உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
29 சனி

சட்டவிரோத பொருட்கள் அடங்கிய பாரவூர்தியுடன் ஒருவர் கைது.!

இலங்கை செய்திகள் 3 மாதங்கள் முன்
24 பார்வைகள்

வெளிநாட்டிலிருந்து சட்டவிரோதமான முறையில், சுங்க வரி செலுத்தப்படாமல் இறக்குமதி செய்யப்பட்ட பெருமளவிலான பொருட்கள் அடங்கிய கொள்கலன் பாரவூர்தி ஒன்றுடன் சந்தேகநபர் ஒருவர் குளியாப்பிட்டிய வலய குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

குளியாப்பிட்டிய நாரம்மல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹொரம்பாவ பகுதியில்,நேற்று (14) ஞாயிற்றுக்கிழமை குளியாப்பிட்டிய வலய குற்றப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளுக்கு கிடைத்த இரகசிய தகவலின் பேரில் இந்த விசேட சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

இதன் போது, சுங்க வரி செலுத்தாது சட்டவிரோதமான முறையில் கொண்டு வரப்பட்ட பொருட்கள் மற்றும் வாகன உதிரிப் பாகங்களுடன் கூடிய கொள்கலன் பாரவூர்தி வாகனம் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டதுடன், சந்தேகநபர் கைது செய்யப்பட்டு குளியாப்பிட்டிய பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

கைதான சந்தேகநபர் ஹொரம்பாவ பகுதியை சேர்ந்த 41 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

குறித்த கொள்கலன் பாரவூர்தியிலிருந்து வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட 190 மதுபானப் போத்தல்கள், மோட்டார் சைக்கிள் உதிரிப் பாகங்கள், 42 மோட்டார் சைக்கிள் செசி, 44 மோட்டார் சைக்கிள் எஞ்சின்கள், துவிச்சக்கர வண்டிகள் மற்றும் அதன் உதிரிப் பாகங்கள், 6 போர்க்லிப்ட் இயந்திரங்கள், 3 எக்ஸ்காவேட்டர் இயந்திரங்கள், விவசாய உபகரணங்கள் மற்றும் பெருமளவிலான வீட்டு உபயோகப் பொருட்கள் என்பன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

இக்கொள்கலன் பாரவூர்தியை முழுமையாக சோதனையிடுவதற்காக, குளியாப்பிட்டி வலய குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு உதவியாக குருநாகல் மற்றும் புத்தளம் விசேட அதிரடிப்படை முகாம்களைச் சேர்ந்த அதிகாரிகளும் வரவழைக்கப்பட்டிருந்தனர்.

இச்சம்பவம் தொடர்பில் குளியாப்பிட்டிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

உலக வர்த்தக மையமாக வடக்கை மாற்றுங்கள்! – மனோ கணேசன் எம்.பி வலியுறுத்தல்

உலக வர்த்தக மையமாகவடக்கை மாற்றுங்கள்! வட இலங்கையின் பொருளாதார வளர்ச்சிக்கான மிகப்பெரிய மூலோபாய வாய்ப்புகள் பலாலி சர்வதேச வானூர்தி நிலையமும் காங்கேசன்துறை துறைமுகமும் ஆகும் என்று தமிழ்…

55 0 0
இலங்கை செய்திகள்

பொதுச் சுகாதார உத்தியோகத்தர்களை வாகனத்தால் மோதி அச்சுறுத்த முயன்ற புலம்பெயர் தமிழர்.!

யாழ். வடமராட்சி, தொண்டைமானாறு செல்வச்சந்நிதி ஆலயப் பகுதியில் கடமையிலிருந்த பொதுச் சுகாதார உத்தியோகத்தர்கள் மீது வாகனத்தால் மோதி இடையூறு விளைவிக்க முயன்றார் என்று புலம்பெயர் தமிழர் ஒருவர்…

49 0 0
இலங்கை செய்திகள்

கோர விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் படுகாயம்.!

மட்டக்களப்பு – கல்முனை பிரதான வீதியின் ஆரையம்பதிப் பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை (28) மாலை இடம்பெற்ற பாரிய வீதி விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தை, தாய்…

40 0 0
இலங்கை செய்திகள்

அநுர ஓர் அதிசயம்; தமிழ் தலைவர்கள் தரகர்கள்.!

தற்போதைய அரசாங்கம் மக்களுக்கு மிகச் சிறப்பாக சேவை செய்து வருவதாக எமது தலைமுறை கட்சியின் தலைவர் சிதம்பரம் கருணாநிதி தெரிவித்துள்ளார். இன்றைய தினம் (29) கொழும்பில் ஊடகங்களுக்குக்…

34 0 0