உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
29 சனி

யாழ் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற முதலாவது பன்னாட்டு தமிழிசை மாநாடு!

இலங்கை செய்திகள் 3 மாதங்கள் முன்
23 பார்வைகள்

முதலாவது பன்னாட்டு தமிழிசை ஆய்வு மாநாட்டின் இரண்டாவது நாள் நிகழ்வானது இன்றையதினம் யாழ்ப்பாணம் பல்கலைக்கழக கைலாசபதி அரங்கில் நடைபெற்றது.

இன்றைய நிகழ்வின்போது மங்கல விளக்கேற்றி வைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து கலை நிகழ்வுகள் ஆரம்பமாகின.

நேற்றையதினம் ஆரம்பமான இந்த மாநாட்டில் ஆய்வளிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்டன.

பின்னர் இன்றைய தினம் மாணவர்களது கலை நிகழ்வுகள் இடம்பெற்றன. இசைத் துறையின் வரலாற்றில் ஒரு மைக்கல்லாக இந்த முதலாவது பன்னாட்டு தமிழிசை ஆய்வு மாநாடு நடாத்தப்படுகிறது.

கந்தையா கார்த்திகேசு நிதியத்தின் நிதிப் பங்களிப்புடன் இந்த ஆய்வு மாநாடானது நடைபெற்றது.

சே.பொ.இ.கா.ஆ.க. பீடத்தின் இசைத்துறை தலைவர் கலாநிதி சி. சூரியகுமார் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், பிரதம விருந்தினராக முதுநிலைப் பேராசிரியரும் யாழ் பல்கலைக்கழக துணைவேந்தருமான தி. வேல்நம்பியும், மாநாட்டு முதன்மைக் கருத்துரைஞராக முனைவர் அரிமளம் பத்மநாபனும் கலந்து சிறப்பித்ததுடன் பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள், மாணவர்கள் என பலரும் இதிலா கலந்துகொண்டனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

காணாமல் ஆக்கப்பட்டோர் தின நிகழ்வுகளில் தமிழரசுக் கட்சி கலந்துகொள்ளாது.!

இலங்கையில் இம்முறை நடைபெறும் சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான தின நிகழ்வுகளில் இலங்கைக் தமிழரசுக் கட்சி கலந்துகொள்வதில்லை என்று அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இது தொடர்பில் இலங்கைக் தமிழரசுக்…

67 0 0
இலங்கை செய்திகள்

உலக வர்த்தக மையமாக வடக்கை மாற்றுங்கள்! – மனோ கணேசன் எம்.பி வலியுறுத்தல்

உலக வர்த்தக மையமாகவடக்கை மாற்றுங்கள்! வட இலங்கையின் பொருளாதார வளர்ச்சிக்கான மிகப்பெரிய மூலோபாய வாய்ப்புகள் பலாலி சர்வதேச வானூர்தி நிலையமும் காங்கேசன்துறை துறைமுகமும் ஆகும் என்று தமிழ்…

62 0 0
இலங்கை செய்திகள்

பொதுச் சுகாதார உத்தியோகத்தர்களை வாகனத்தால் மோதி அச்சுறுத்த முயன்ற புலம்பெயர் தமிழர்.!

யாழ். வடமராட்சி, தொண்டைமானாறு செல்வச்சந்நிதி ஆலயப் பகுதியில் கடமையிலிருந்த பொதுச் சுகாதார உத்தியோகத்தர்கள் மீது வாகனத்தால் மோதி இடையூறு விளைவிக்க முயன்றார் என்று புலம்பெயர் தமிழர் ஒருவர்…

56 0 0
இலங்கை செய்திகள்

கோர விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் படுகாயம்.!

மட்டக்களப்பு – கல்முனை பிரதான வீதியின் ஆரையம்பதிப் பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை (28) மாலை இடம்பெற்ற பாரிய வீதி விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தை, தாய்…

49 0 0