உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
29 சனி

நாவலப்பிட்டி கதிரேசன் மாதிரி ஆரம்பப் பாடசாலையில் டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் முன்னெடுப்பு.!

இலங்கை செய்திகள் 3 மாதங்கள் முன்
22 பார்வைகள்

நாவலப்பிட்டி கதிரேசன் மாதிரி ஆரம்பப் பாடசாலையின் சுகாதாரமான சூழலை உறுதி செய்யும் நோக்கில், டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டத்தின் இரண்டாம் கட்டம் நேற்று (13) மிகச் சிறப்பாக முன்னெடுக்கப்பட்டது.

நாவலப்பிட்டி சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை, நாவலப்பிட்டி நகர சபை மற்றும் பாடசாலை அபிவிருத்தி சங்கம் ஆகியவை இணைந்து, பெற்றோர்களின் முழுமையான ஒத்துழைப்புடன் இந்த சிரமதானப் பணிகள் வெற்றிகரமாக நடைபெற்றன.

இந்நிகழ்வில் பாடசாலை அதிபர் பெரியசாமி பிள்ளை லோகேஸ்வரன் ஜே.பி., நாவலப்பிட்டி நகர சபை பிரதி தவிசாளர் க. சுரேஸ்வரன், பொது சுகாதார வைத்திய அதிகாரி சின்றி மோகன், பாடசாலை அபிவிருத்தி சங்கச் செயலாளர் திரு. ஹேமந்த், ஆசிரியர்கள், பெற்றோர்கள் என அனைவரும் ஒன்றிணைந்து, மாணவர்களின் நலன் கருதி பாடசாலை சுற்றுப்புறத்தைச் சுத்தப்படுத்தி, டெங்கு நுளம்பு பெருகும் இடங்களை முற்றாக அகற்றினர்.

நாவலப்பிட்டி சுகாதார அத்தியட்சகர் பிரிவில் இருந்து விசேட டெங்கு நுளம்புகள் பெருகுவதை தடுக்க பாடசாலை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் புகை அடிக்கப்பட்டது.

நிகழ்வில் கலந்து கொண்ட அனைவருக்கும் பாடசாலை அதிபர் பெரியசாமி பிள்ளை லோகேஷ்வரன் தனது நன்றியை தெரிவித்துக் கொண்டார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

காணாமல் ஆக்கப்பட்டோர் தின நிகழ்வுகளில் தமிழரசுக் கட்சி கலந்துகொள்ளாது.!

இலங்கையில் இம்முறை நடைபெறும் சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான தின நிகழ்வுகளில் இலங்கைக் தமிழரசுக் கட்சி கலந்துகொள்வதில்லை என்று அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இது தொடர்பில் இலங்கைக் தமிழரசுக்…

61 0 0
இலங்கை செய்திகள்

உலக வர்த்தக மையமாக வடக்கை மாற்றுங்கள்! – மனோ கணேசன் எம்.பி வலியுறுத்தல்

உலக வர்த்தக மையமாகவடக்கை மாற்றுங்கள்! வட இலங்கையின் பொருளாதார வளர்ச்சிக்கான மிகப்பெரிய மூலோபாய வாய்ப்புகள் பலாலி சர்வதேச வானூர்தி நிலையமும் காங்கேசன்துறை துறைமுகமும் ஆகும் என்று தமிழ்…

60 0 0
இலங்கை செய்திகள்

பொதுச் சுகாதார உத்தியோகத்தர்களை வாகனத்தால் மோதி அச்சுறுத்த முயன்ற புலம்பெயர் தமிழர்.!

யாழ். வடமராட்சி, தொண்டைமானாறு செல்வச்சந்நிதி ஆலயப் பகுதியில் கடமையிலிருந்த பொதுச் சுகாதார உத்தியோகத்தர்கள் மீது வாகனத்தால் மோதி இடையூறு விளைவிக்க முயன்றார் என்று புலம்பெயர் தமிழர் ஒருவர்…

55 0 0
இலங்கை செய்திகள்

கோர விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் படுகாயம்.!

மட்டக்களப்பு – கல்முனை பிரதான வீதியின் ஆரையம்பதிப் பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை (28) மாலை இடம்பெற்ற பாரிய வீதி விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தை, தாய்…

48 0 0