உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
29 சனி

மசாஜ் நிலையம் என்ற போர்வையில் இயங்கி வந்த விபச்சார விடுதி; மூவர் கைது.!

இலங்கை செய்திகள் 2 மாதங்கள் முன்
23 பார்வைகள்

நீர்கொழும்பு பகுதியில் மசாஜ் நிலையம் என்ற போர்வையில் நடத்தப்பட்டு வந்த விபச்சார விடுதி ஒன்றை வலான மத்திய ஊழல் ஒழிப்புப் படையினர் முற்றுகையிட்டு, மூன்று சந்தேகநபர்களைக் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட பெண்கள் 31, 35 மற்றும் 40 வயதுடைய வாரியப்பொல, பூஸ்ஸ மற்றும் மத்துகம ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

நேற்று திங்கட்கிழமை (15) நீர்கொழும்பு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொப்பரா சந்தி பகுதியில், வலான மத்திய ஊழல் ஒழிப்பு அதிரடிப்படை அதிகாரிகளுக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் பேரில் இந்த முற்றுகை நடத்தப்பட்டது.

இதன்போது, குறித்த விடுதியை முகாமைத்துவம் செய்த பெண் ஒருவரும், விபச்சாரத்தில் ஈடுபடுவதற்காக அங்கு தங்கியிருந்த மேலும் இரண்டு பெண்களும் கைது செய்யப்பட்டு, மேலதிக நடவடிக்கைகளுக்காக நீர்கொழும்பு பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

நீர்கொழும்பு பொலிஸார் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

தொடர்ச்சியாக அபிவிருத்தி உத்தியோகத்தர்களை ஏமாற்றி வரும் அரசு.!

சில மாதங்களுக்கு முன்பு, நமது நாட்டின் அரச துறையில் சிறந்த பங்களிப்பை வழங்கி வரும் 150,000 அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் 14,008 பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் தொடர்பில்…

47 0 0
இலங்கை செய்திகள்

மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொ*லை செய்த கணவன்.!

அநுராதபுரம், கொரகஹவெவ பிரதேசத்திலுள்ள காட்டுப் பகுதியில் கணவன் ஒருவர் தனது மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்துவிட்டு, அதே ஆயுதத்தால் தன்னையும் குத்திக்கொண்டு உயிரை மாய்க்க…

27 0 0
இலங்கை செய்திகள்

கண்டி தலதா பெரஹராவை கண்டுகளித்தார் ஜனாதிபதி.!

கண்டி வரலாற்றுச் சிறப்புமிக்க ஸ்ரீ தலதா மாளிகையின் வருடாந்த எசல பெரஹரா விழாவின் இறுதி மகா ரந்தோலி பெரஹரா நேற்று முன்தினம் இரவு வீதி உலா வந்த…

45 0 0
இலங்கை செய்திகள்

காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட பேரணிக்கு யாழ். பல்கலை மாணவர் ஒன்றியம் ஆதரவு.!

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தினை முன்னிட்டு, எதிர்வரும் 30ஆம் திகதி வடக்கு, கிழக்கு இணைந்த வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தினால் யாழ்ப்பாணத்திலே “நீதிக்கான நீள் பயணம்” என்று…

64 0 0