உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
29 சனி

மயிலிட்டி மக்கள் துயர் களைய துணை நிற்போம் – மக்கள் போராட்டத்தில் ஈ.பி.டி.பி. உறுதி.!

இலங்கை செய்திகள் 3 மாதங்கள் முன்
27 பார்வைகள்

வாழ்விடங்களை இழந்து கடந்த 36 வருடங்களாக இன்னல்பட்டு வருகின்ற மக்களின் துயர் களைய ஈ.பி.டி.பி. துணையாக நிற்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழ். மாவட்ட செயலகம் முன்பாக இன்று நடைபெற்ற மயிலிட்டி காணிகளை விடுவிப்பதற்கான போட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து, குறித்த போராட்டத்தில் ஈ.பி.டி.பி. கலந்து கொண்டிருந்த நிலையில் கட்சியின் ஊடகச் செயலாளர் பன்னீர்செல்வம் ஸ்ரீகாந் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே இதனை மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்,
“மக்களின் காணி மக்களுக்கு சொந்தம் என்பதே எமது நிலைப்பாடாக இருக்கின்றது.

அந்த வகையில் கடந்த காலங்களில் அதிகாரத்தில் இருந்து, 18,500 ஏக்கருக்கும் மேற்பட்ட காணிகளை விடுவித்திருந்தோம்.

எஞ்சிய காணிகளையும் விடுவிப்பதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.

உயர் பாதுகாப்பு வலயக் காணிகள் மாத்திரமன்றி, வனவள திணைக்களம், வனஜுவராசிகள் திணைக்களம், தொல்லியல் திணைக்களம் போன்றவற்றினால் கையகப்படுத்தப்பட்டுள்ள காணிகளையும் மீட்பதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டன.

துரதிஸ்டவசமாக ஏற்பட்ட ஆட்சி மாற்றம் காரணமாக அவற்றை பூரணப்படுத்த முடியவில்லை.

எனினும், எமது மக்களின் காணிகள் விடுவிக்கப்பட வேண்டும், எமது மக்களின் எதிர்பார்ப்புக்கள் தென்னிலங்கைக்கு எடுத்துச் செல்லப்பட வேண்டும் என்பதிலும் உறுதியாக இருக்கின்றோம். எனவே மக்களின் நியாயமான போராட்டங்களுக்கு எமது ஆதரவு தொடரும்” என்று தெரிவித்தார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

முன்னாள் பொலிஸ் உத்தியோகத்தர் கஞ்சாவுடன் கைது.!

கொஸ்வத்தை – பொத்துவட்டவன பகுதியில் இருந்து பெருந்தொகையான கேரள கஞ்சாவுடன் முன்னாள் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் குறித்த பகுதியில் நேற்று…

78 1 0
இலங்கை செய்திகள்

தொடர்ச்சியாக அபிவிருத்தி உத்தியோகத்தர்களை ஏமாற்றி வரும் அரசு.!

சில மாதங்களுக்கு முன்பு, நமது நாட்டின் அரச துறையில் சிறந்த பங்களிப்பை வழங்கி வரும் 150,000 அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் 14,008 பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் தொடர்பில்…

52 0 0
இலங்கை செய்திகள்

மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொ*லை செய்த கணவன்.!

அநுராதபுரம், கொரகஹவெவ பிரதேசத்திலுள்ள காட்டுப் பகுதியில் கணவன் ஒருவர் தனது மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்துவிட்டு, அதே ஆயுதத்தால் தன்னையும் குத்திக்கொண்டு உயிரை மாய்க்க…

35 0 0
இலங்கை செய்திகள்

கண்டி தலதா பெரஹராவை கண்டுகளித்தார் ஜனாதிபதி.!

கண்டி வரலாற்றுச் சிறப்புமிக்க ஸ்ரீ தலதா மாளிகையின் வருடாந்த எசல பெரஹரா விழாவின் இறுதி மகா ரந்தோலி பெரஹரா நேற்று முன்தினம் இரவு வீதி உலா வந்த…

45 0 0