊக்குவிப்பு உரமானியம் வழங்கும் நிகழ்வு.!

ஜனநாயக தேசிய கூட்டணி தலைவர் பிரபாகணேஷன் வழிகாட்டலில் மடக்கும்புற பகுதியில் சிறுபோகத்துக்கான விவசாயத்துக்கான ஊக்குவிப்பு உரமானியம் வழங்கும் திட்டமும் வறுமை கோட்பாட்டின் கீழ் காணப்படும் பாடசாலை மாணவர்களுக்கு…

34 0 0
இலங்கை செய்திகள்

நேபாள வெளிவிவகார அமைச்சருடன் விஜித ஹேரத் தொலைபேசியில் உரையாடல்.!

நேபாளத்தில் ஏற்பட்டுள்ள பேரழிவுமிக்க வெள்ளப்பெருக்கைத் தொடர்ந்து, அந்நாட்டு வெளிவிவகார அமைச்சர் ஷிசிர் கனாலுடன் இலங்கை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தொலைபேசி உரையாடலை மேற்கொண்டுள்ளார். நேபாளத்தில் நிலவும்…

60 0 0
இலங்கை செய்திகள்

மல்வத்து, அஸ்கிரி மகாநாயக்க தேரர்களை சந்தித்து ஆசி பெற்ற ஜனாதிபதி அநுரகுமார.!

கண்டி வரலாற்றுச் சிறப்புமிக்க ஸ்ரீ தலதா மாளிகையின் வருடாந்த எசல பெரஹரா விழாவில் கலந்துகொள்வதற்காக கண்டிக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, நேற்று வியாழக்கிழமை மல்வத்து…

57 0 0
இலங்கை செய்திகள்

22ஆவது திருத்த விவகாரம்; நீதிமன்றத்துக்கு அப்பால் செயற்பட அரசு தயார்.!

அரசமைப்பின் 22ஆவது திருத்தம் தொடர்பில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க வெளியிட்டுள்ள நிலைப்பாடு முற்றிலும் தவறானது என்றும், ஒருசில குறுகிய தரப்பினரது எதிர்ப்புகளுக்காக இத்தீர்மானத்தை மீளப்பெறப் போவதில்லை என…

60 0 0