• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Wednesday, July 1, 2026
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home இலங்கை செய்திகள்.

இலங்கையிலேயே மிகச் சிறப்பாக செயற்படும் வட மாகாண சிறுவர் நன்னடத்தை அதிகாரிகள்.!

Mathavi by Mathavi
July 1, 2026
in இலங்கை செய்திகள்.
0
இலங்கையிலேயே மிகச் சிறப்பாக செயற்படும் வட மாகாண சிறுவர் நன்னடத்தை அதிகாரிகள்.!
Share on FacebookShare on Twitter

“இலங்கையிலேயே வடக்கு மாகாண சிறுவர் நன்னடத்தை உத்தியோகத்தர்கள் மிகவும் சிறப்பாகச் செயற்படுகின்றார்கள். ஏனைய மாகாணங்களில் நடைபெறும் கலந்துரையாடல்களின் போது, இவர்களது சேவையையே நாம் முன்னுதாரணமாகச் சுட்டிக்காட்டுகின்றோம்.” – என்று மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் பெருமிதத்துடன் தெரிவித்தார்.

வடக்கு மாகாண நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்புச் சேவைகள் திணைக்கள அதிகாரிகளுடனான விசேட கலந்துரையாடல், ஆளுநர் செயலகத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இந்தக் கலந்துரையாடலின் போது, வடக்கு மாகாண சிறுவர் நன்னடத்தை உத்தியோகத்தர்கள் களமட்டத்தில் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்து மாகாண நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்புச் சேவைகள் திணைக்களத்தின் ஆணையாளர் திருமதி சுஜீவா சிவதாஸ் அமைச்சருக்கு விரிவாக விளக்கமளித்தார். குறிப்பாக, சிறுவர் பராமரிப்புத் தொடர்பில் காணப்படும் சட்ட ஏற்பாடுகளின் போதாமைகள் சுட்டிக்காட்டப்பட்டன.

போதைப்பொருளுக்கு அடிமையான சிறுவர்களுக்கென பிரத்தியேக புனர்வாழ்வு மையம் வடக்கு மாகாணத்தில் இல்லாமையால், அவர்களைச் சான்றுபெற்ற பாடசாலைகளில் இணைக்கும் போது பல்வேறு நடைமுறைச் சிக்கல்கள் எழுகின்றன என்று அவர் சுட்டிக்காட்டினார். அத்துடன், உளநலத் தேவைப்பாடுடைய சிறுவர்களைப் பராமரிப்பதற்கென அரச சிறுவர் இல்லங்கள் இன்மையால் நன்னடத்தை உத்தியோகத்தர்கள் எதிர்கொள்ளும் நெருக்கடிகள் குறித்தும் அமைச்சரின் கவனத்துக்குக் கொண்டுவரப்பட்டது.

இதன்போது கருத்துத் தெரிவித்த அமைச்சர், கைவிடப்பட்ட சிறுவர்களை அரவணைத்து வளர்த்தெடுக்கும் இப்பணியானது வெறும் தொழில் அல்ல, அது ஒரு மாபெரும் சமூகச் சேவை என்ற உணர்வோடு முன்னெடுக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார்.

சட்ட ரீதியான திருத்தங்கள் தேவைப்படும் விடயங்கள் தொடர்பில், 9 மாகாணங்களும் ஒன்றிணைந்து ஆவண ரீதியாக முன்மொழிவுகளைச் சமர்ப்பிக்குமாறும், அதன் அடிப்படையில் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இதுகாலவரையில் வடக்கு மாகாண உத்தியோகத்தர்களுக்கு வெளிநாட்டுப் பயிற்சிகளுக்கான வாய்ப்புகள் போதியளவு வழங்கப்படாமை குறித்துக் கவலை வெளியிட்ட அவர், இனிவரும் காலங்களில் இவர்களுக்கும் அத்தகைய பயிற்சிகளுக்கான வாய்ப்புகள் பெற்றுக்கொடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

சிறுவர்களுக்கான போதைப்பொருள் புனர்வாழ்வு மையம் மற்றும் உளநலத் தேவைப்பாடுகள் தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்படும் என்றும் அவர் உறுதியளித்தார்.

சிறுவர் இல்லங்களிலிருந்து வெளியேறும் இளைஞர், யுவதிகளுக்கான வீட்டுத் திட்டங்கள் தொடர்பிலும் அமைச்சர் இதன்போது சில முக்கிய ஆலோசனைகளை வழங்கினார்.

இந்த நிகழ்வில், வடக்கு மாகாண சிறுவர் நன்னடத்தை மற்றும் பாதுகாவல் திணைக்களத்தின் புள்ளிவிவரக் கையேடும், திணைக்களத்தின் சிறுவர் நன்னடத்தை உத்தியோகத்தரால் முதன்முறையாகத் தமிழ்மொழியில் தயாரிக்கப்பட்ட ‘நன்னடத்தை உத்தியோகத்தர்களுக்கான கையேடும்’ அமைச்சர் உள்ளிட்ட அதிதிகளுக்கு உத்தியோகபூர்வமாக வழங்கி வைக்கப்பட்டன.

இந்த உயர்மட்டக் கலந்துரையாடலில் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இ.சந்திரசேகர், நாடாளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன், வடக்கு மாகாண பிரதம செயலாளர், வடக்கு மாகாண ஆளுநரின் செயலாளர், வடக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் உள்ளிட்ட உயர்மட்ட அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.

Related Posts

வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச சபை தவிசாளர், செயலாளர் மீது தேசிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் குற்றச்சாட்டு.!

வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச சபை தவிசாளர், செயலாளர் மீது தேசிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் குற்றச்சாட்டு.!

by Mathavi
July 1, 2026
0

வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச சபையில் ஊடக அடக்குமுறைகள் தொடர்வதாகவும், இதற்கு சபையின் தவிசாளர் மற்றும் செயலாளரே முழுமையான காரணம் என்று தேசிய மக்கள் சக்தியின் (NPP)...

அம்பாறை மாவட்ட அபிவிருத்தி குழுக் கூட்டம்.!

அம்பாறை மாவட்ட அபிவிருத்தி குழுக் கூட்டம்.!

by Mathavi
July 1, 2026
0

நாவிதன்வெளி பிரதேசத்தின் நீண்டகால வீதிப் பிரச்சினை மற்றும் பேருந்து நிலையப் பற்றாக்குறை ஆகியவற்றுக்கு இவ்வருட இறுதிக்குள் தீர்வு காண அம்பாறை மாவட்ட அபிவிருத்தி குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது....

யானை தாக்கி குடும்பஸ்தர் படுகாயம்.!

யானை தாக்கி குடும்பஸ்தர் படுகாயம்.!

by Mathavi
July 1, 2026
0

யானை தாக்கி படுகாயமடைந்த நிலையில் மீட்கப்பட்ட குடும்பஸ்தர் மேலதிக சிகிச்சைக்காக அம்பாறை பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். அம்பாறை மாவட்டம் வளத்தாப்பிட்டி - புத்தங்கல எல்லைப் பகுதியில்...

ஊடகங்களை அடக்குகிறோம் என்பது அப்பட்டமான பொய்.!

ஊடகங்களை அடக்குகிறோம் என்பது அப்பட்டமான பொய்.!

by Mathavi
July 1, 2026
0

"நாம் ஊடகங்களை அடக்குவதாக தேசிய மக்கள் சக்தியின் பிரதிநிதிகள் திட்டமிட்டு போலியான தகவல்களைப் பரப்பி வருகின்றனர்" என வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச சபையின் உப தவிசாளர்...

பெண்களைத் துன்புறுத்துபவர்களின் முகத்திரைகளைக் கிழித்தெறிவோம்.!

பெண்களைத் துன்புறுத்துபவர்களின் முகத்திரைகளைக் கிழித்தெறிவோம்.!

by Mathavi
July 1, 2026
0

வடக்கு மாகாண சபை மகளிர் விவகாரம், புனர்வாழ்வளித்தல், சமூக சேவைகள், கூட்டுறவு, உணவு வழங்கலும் விநியோகமும், தொழிற்துறையும் தொழில் முனைவோர் மேம்பாடும் மற்றும் வர்த்தகமும் வாணிபமும் அமைச்சின்...

என் பக்கமிருந்த தவறை ஒப்புக்கொள்கிறேன்; நாட்டு மக்களிடம் மன்னிப்புக் கேட்கின்றேன்.!

என் பக்கமிருந்த தவறை ஒப்புக்கொள்கிறேன்; நாட்டு மக்களிடம் மன்னிப்புக் கேட்கின்றேன்.!

by Mathavi
July 1, 2026
0

'மிஸ்டர் கொத்து' நிறுவனத்தின் உரிமையாளரான விராஜ் விக்கிரமநாயக்க, மகரகம பொலிஸாரால் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார் என அவரது தரப்பு சட்டத்தரணி ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார். இந்த...

கைது செய்யச் சென்ற பொலிஸ் அதிகாரிகள் மீது தாக்குதல்; சந்தேகநபர் தப்பியோட்டம்.!

கைது செய்யச் சென்ற பொலிஸ் அதிகாரிகள் மீது தாக்குதல்; சந்தேகநபர் தப்பியோட்டம்.!

by Mathavi
July 1, 2026
0

எல்பிட்டிய பகுதியில் குற்றச்செயல்களுடன் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவரைக் கைது செய்யச் சென்ற பொலிஸ் அதிகாரிகள் மீது கூர்மையான ஆயுதத்தால் தாக்குதல் நடத்தி, கைவிலங்குடன் சந்தேக நபர்...

வளர்ப்பு யானை தாக்கி ஒருவர் உயிரிழப்பு.!

வளர்ப்பு யானை தாக்கி ஒருவர் உயிரிழப்பு.!

by Mathavi
July 1, 2026
0

குண்டசாலை பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட மெணிக்ஹின்ன பகுதியில், "முது" என்ற வளர்ப்பு யானை தாக்கியதில் 61 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்று செவ்வாய்க்கிழமை (30) இரவு...

கொழும்பு இராமநாதன் கல்லூரி மாணவியின் உயிரிழப்பு; ஒரு வருடமாகியும் முடியாத விசாரணை.!

கொழும்பு இராமநாதன் கல்லூரி மாணவியின் உயிரிழப்பு; ஒரு வருடமாகியும் முடியாத விசாரணை.!

by Mathavi
July 1, 2026
0

இலங்கையில் அண்மைக் காலமாக சிறுவர்கள் மற்றும் பெண்களுக்கு எதிரான வன்முறைகளும் துஷ்பிரயோகங்களும் அதிகரித்து வரும் நிலையில், அது தொடர்பான நீதிமன்ற விசாரணைகளில் நிலவும் மந்தகதி மற்றும் தாமதங்கள்...

வெவ்வேறு இடங்களில் கோடாவுடனும் மதுபானத்துடனும் மூவர் சிக்கினர்.!

வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் சீனப் பிரஜைகள் கைது.!

by Mathavi
July 1, 2026
0

கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் சுமார் 10.8 மில்லியன் ரூபாய் பெறுமதியுள்ள வெளிநாட்டு சிகரெட்டுகளை நாட்டுக்குள் சட்டவிரோதமாகக் கடத்த முயன்ற நான்கு சீனப் பிரஜைகள் சுங்க...

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Thinakaran

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி