உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
29 சனி

வடமாகாண கரம் போட்டியில் வேலணை மத்தியின் மாணவி விதுர்ஷினி சம்பியன்.!

இலங்கை செய்திகள் 3 மாதங்கள் முன்
33 பார்வைகள்

வடமாகாண மட்ட திறந்த கரம் போட்டியில் யாழ் மாவட்ட அணி சார்பில் ஒற்றையர் ஆட்டத்திலும் குழு போட்டியிலும் கலந்து கொண்ட ஜெ.விதுர்ஷினி இவ் வருடத்திற்கான (2026) வடமாகாண சம்பியனாக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

அதே போன்று குழு போட்டியிலும் கலந்துகொண்டு வடமாகாண அணிக்கு தனது திறமையை வெளிப்படுத்தி அணி சம்பியன்னாவதற்கும் பங்காற்றியுள்ளார்.

முன்பதாக கடந்த 18.04.2026 நடைபெற்ற மாவட்ட மட்ட கரம் போட்டியில் வேலணை பிரதேச செயலகம் சார்பில் கலந்து கொண்டு மாவட்டமட்ட போட்டியில் வெற்றி பெற்று யாழ் மாவட்ட அணியில் இடம் பிடித்திருந்த ஜெ.விதுர்ஷினி, நேற்றையதினம் (13.06.2026) யாழ் இந்துக் கல்லூரி உள்ளக விளையாட்டரங்கில் நடைபெற்ற மாகாணமட்ட போட்டியிலும் வெற்றி பெற்றிருந்த நிலையில் நடைபெறவிருக்கும் தேசிய மட்ட போட்டியில் வடமாகாணம் சார்பாக கலந்து கொள்ளவுள்ளார்.

இவ் வெற்றியானது யா/ வேலணை மத்திய கல்லூரிக்கும், வேலணை பிரதேசத்திற்கும், தீவக மண்ணிற்கும் கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரமாகும்.

இதேவேளை கரம் போட்டியில் தீவக மண்ணை சார்ந்த வீரரொருவர் வடமாகாண அணியில் பங்கோற்று தேசியமட்ட போட்டியில் கலந்து கொள்வது இதுவே முதற்தடவையாகும்.

பாடசாலையின் முதல்வர் இ.ஹஸ்ரன் றோய் மற்றும் உடற்கல்வி ஆசிரியர் அ. றொ. அனோஜன் ஆகியோர் குறித்த மாணவியின் வெற்றிக்கு மிக உறுதுணையாக இருந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

உலக வர்த்தக மையமாக வடக்கை மாற்றுங்கள்! – மனோ கணேசன் எம்.பி வலியுறுத்தல்

உலக வர்த்தக மையமாகவடக்கை மாற்றுங்கள்! வட இலங்கையின் பொருளாதார வளர்ச்சிக்கான மிகப்பெரிய மூலோபாய வாய்ப்புகள் பலாலி சர்வதேச வானூர்தி நிலையமும் காங்கேசன்துறை துறைமுகமும் ஆகும் என்று தமிழ்…

54 0 0
இலங்கை செய்திகள்

பொதுச் சுகாதார உத்தியோகத்தர்களை வாகனத்தால் மோதி அச்சுறுத்த முயன்ற புலம்பெயர் தமிழர்.!

யாழ். வடமராட்சி, தொண்டைமானாறு செல்வச்சந்நிதி ஆலயப் பகுதியில் கடமையிலிருந்த பொதுச் சுகாதார உத்தியோகத்தர்கள் மீது வாகனத்தால் மோதி இடையூறு விளைவிக்க முயன்றார் என்று புலம்பெயர் தமிழர் ஒருவர்…

48 0 0
இலங்கை செய்திகள்

கோர விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் படுகாயம்.!

மட்டக்களப்பு – கல்முனை பிரதான வீதியின் ஆரையம்பதிப் பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை (28) மாலை இடம்பெற்ற பாரிய வீதி விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தை, தாய்…

40 0 0
இலங்கை செய்திகள்

அநுர ஓர் அதிசயம்; தமிழ் தலைவர்கள் தரகர்கள்.!

தற்போதைய அரசாங்கம் மக்களுக்கு மிகச் சிறப்பாக சேவை செய்து வருவதாக எமது தலைமுறை கட்சியின் தலைவர் சிதம்பரம் கருணாநிதி தெரிவித்துள்ளார். இன்றைய தினம் (29) கொழும்பில் ஊடகங்களுக்குக்…

33 0 0