உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
29 சனி

நாட்டிற்கு அழைத்து வரப்பட்ட முக்கிய பாதாள உலகக் குழு உறுப்பினர்கள்.!

இலங்கை செய்திகள் 3 மாதங்கள் முன்
19 பார்வைகள்

இலங்கையில் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தல்களில் ஈடுபடும் பாதாள உலகக் குழு உறுப்பினர்களான ‘மோதர நிபுண’ என்பவரின் சகோதரர் மற்றும் ‘புளூமெண்டல் சங்கா’ ஆகிய இரு குற்றவாளிகளும் நேற்று (13) இரவு நாட்டிற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.

அவர்கள் ஐக்கிய அரபு அமீரகத்தின் அபுதாபியில் தங்கியிருந்தபோது அந்நாட்டு பாதுகாப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு, பின்னர் அங்கிருந்து நாடுகடத்தப்பட்டனர்.

இலங்கையிலிருந்து தப்பியோடி அபுதாபியில் மறைந்திருந்த இவர்கள், மத்திய கிழக்கு போரின் போது ஈரான் தாக்குதல்களுக்குப் பயன்படுத்திய ட்ரோன் விமானங்கள் மற்றும் ஏவுகணைகளின் புகைப்படங்கள் மற்றும் காணொளிகளைத் தங்களது கைபேசிகளில் வைத்திருந்த குற்றத்திற்காக அந்நாட்டு பாதுகாப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டனர். அதன் பின்னரே அவர்கள் இலங்கைக்கு நாடுகடத்தப்பட்டுள்ளனர்.

நாட்டிற்கு அழைத்து வரப்பட்ட சந்தேகநபர்கள் இருவரையும் விமான நிலைய குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் கைது செய்து, அவர்களிடம் விரிவான வாக்குமூலங்களைப் பதிவு செய்த பின்னர், ‘மோதர சத்துர’ கொழும்பு நாரஹேன்பிட்டியில் உள்ள மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.

அதேபோல், ‘புளூமெண்டல் சங்கா’ என்பவரிடம் விமான நிலைய குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் தொடர்ந்து தடுத்து வைத்து வாக்குமூலங்களைப் பதிவு செய்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

காணாமல் ஆக்கப்பட்டோர் தின நிகழ்வுகளில் தமிழரசுக் கட்சி கலந்துகொள்ளாது.!

இலங்கையில் இம்முறை நடைபெறும் சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான தின நிகழ்வுகளில் இலங்கைக் தமிழரசுக் கட்சி கலந்துகொள்வதில்லை என்று அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இது தொடர்பில் இலங்கைக் தமிழரசுக்…

61 0 0
இலங்கை செய்திகள்

உலக வர்த்தக மையமாக வடக்கை மாற்றுங்கள்! – மனோ கணேசன் எம்.பி வலியுறுத்தல்

உலக வர்த்தக மையமாகவடக்கை மாற்றுங்கள்! வட இலங்கையின் பொருளாதார வளர்ச்சிக்கான மிகப்பெரிய மூலோபாய வாய்ப்புகள் பலாலி சர்வதேச வானூர்தி நிலையமும் காங்கேசன்துறை துறைமுகமும் ஆகும் என்று தமிழ்…

60 0 0
இலங்கை செய்திகள்

பொதுச் சுகாதார உத்தியோகத்தர்களை வாகனத்தால் மோதி அச்சுறுத்த முயன்ற புலம்பெயர் தமிழர்.!

யாழ். வடமராட்சி, தொண்டைமானாறு செல்வச்சந்நிதி ஆலயப் பகுதியில் கடமையிலிருந்த பொதுச் சுகாதார உத்தியோகத்தர்கள் மீது வாகனத்தால் மோதி இடையூறு விளைவிக்க முயன்றார் என்று புலம்பெயர் தமிழர் ஒருவர்…

55 0 0
இலங்கை செய்திகள்

கோர விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் படுகாயம்.!

மட்டக்களப்பு – கல்முனை பிரதான வீதியின் ஆரையம்பதிப் பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை (28) மாலை இடம்பெற்ற பாரிய வீதி விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தை, தாய்…

48 0 0