உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
23 திங்கள்
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

வவுனியா மாநகர சபையின் முதல்வர்  வடக்கு மாகாண ஆளுநரால் பதவி நீக்கம்!

இலங்கை செய்திகள் 5 மாதங்கள் முன்
70 பார்வைகள்

வவுனியா மாநகர சபையின் மேயர் சு.காண்டீபன் மற்றும் சாவகச்சேரி நகர சபையின் உப தவிசாளர் ஞா.கிசோர் ஆகியோர் தங்களது பதவிகளில் இருந்து உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் அதிரடியாகப் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனினால் இதற்கான உத்தியோகபூர்வ உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மேற்படி இரு உள்ளூராட்சி மன்றப் பிரதிநிதிகளினதும் நடத்தை மற்றும் நிர்வாகச் செயற்பாடுகள் தொடர்பாகப் பல்வேறு தரப்பினராலும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டிருந்தன.

இது குறித்து முறையான விசாரணைகளை முன்னெடுப்பதற்காக, ஓய்வுபெற்ற நீதிபதி ஒருவரின் தலைமையில் விசேட விசாரணை ஆணைக்குழு ஒன்றை வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் நியமித்திருந்தார்.

அதன்படி, குறித்த விசாரணை ஆணைக்குழுவினால் முன்னெடுக்கப்பட்ட தீர்க்கமான விசாரணைகளின் இறுதி அறிக்கை மற்றும் அதில் உள்ளடக்கப்பட்டுள்ள முக்கிய பரிந்துரைகளுக்கு அமைவாகவே, இவர்கள் இருவரும் பதவிகளில் இருந்தும், உறுப்பினர் நிலைகளில் இருந்தும் நீக்கப்பட்டுள்ளனர்.

வவுனியா மாநகர சபையின் மேயர் சு.காண்டீபன் மற்றும் சாவகச்சேரி நகர சபையின் உப தவிசாளர் ஞா.கிசோர் ஆகியோரது பதவி நீக்கம் தொடர்பான ஆளுநரின் விசேட கட்டளைகள் அடங்கிய உத்தியோகபூர்வ வர்த்தமானி அறிவித்தலும் வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஆளுநரின் இந்த அதிரடி நடவடிக்கை வடக்கு மாகாண உள்ளூராட்சி அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

தாய்லாந்துக்கு விஜயம் செய்யுமாறு ஜனாதிபதி அனுரகுமார திஸ்ஸநாயக்கவிற்கு அழைப்பு

எதிர்வரும் காலத்தில் தாய்லாந்திற்கு உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொள்ளுமாறு, தாய்லாந்து துணைப் பிரதமரும் வெளிவிவகார அமைச்சருமான சிஹாசக் ஃபுவாங்கேட்கியோ (Sihasak Phuangketkeow), ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்கு…

66 0 0
இலங்கை செய்திகள்

தொழிற்சங்க நடவடிக்கை தோல்வி – மஹிந்த ஜயசிங்க!

வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக இடைக்காலக் கொடுப்பனவு ஒன்றை வழங்குமாறு கோரி இன்று (23) நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்ட தொழிற்சங்க நடவடிக்கை தோல்வியடைந்துள்ளதாக தொழில் பிரதி அமைச்சர்…

104 0 0
இலங்கை செய்திகள்

அமெரிக்காவுக்கான இலங்கைத் தூதுவராக அருணி ரணராஜா நியமனம்!

வெளிவிவகார அமைச்சின் செயலாளர் அருணி ரணராஜா, அமெரிக்காவிற்கான இலங்கைத் தூதுவராக நியமிக்கப்படவுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். அமைச்சர் விஜித ஹேரத் இன்று (23) இடம்பெற்ற…

103 0 0
இலங்கை செய்திகள்

தேசிய நலன்களை முன்னிறுத்தும் வெளிநாட்டுக் கொள்கையை பின்பற்ற வேண்டும் – சஜித் வலியுறுத்தல்

பாரம்பரிய அணிசேரா கொள்கையிலிருந்து விடுபட்டு, நாட்டின் தேசிய நலன்களை முன்னேற்றும் வகையில் அனைத்து நாடுகளுடனும் ‘நேர்மறையான இணக்கப்பாடுகளை’ அடிப்படையாகக் கொண்ட வெளிநாட்டுக் கொள்கையை இலங்கை பின்பற்ற வேண்டும்…

107 0 0