உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
29 சனி

ஒரே நாளில் 926 சந்தேகநபர்கள் கைது.!

இலங்கை செய்திகள் 3 மாதங்கள் முன்
20 பார்வைகள்

‘முழு நாடுமே ஒன்றாக – தேசிய செயற்பாடு’ என்ற தொனிப்பொருளின் கீழ் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் விசேட போதைப்பொருள் ஒழிப்புத் திட்டத்திற்கமைய, நேற்று சனிக்கிழமை மாத்திரம் 926 சந்தேகநபர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த ஒக்டோபர் மாதம் 30ஆம் திகதியிலிருந்து தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வரும் இந்தத் தேசிய திட்டத்தின் கீழ், நேற்று நாடு முழுவதும் சுமார் 928 விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்டிருந்தன.

மேற்படி பாரிய கூட்டுச் சுற்றிவளைப்பு நடவடிக்கைகளின் போது, ஐஸ் போதைப்பொருள், ஹெரோயின், கஞ்சா மற்றும் சட்டவிரோத போதை மாத்திரைகள் ஆகியவற்றைப் பொலிஸ் அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.

இதேவேளை, நேற்று கைதானவர்களில் மிகவும் ஆபத்தான 4 சந்தேகநபர்களுக்கு எதிராகப் போதைப்பொருள் கடத்தல் சட்டத்தின் கீழ் விசேட தடுப்புக்காவல் உத்தரவு பெறப்பட்டு, மேல் மட்ட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

மேலும், தீவிர போதைப்பொருளுக்கு அடிமையானவர் என மருத்துவ ரீதியாக அடையாளம் காணப்பட்டுள்ள ஒரு சந்தேகநபர், நீதிமன்ற உத்தரவின் பேரில் முறையான புனர்வாழ்வு மற்றும் மறுவாழ்வு நிலையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார் என்று பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

உலக வர்த்தக மையமாக வடக்கை மாற்றுங்கள்! – மனோ கணேசன் எம்.பி வலியுறுத்தல்

உலக வர்த்தக மையமாகவடக்கை மாற்றுங்கள்! வட இலங்கையின் பொருளாதார வளர்ச்சிக்கான மிகப்பெரிய மூலோபாய வாய்ப்புகள் பலாலி சர்வதேச வானூர்தி நிலையமும் காங்கேசன்துறை துறைமுகமும் ஆகும் என்று தமிழ்…

54 0 0
இலங்கை செய்திகள்

பொதுச் சுகாதார உத்தியோகத்தர்களை வாகனத்தால் மோதி அச்சுறுத்த முயன்ற புலம்பெயர் தமிழர்.!

யாழ். வடமராட்சி, தொண்டைமானாறு செல்வச்சந்நிதி ஆலயப் பகுதியில் கடமையிலிருந்த பொதுச் சுகாதார உத்தியோகத்தர்கள் மீது வாகனத்தால் மோதி இடையூறு விளைவிக்க முயன்றார் என்று புலம்பெயர் தமிழர் ஒருவர்…

48 0 0
இலங்கை செய்திகள்

கோர விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் படுகாயம்.!

மட்டக்களப்பு – கல்முனை பிரதான வீதியின் ஆரையம்பதிப் பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை (28) மாலை இடம்பெற்ற பாரிய வீதி விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தை, தாய்…

40 0 0
இலங்கை செய்திகள்

அநுர ஓர் அதிசயம்; தமிழ் தலைவர்கள் தரகர்கள்.!

தற்போதைய அரசாங்கம் மக்களுக்கு மிகச் சிறப்பாக சேவை செய்து வருவதாக எமது தலைமுறை கட்சியின் தலைவர் சிதம்பரம் கருணாநிதி தெரிவித்துள்ளார். இன்றைய தினம் (29) கொழும்பில் ஊடகங்களுக்குக்…

33 0 0