உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
28 வெள்ளி

மன்னாரில் திருடப்பட்டு முச்சக்கர வண்டியில் கடத்திச் செல்லப்பட்ட இரண்டு மாடுகள் மீட்பு!

இலங்கை செய்திகள் 2 மாதங்கள் முன்
36 பார்வைகள்


மன்னார் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மன்னார் தாராபுரம் பிரதான வீதி பகுதியில் வைத்து முச்சக்கர வண்டியில் சட்ட விரோதமான முறையில் கொண்டு கொண்டு செல்லப்பட்ட இரண்டு மாடுகளை மன்னார் பொலிஸார் இன்று சனிக்கிழமை (4) காலை  மீட்டுள்ளனர்.

குறித்த இரண்டு மாடுகளும் திருடப்பட்டு சட்ட விரோதமான முறையில் கொண்டு செல்லப்பட்ட நிலையிலே மன்னார் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் பணிப்புரைக்கு அமைவாக உப பொலிஸ் பரிசோதகர் தலைமையிலான பொலிஸ் குழுவினர் இணைந்து குறித்த நடவடிக்கையை மேற்கொண்டனர்.

இதன் போது சட்ட விரோதமான முறையில் கொண்டு செல்லப்பட்ட இரண்டு மாடுகளை பொலிஸார் மீட்டுள்ளதோடு    குறித்த மாடுகளை முச்சக்கர வண்டியில் ஏற்றி வந்த  நபரும் கைது செய்யப்பட்டுள்ளார்

கைது செய்யப்பட்ட நபர் மன்னார் எமில் நகர் பகுதியை சேர்ந்த 34  வயதுடையவர் என்றும்  மன்னாரில்  பொலிஸ் கொஸ்தபலாக கடமையாற்றி தற்காலிகமாக பதவியில் இருந்து இடை நிறுத்தப்பட்டவர் என்று தெரிய வருகிறது.

மேலும் அவருக்கு உதவியவர்கள் என்ற அடிப்படையில் மேலும் இருவரை போலீசார் தேடி வருகின்றனர்.

கைது செய்யப்பட்ட    குறித்த நபர்   மன்னார் பொலிஸ் நிலையத்தில் தடுத்துவைக்கப்பட்டு விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர்.மேலதிக விசாரணைகளை மன்னார் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் ஏற்பட்ட வைத்தியர் பற்றாக்குறைக்கு தீர்வு.!

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு புதிதாக நியமிக்கப்பட்ட 8 உள்ளக பயிற்சி மருத்துவ அதிகாரிகள் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை (28) வைத்தியசாலைக்கு வருகை தந்த நிலையில், குறித்த…

40 0 0
இலங்கை செய்திகள்

மூத்த நடிகை லீலா ரஞ்சனி அவர்களுக்கு பொற்கிழி வழங்கி கௌரவிப்பு.!

இலங்கையின் நாடக மற்றும் திரைப்படத் துறையில் பல தசாப்தங்களாகத் தடம் பதித்து வரும் மூத்த நடிகை லீலா ரஞ்சனி அவர்களின் நீண்டகால கலைச் சேவையினைப் பாராட்டி, நடிகரும்…

43 0 0
இலங்கை செய்திகள்

முதலீடுகளை நடைமுறைப்படுத்தும் போது ஏற்படும் சவால்களை சரி செய்ய வேண்டும்.!

முதலீட்டாளர்கள் வடக்கு மாகாணத்தில் தமது முதலீடுகளை இலகுவாகவும் விரைவாகவும் மேற்கொள்வதற்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ஒருவழி முதலீட்டு நுழைவாயில் (One-Stop Investment Portal) எதிர்பார்த்த பயனை முழுமையாக வழங்கும் வகையில்…

34 0 0
இலங்கை செய்திகள்

விவசாயத்துக்கான ஊக்குவிப்பு உரமானியம் வழங்கும் நிகழ்வு.!

ஜனநாயக தேசிய கூட்டணி தலைவர் பிரபாகணேஷன் வழிகாட்டலில் மடக்கும்புற பகுதியில் சிறுபோகத்துக்கான விவசாயத்துக்கான ஊக்குவிப்பு உரமானியம் வழங்கும் திட்டமும் வறுமை கோட்பாட்டின் கீழ் காணப்படும் பாடசாலை மாணவர்களுக்கு…

42 0 0