உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
29 சனி

மின்சாரம் தாக்கி பெண் ஒருவர் உயிரிழப்பு.!

இலங்கை செய்திகள் 3 மாதங்கள் முன்
27 பார்வைகள்

அலவ்வ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அலவ்வ நகரில் உள்ள காணி ஒன்றுக்கு அருகில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (14) பெண் ஒருவர் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளார்.

உயிரிழந்தவர் அலவ்வ பகுதியைச் சேர்ந்த 33 வயதுடைய பெண் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

குறித்த காணியில் பயிரிடப்பட்டுள்ள மரவள்ளிக்கிழங்கு பயிர்களை காட்டு விலங்குகளிடமிருந்து பாதுகாப்பதற்காக, காணிக்குள் சட்டவிரோதமான முறையில் மின்சாரக் கம்பிகள் பொருத்தப்பட்டிருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்த பெண், தேங்காய் பொறுக்குவதற்காக சட்டவிரோதமான முறையில் குறித்த காணிக்குள் நுழைந்த போது, அங்கு பொருத்தப்பட்டிருந்த மின்சாரக் கம்பியில் சிக்கி, மின்சாரத் தாக்குதலுக்கு உள்ளாகி உயிரிழந்திருக்கலாம் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பில், குற்றச் செயலுடன் தொடர்புடைய மனிதப்படுகொலை என்ற சந்தேகத்தின் பேரில் குறித்த காணியின் காவலாளி கைது செய்யப்பட்டுள்ளார்.

பிரேத பரிசோதனைக்காக சடலம் குருணாகல் போதனா வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளில் அலவ்வ பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

உலக வர்த்தக மையமாக வடக்கை மாற்றுங்கள்! – மனோ கணேசன் எம்.பி வலியுறுத்தல்

உலக வர்த்தக மையமாகவடக்கை மாற்றுங்கள்! வட இலங்கையின் பொருளாதார வளர்ச்சிக்கான மிகப்பெரிய மூலோபாய வாய்ப்புகள் பலாலி சர்வதேச வானூர்தி நிலையமும் காங்கேசன்துறை துறைமுகமும் ஆகும் என்று தமிழ்…

55 0 0
இலங்கை செய்திகள்

பொதுச் சுகாதார உத்தியோகத்தர்களை வாகனத்தால் மோதி அச்சுறுத்த முயன்ற புலம்பெயர் தமிழர்.!

யாழ். வடமராட்சி, தொண்டைமானாறு செல்வச்சந்நிதி ஆலயப் பகுதியில் கடமையிலிருந்த பொதுச் சுகாதார உத்தியோகத்தர்கள் மீது வாகனத்தால் மோதி இடையூறு விளைவிக்க முயன்றார் என்று புலம்பெயர் தமிழர் ஒருவர்…

49 0 0
இலங்கை செய்திகள்

கோர விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் படுகாயம்.!

மட்டக்களப்பு – கல்முனை பிரதான வீதியின் ஆரையம்பதிப் பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை (28) மாலை இடம்பெற்ற பாரிய வீதி விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தை, தாய்…

40 0 0
இலங்கை செய்திகள்

அநுர ஓர் அதிசயம்; தமிழ் தலைவர்கள் தரகர்கள்.!

தற்போதைய அரசாங்கம் மக்களுக்கு மிகச் சிறப்பாக சேவை செய்து வருவதாக எமது தலைமுறை கட்சியின் தலைவர் சிதம்பரம் கருணாநிதி தெரிவித்துள்ளார். இன்றைய தினம் (29) கொழும்பில் ஊடகங்களுக்குக்…

34 0 0