உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
29 சனி

யோஷித ராஜபக்ஷவின் சீராய்வு மனு நாளை விசாரணைக்கு!

இலங்கை செய்திகள் 2 மாதங்கள் முன்
31 பார்வைகள்

பணச்சலவை தடுப்புச் சட்டத்தின் கீழ் தனக்கு எதிராகத் தொடரப்பட்டுள்ள வழக்கில், “சதித்திட்டம்” என்ற குற்றச்சாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல முடியாது என உத்தரவிடுமாறு கோரி யோஷித ராஜபக்ஷ தாக்கல் செய்த சீராய்வு மனுவை நாளை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதன்படி, அமல் ரணராஜா மற்றும் சுமுது பிரேமச்சந்திர ஆகியோரடங்கிய நீதியரசர்கள் ஆயத்தின் முன்னிலையில் இந்த மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

யோஷித ராஜபக்ஷ சார்பில் முன்னிலையான சட்டத்தரணி ஹஃபீல் ஃபாரிஸ், இந்த வழக்கில் தனது சேவைப்பெறுநருடன் பிரதிவாதியாக பெயரிடப்பட்டிருந்த டெய்ஸி ஃபோரஸ்ட் என்ற பெண் சட்டமா அதிபரினால் விடுவிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

நிலைமை அவ்வாறிருக்க, தனது சேவைபெறுநருக்கு எதிராக மாத்திரம் “சதித்திட்டம்” என்ற குற்றச்சாட்டை முன்னெடுத்துச் செல்வது சட்டத்துக்கு முரணானது என அவர் வாதிட்டார்.


எனினும், ஒரு பிரதிவாதிக்கு எதிராக மட்டுமேயாயினும் “சதித்திட்டம்” என்ற குற்றச்சாட்டை முன்னோக்கி கொண்டு செல்வதற்கான சட்டப்பூர்வ சாத்தியக்கூறுகள் இருப்பதாக பிரதி மன்றாடியார் நாயகம் ஜனக பண்டார நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டினார்.

முன்வைக்கப்பட்ட விடயங்களை கருத்திற்கொண்டு, இந்த சட்ட நிலைமை குறித்து நாளை முழுமையான விசாரணையை நடத்துவதற்கு மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்கள் ஆயம் தீர்மானித்துள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

தொடர்ச்சியாக அபிவிருத்தி உத்தியோகத்தர்களை ஏமாற்றி வரும் அரசு.!

சில மாதங்களுக்கு முன்பு, நமது நாட்டின் அரச துறையில் சிறந்த பங்களிப்பை வழங்கி வரும் 150,000 அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் 14,008 பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் தொடர்பில்…

50 0 0
இலங்கை செய்திகள்

மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொ*லை செய்த கணவன்.!

அநுராதபுரம், கொரகஹவெவ பிரதேசத்திலுள்ள காட்டுப் பகுதியில் கணவன் ஒருவர் தனது மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்துவிட்டு, அதே ஆயுதத்தால் தன்னையும் குத்திக்கொண்டு உயிரை மாய்க்க…

27 0 0
இலங்கை செய்திகள்

கண்டி தலதா பெரஹராவை கண்டுகளித்தார் ஜனாதிபதி.!

கண்டி வரலாற்றுச் சிறப்புமிக்க ஸ்ரீ தலதா மாளிகையின் வருடாந்த எசல பெரஹரா விழாவின் இறுதி மகா ரந்தோலி பெரஹரா நேற்று முன்தினம் இரவு வீதி உலா வந்த…

45 0 0
இலங்கை செய்திகள்

காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட பேரணிக்கு யாழ். பல்கலை மாணவர் ஒன்றியம் ஆதரவு.!

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தினை முன்னிட்டு, எதிர்வரும் 30ஆம் திகதி வடக்கு, கிழக்கு இணைந்த வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தினால் யாழ்ப்பாணத்திலே “நீதிக்கான நீள் பயணம்” என்று…

64 0 0