உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
29 சனி

இராணுவ நடவடிக்கையால் மட்டுமே இந்தியா கச்சத்தீவை மீட்க முடியும்!

இலங்கை செய்திகள் 2 மாதங்கள் முன்
36 பார்வைகள்

கச்சத்தீவின் இறையாண்மை என்பது சர்வதேச சட்டம் மற்றும் இருதரப்பு ஒப்பந்தங்களின்படி ஏற்கனவே தீர்க்கப்பட்ட ஒரு விவகாரம் என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

தமிழகத்துக்கு நல்லெண்ண விஜயம் மேற்கொண்டுள்ள அவர், சென்னையில் ஊடகவியலாளர்களைச் சந்தித்த போதே இதனைச் சுட்டிக்காட்டியதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

தமிழக மீனவர்கள் எதிர்கொள்ளும் எல்லைத் தாண்டும் பிரச்சினைகளுக்கு உடனடித் தீர்வாக கச்சத்தீவு விவகாரத்தைக் கையில் எடுப்பது புத்திசாலித்தனமான அணுகுமுறை அல்ல என்றும் அவர் இதன்போது குறிப்பிட்டார்.

கச்சத்தீவை மீண்டும் இந்தியாவிடம் ஒப்படைப்பதன் மூலம் மீனவர் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியுமா என ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், சர்வதேச சட்டக் கட்டமைப்புகளின் அடிப்படையில் கச்சத்தீவின் மீதான இலங்கையின் இறையாண்மையை இந்திய மத்திய அரசு எப்போதோ ஏற்றுக்கொண்டுள்ளது என்றார்.

இதனை சர்வதேச சட்டங்களுக்குப் புறம்பாக மாற்றியமைக்க வேண்டுமெனில் இராணுவ நடவடிக்கை மூலம் மட்டுமே சாத்தியம் என்றும், ஆனால் இந்திய அரசு ஒருபோதும் அத்தகைய பாதையைத் தேர்ந்தெடுக்காது என்றும் அவர் விளக்கமளித்தார்.

அத்துடன், கச்சத்தீவு அந்தோணியார் தேவாலய திருவிழாவுக்குச் செல்லும் இந்திய பக்தர்களுக்கு இலங்கை கடற்படை எவ்வித தடையும் விதிப்பதில்லை என்றும், எல்லையைத் தாண்டி சட்டவிரோத கடற்றொழிலில் ஈடுபடும்போதே அது பெரும் நெருக்கடியாக மாறுகிறது என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் மேலும் கூறினார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இந்திய செய்திகள்

சீமானுக்கு ஆதரவாகக் களம் இறங்கிய விஜயலட்சுமி!

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தொடர்பாக நடிகை விஜயலட்சுமி புதிய காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளார். முன்னதாக, சீமான் தன்னை ஏமாற்றிவிட்டதாக நடிகை விஜயலட்சுமி அளித்திருந்த…

72 0 0
இந்திய செய்திகள்

குழந்தைகளைத் தேர்தல் பிரசாரத்தில் பயன்படுத்தவில்லை – உயர்நீதிமன்றத்தில் தவெக விளக்கம்!

தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்யின் தேர்தல் வெற்றியை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள தேர்தல் வழக்கில், குழந்தைகளைத் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் தவறானவை என விஜய்…

40 0 0
இந்திய செய்திகள்

தவெக கூட்டணிக்குள் உட்கட்சிப்பூசல்?

தமிழகத்தில் ஆட்சி அமைத்துள்ள தமிழக வெற்றிக்கழக கட்சியை ‘தேசிய வெற்றி கழகம்’ என மாற்றி 2029 நாடாளுமன்றத் தேர்தலில் தவெக தலைவர் விஜய்யைப் பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தத்…

92 0 0
இந்திய செய்திகள்

திருமாவளவனின் அறிவிப்பு : கண்டுகொள்ளாத விஜய்!

உளுந்தூர்பேட்டையில் நடைபெற்ற விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநாட்டில், தொல். திருமாவளவன் வெளியிட்ட அறிவிப்புக்கு விஜய் பதில் கூறாமை தமிழக அரசியலில் பேசு பொருளாகியுள்ளது. தமிழக வெற்றிக்கழகத்துடன் தொடர்ந்து…

65 0 0