சட்டவிரோத மதுபானத்துடன் ஒருவர் கைது.!
ராகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பொடிவீகும்பூர பகுதியில், நேற்று திங்கட்கிழமை வலான மத்திய ஊழல் ஒழிப்புப் படையினரால் நடத்தப்பட்ட முற்றுகையின் போது, பெருந்தொகையான சட்டவிரோத மதுபானத்துடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டவர் 59 வயதுடைய ஹெந்தல பகுதியைச் சேர்ந்தவர் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதன்போது, 450 லீற்றர் சட்டவிரோத மதுபானம் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், சந்தேகநபர் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக ராகம பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
ராகம பொலிஸார் இது தொடர்பான மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.