உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
29 சனி

ஈஸ்டர் தாக்குதல் மறு விசாரணை பழிவாங்கல் அல்ல; ஆதாரங்களுடன் சூத்திரதாரி மிக விரைவில் பிடிபடுவார்.!

இலங்கை செய்திகள் 3 மாதங்கள் முன்
29 பார்வைகள்

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் குறித்து தற்போதைய அரசால் மீண்டும் விசாரணைகள் நடத்தப்படுவது எவ்விதமான அரசியல் பழிவாங்கல் நோக்கங்களுக்காகவும் அல்ல என்றும், முன்னாள் அரச புலனாய்வுப் பிரிவின் பிரதானி சுரேஷ் சலே சிறைச்சாலையில் உடல் மற்றும் மன ரீதியான சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்படுகின்றார் என்று வெளியாகும் செய்திகள் முற்றிலும் உண்மைக்குப் புறம்பானவை என்றும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.

அரசின் புதிய விசாரணைகள் மற்றும் சிறைச்சாலை நிலவரங்கள் குறித்து ஊடகங்களுக்கு விசேட விளக்கமளிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,
“சிறையில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அரச புலனாய்வுப் பிரிவு பிரதானி சுரேஷ் சலேவுக்குத் தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் சட்டதிட்டங்களுக்கு அமைய முறையாகச் செய்து கொடுக்கப்பட்டுள்ளன. இத்தகைய பின்னணியில், அவர் சித்திரவதைக்குள்ளாக்கப்படுவதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் வெறும் போலி வதந்திகளாகும்.

அவருக்கு அண்மையில் பல் மற்றும் கண் தொடர்பான மருத்துவப் பிரச்சினைகள் ஏற்பட்ட போது, அதற்கான முறையான மருத்துவச் சிகிச்சைகள் உடனடியாக அரச மருத்துவமனையில் வழங்கப்பட்டுள்ளன. அவர் துன்புறுத்தப்படுவதாக இருந்தால் ஏன் உடனடியாக மருத்துவசாலையில் அனுமதிக்கப்பட்டுச் சிகிச்சைகள் அளிக்கப்பட வேண்டும் என்ற கேள்வி அனைவர் மத்தியிலும் எழ வேண்டும். அதுமட்டுமன்றி, அவரது குடும்பத்தினர் அவரை நேரில் சந்திப்பதற்கும், வீட்டிலிருந்து சமைத்த உணவைக் கொண்டு வந்து கொடுப்பதற்கும் முழுமையான அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னணியில் உள்ள உண்மையான சூத்திரதாரியைக் கண்டறிவதே இந்த மறுவிசாரணையின் பிரதான நோக்கமாகும்.

இந்தத் தாக்குதலில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் தலையீடு காணப்படுவதாகச் சமூக ஊடகங்களில் பரவலாகப் பேசப்பட்டு வருகின்ற போதிலும், இது தொடர்பான குற்றச்சாட்டுகள் குறித்து இன்னும் விரிவான புலனாய்வு விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

பொதுமக்கள், ஊடகங்கள் அல்லது நாடாளுமன்றத்தில் வெறுமனே பேசப்பட்ட விடயங்களை மட்டும் வைத்துக்கொண்டு, சட்டபூர்வமான சான்றுகள் இன்றி எவரையும் நாம் நீதிமன்றத்தின் முன்னிலைக்குக் கொண்டு வர முடியாது. பொதுமக்கள் தத்தமது அரசியல் நிலைப்பாடுகளையும், தனிப்பட்ட கருத்துக்களையும் கொண்டிருக்க முடியும். எனினும், அறிவியல் மற்றும் விஞ்ஞான ரீதியான ஆதாரங்களை முறையாகத் திரட்டி குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படும் போது மட்டுமே நீதிமன்றத்தால் தண்டனை வழங்கப்பட முடியும் என்பதால் தான் முறையான புதிய விசாரணைகள் அவசியமாகின்றன.

கடந்த நல்லாட்சி அரசின் காலப் பகுதியிலேயே இந்தத் தற்கொலைத் தாக்குதல் நடத்தப்பட்ட போதிலும், அந்தக் காலப் பகுதியில் இது குறித்து முறையான இறுதி விசாரணைகள் நடத்தப்படவில்லை. அதன் பின்னர் ஆட்சிக்கு வந்த கோட்டாபய ராஜபக்ஷவின் அரசு, இது தொடர்பாகப் பெயரளவில் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுக்களை நியமித்து விசாரணைகளை மேற்கொண்ட போதிலும், அவையும் முறையான மற்றும் உண்மையான விசாரணைகளாக அமையவில்லை என்ற பலத்த விமர்சனமே சமூகத்தில் எழுந்தது.

இந்நிலையில், தற்போதைய தேசிய மக்கள் சக்தி அரசு தேர்தல் மேடைகளில் நாட்டு மக்களுக்கு அளித்த உறுதியான வாக்குறுதிகளுக்கு இணங்க, இந்த விவகாரத்தின் பின்னாலுள்ள உண்மைகளை முழுமையாக வெளிக்கொண்டுவர ஒரு முறையான, நேர்மையான மற்றும் புதிய விசாரணையை மேற்கொள்வதற்கான அனைத்து சட்டபூர்வ நடவடிக்கைகளும் தற்போது எடுக்கப்பட்டுள்ளன.” – என்றார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

உலக வர்த்தக மையமாக வடக்கை மாற்றுங்கள்! – மனோ கணேசன் எம்.பி வலியுறுத்தல்

உலக வர்த்தக மையமாகவடக்கை மாற்றுங்கள்! வட இலங்கையின் பொருளாதார வளர்ச்சிக்கான மிகப்பெரிய மூலோபாய வாய்ப்புகள் பலாலி சர்வதேச வானூர்தி நிலையமும் காங்கேசன்துறை துறைமுகமும் ஆகும் என்று தமிழ்…

53 0 0
இலங்கை செய்திகள்

பொதுச் சுகாதார உத்தியோகத்தர்களை வாகனத்தால் மோதி அச்சுறுத்த முயன்ற புலம்பெயர் தமிழர்.!

யாழ். வடமராட்சி, தொண்டைமானாறு செல்வச்சந்நிதி ஆலயப் பகுதியில் கடமையிலிருந்த பொதுச் சுகாதார உத்தியோகத்தர்கள் மீது வாகனத்தால் மோதி இடையூறு விளைவிக்க முயன்றார் என்று புலம்பெயர் தமிழர் ஒருவர்…

47 0 0
இலங்கை செய்திகள்

கோர விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் படுகாயம்.!

மட்டக்களப்பு – கல்முனை பிரதான வீதியின் ஆரையம்பதிப் பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை (28) மாலை இடம்பெற்ற பாரிய வீதி விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தை, தாய்…

39 0 0
இலங்கை செய்திகள்

அநுர ஓர் அதிசயம்; தமிழ் தலைவர்கள் தரகர்கள்.!

தற்போதைய அரசாங்கம் மக்களுக்கு மிகச் சிறப்பாக சேவை செய்து வருவதாக எமது தலைமுறை கட்சியின் தலைவர் சிதம்பரம் கருணாநிதி தெரிவித்துள்ளார். இன்றைய தினம் (29) கொழும்பில் ஊடகங்களுக்குக்…

32 0 0