உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
28 வெள்ளி

திடீரென பற்றியெரிந்த மானிப்பாய் பிரதேச சபையின் குப்பை மேட்டால் பதற்றம்!

இலங்கை செய்திகள் 2 மாதங்கள் முன்
52 பார்வைகள்



மானிப்பாய் பிரதேச சபையின் குப்பை மேடானது நேற்றிரவு திடீரென பற்றியெரிந்ததால் அங்கு பதற்றமான நிலைமை ஏற்பட்டது.

இது குறித்து மேலும் தெரியவருகையில்,

மானிப்பாய் பிரதேச சபையின் கழிவு சேகரிப்பு மற்றும் இயற்கை உரம் தயாரிப்பு நிலையமானது கல்லூண்டாய் குடியேற்றத்திட்டத்திற்கு அண்மையில் அமைந்துள்ளது. அந்த குப்பை மேட்டில் திடீரென நேற்றிரவு தீ பற்றியது.

இதன்போது தீயணைப்பு வாகனங்கள் என்பன பயன்படுத்தி தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.

குறித்த குப்பை மேட்டில் கடந்த காலங்களில் எந்தவிதமான தீ விபத்துகளும் ஏற்படவில்லை. கடந்த காலங்களில் சீரான தரம்பிரித்தல் மற்றும் பாதுக்காப்பு முறை காரணமாக இவ்வாறு தீபத்து ஏற்படவில்லை எனவும், தற்போது சீரான முறையில் கழிவுப் பொருட்கள் தரம்பிரிப்பு இடம்பெறாத காரணத்தாலேயே இவ்வாறு தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என மக்கள் தெரிவிக்கின்றனர்.

குறித்த குப்பை மேடானது தமது குடியிருப்புக்கு அண்மையில் காணப்படுவதாலும், பிரதேச சபையினர் தற்போது அதனை சீராக பராமரிக்காத காரணத்தாலும் தாங்கள் தினமும் பல்வேறு இன்னல்களை எதிர்கொள்வதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் ஏற்பட்ட வைத்தியர் பற்றாக்குறைக்கு தீர்வு.!

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு புதிதாக நியமிக்கப்பட்ட 8 உள்ளக பயிற்சி மருத்துவ அதிகாரிகள் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை (28) வைத்தியசாலைக்கு வருகை தந்த நிலையில், குறித்த…

39 0 0
இலங்கை செய்திகள்

மூத்த நடிகை லீலா ரஞ்சனி அவர்களுக்கு பொற்கிழி வழங்கி கௌரவிப்பு.!

இலங்கையின் நாடக மற்றும் திரைப்படத் துறையில் பல தசாப்தங்களாகத் தடம் பதித்து வரும் மூத்த நடிகை லீலா ரஞ்சனி அவர்களின் நீண்டகால கலைச் சேவையினைப் பாராட்டி, நடிகரும்…

42 0 0
இலங்கை செய்திகள்

முதலீடுகளை நடைமுறைப்படுத்தும் போது ஏற்படும் சவால்களை சரி செய்ய வேண்டும்.!

முதலீட்டாளர்கள் வடக்கு மாகாணத்தில் தமது முதலீடுகளை இலகுவாகவும் விரைவாகவும் மேற்கொள்வதற்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ஒருவழி முதலீட்டு நுழைவாயில் (One-Stop Investment Portal) எதிர்பார்த்த பயனை முழுமையாக வழங்கும் வகையில்…

34 0 0
இலங்கை செய்திகள்

விவசாயத்துக்கான ஊக்குவிப்பு உரமானியம் வழங்கும் நிகழ்வு.!

ஜனநாயக தேசிய கூட்டணி தலைவர் பிரபாகணேஷன் வழிகாட்டலில் மடக்கும்புற பகுதியில் சிறுபோகத்துக்கான விவசாயத்துக்கான ஊக்குவிப்பு உரமானியம் வழங்கும் திட்டமும் வறுமை கோட்பாட்டின் கீழ் காணப்படும் பாடசாலை மாணவர்களுக்கு…

42 0 0