உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
29 சனி

கிழக்கு மாகாணத்தில் விசேட டெங்கு கட்டுப்பாட்டுப் பரிசோதனைகள் ஆரம்பம்

இலங்கை செய்திகள் 2 மாதங்கள் முன்
33 பார்வைகள்

கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் அறிவுறுத்தலுக்கமைய  இவ்வாரம் விசேட டெங்கு ஒழிப்பு வாரமாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.

இதற்கமைய  ஜூன் 15 முதல் 20 வரை மதஸ்தலங்கள்  பொதுச் சந்தைகள் மற்றும் வர்த்தக நிலையங்கள் ஆகியன டெங்கு கட்டுப்பாட்டு பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றன.

முதல் நாளான இன்று(15)  சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் ஜே.மதனின்  தலைமையில்  பொதுச் சுகாதார பரிசோதகர்கள், நுளம்பு களத்தடுப்பு உதவியாளர்கள் மற்றும் பிரதேச செயலகத்தின் சுற்றுச்சூழல் பொறுப்பு அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் இணைந்து இப்பரிசோதனையை மேற்கொண்டனர்.


இதன்போதுஇ நுளம்புகள் பெருகக்கூடிய இடங்கள் இனங்காணப்பட்டு உடனடியாக சுத்தம் செய்யப்பட்டது. மேலும், டெங்கு பரவலைத் தடுக்கும் நோக்கில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு அறிவுரைகளும் வழங்கப்பட்டன.

டெங்கு நோயை கட்டுப்படுத்துவது சமூகத்தின் ஒவ்வொருவரின் பொறுப்பாகும். எனவே, வாரத்திற்கு குறைந்தது 30 நிமிடங்களாவது ஒதுக்கி சுற்றுப்புறங்களை சுத்தமாக வைத்திருப்பதன் மூலம் டெங்கு பரவலைத் தடுப்போம் என சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் ஜே.மதன் குறிப்பிட்டார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

முன்னாள் பொலிஸ் உத்தியோகத்தர் கஞ்சாவுடன் கைது.!

கொஸ்வத்தை – பொத்துவட்டவன பகுதியில் இருந்து பெருந்தொகையான கேரள கஞ்சாவுடன் முன்னாள் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் குறித்த பகுதியில் நேற்று…

78 1 0
இலங்கை செய்திகள்

தொடர்ச்சியாக அபிவிருத்தி உத்தியோகத்தர்களை ஏமாற்றி வரும் அரசு.!

சில மாதங்களுக்கு முன்பு, நமது நாட்டின் அரச துறையில் சிறந்த பங்களிப்பை வழங்கி வரும் 150,000 அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் 14,008 பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் தொடர்பில்…

53 0 0
இலங்கை செய்திகள்

மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொ*லை செய்த கணவன்.!

அநுராதபுரம், கொரகஹவெவ பிரதேசத்திலுள்ள காட்டுப் பகுதியில் கணவன் ஒருவர் தனது மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்துவிட்டு, அதே ஆயுதத்தால் தன்னையும் குத்திக்கொண்டு உயிரை மாய்க்க…

36 0 0
இலங்கை செய்திகள்

கண்டி தலதா பெரஹராவை கண்டுகளித்தார் ஜனாதிபதி.!

கண்டி வரலாற்றுச் சிறப்புமிக்க ஸ்ரீ தலதா மாளிகையின் வருடாந்த எசல பெரஹரா விழாவின் இறுதி மகா ரந்தோலி பெரஹரா நேற்று முன்தினம் இரவு வீதி உலா வந்த…

46 0 0