உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
29 சனி

ஜனாதிபதியின் தொலைநோக்கு தலைமையால் இலங்கையில் முதலீடு செய்ய வலுவான நம்பிக்கை.!

இலங்கை செய்திகள் 3 மாதங்கள் முன்
21 பார்வைகள்

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க மற்றும் சைனா ஹார்பர் இன்ஜினியரிங் நிறுவனத்தின் தலைவர் பாய் இன்ஷான் உள்ளிட்ட பிரதிநிதிகள் குழுவுக்கும் இடையிலான விசேட சந்திப்பு ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது.

இந்தச் சந்திப்பின் போது, ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் நேரடியான மற்றும் தொலைநோக்குடைய தலைமைத்துவம் காரணமாக, இலங்கையில் மேலும் முதலீடுகளை மேற்கொள்வதற்குத் தமக்கு வலுவான நம்பிக்கை ஏற்பட்டுள்ளது என்று சைனா ஹார்பர் நிறுவனத்தின் தலைவர் பாய் இன்ஷான் தெரிவித்தார்.

குறிப்பாக, கொழும்பு துறைமுக நகர் சிறப்பு பொருளாதார வலயத்தின் முன்னேற்றத்துக்காக தற்போதைய அரசு வழங்கி வரும் ஊக்கவிப்பு நடவடிக்கைகளுக்குத் தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்ட தலைவர், ஜனாதிபதியின் புதிய நிர்வாகத்தின் கீழ் இலங்கையின் பொருளாதாரம் மிக விரைவாக ஸ்திரத்தன்மையை அடைந்திருப்பதையும் வெகுவாகப் பாராட்டினார்.

நாட்டின் நிலையான பொருளாதார வளர்ச்சிக்கு நேரடி வெளிநாட்டு முதலீடுகள் இன்றியமையாத காரணியாகும் என்பதை இங்கு வலியுறுத்திய ஜனாதிபதி, சர்வதேச முதலீட்டாளர்களுக்குத் தேவையான அனைத்து உட்கட்டமைப்பு வசதிகளையும் பாதுகாப்பையும் வழங்குவதற்கு அரசு அர்ப்பணிப்புடன் இருப்பதாகக் குறிப்பிட்டார்.

சர்வதேச நாணய நிதியத்துடன் எட்டியுள்ள இணக்கப்பாடுகளின் அடிப்படையில் அரசு கொள்கை ரீதியான ஸ்திரத்தன்மையை அடைந்துள்ளது என்றும், அந்த ஸ்திரத்தன்மையின் அடிப்படையில் முதலீட்டாளர்களுக்குச் சாதகமான திசையில் புதிய வழிமுறைகள் வகுக்கப்படும் என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

அத்துடன், நாட்டுக்கு நன்மை பயக்கும் முதலீடுகளுக்காக அரசால் வழங்கக்கூடிய ஆகக்கூடிய ஒத்துழைப்பைத் தொடர்ச்சியாக வழங்குவதாகவும், குறிப்பாகக் கொழும்பு துறைமுக நகர் வலயத்தை பிராந்தியத்தில் முன்னணி அபிவிருத்தி அடைந்த பொருளாதார வலயமாக்குவதே அரசின் முதன்மை எதிர்பார்ப்பு என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

மேலும், அண்மையில் நாட்டைத் தாக்கிய ‘டித்வா’ சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அவசர நிவாரணம் வழங்குவதில் சைனா ஹார்பர் நிறுவனம் வழங்கிய தாராளமான ஆதரவுக்கும் நிதியுதவிகளுக்கும் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தனது நன்றியுணர்வை வெளிப்படுத்தினார்.

இந்த உயர்மட்டச் சந்திப்பில் தொழில் அமைச்சரும் நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சருமான அனில் ஜயந்த பெர்னாண்டோ, அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகமும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான பிரபாத் சந்திரகீர்த்தி ஆகியோருடன், சைனா ஹார்பர் இன்ஜினியரிங் நிறுவனத்தின் பொது முகாமையாளர் சுபோ உள்ளிட்ட தூதுக்குழுவின் முக்கிய பிரதிநிதிகள் பலரும் கலந்துகொண்டனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

உலக வர்த்தக மையமாக வடக்கை மாற்றுங்கள்! – மனோ கணேசன் எம்.பி வலியுறுத்தல்

உலக வர்த்தக மையமாகவடக்கை மாற்றுங்கள்! வட இலங்கையின் பொருளாதார வளர்ச்சிக்கான மிகப்பெரிய மூலோபாய வாய்ப்புகள் பலாலி சர்வதேச வானூர்தி நிலையமும் காங்கேசன்துறை துறைமுகமும் ஆகும் என்று தமிழ்…

55 0 0
இலங்கை செய்திகள்

பொதுச் சுகாதார உத்தியோகத்தர்களை வாகனத்தால் மோதி அச்சுறுத்த முயன்ற புலம்பெயர் தமிழர்.!

யாழ். வடமராட்சி, தொண்டைமானாறு செல்வச்சந்நிதி ஆலயப் பகுதியில் கடமையிலிருந்த பொதுச் சுகாதார உத்தியோகத்தர்கள் மீது வாகனத்தால் மோதி இடையூறு விளைவிக்க முயன்றார் என்று புலம்பெயர் தமிழர் ஒருவர்…

49 0 0
இலங்கை செய்திகள்

கோர விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் படுகாயம்.!

மட்டக்களப்பு – கல்முனை பிரதான வீதியின் ஆரையம்பதிப் பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை (28) மாலை இடம்பெற்ற பாரிய வீதி விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தை, தாய்…

40 0 0
இலங்கை செய்திகள்

அநுர ஓர் அதிசயம்; தமிழ் தலைவர்கள் தரகர்கள்.!

தற்போதைய அரசாங்கம் மக்களுக்கு மிகச் சிறப்பாக சேவை செய்து வருவதாக எமது தலைமுறை கட்சியின் தலைவர் சிதம்பரம் கருணாநிதி தெரிவித்துள்ளார். இன்றைய தினம் (29) கொழும்பில் ஊடகங்களுக்குக்…

34 0 0