உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
29 சனி

சுகாதாரச் சீர்கேட்டுடன் ஐஸ்கிறீம் விற்பனை செய்த நபருக்கு ஒத்திவைத்த சிறைத்தண்டனை!

இலங்கை செய்திகள் 3 மாதங்கள் முன்
26 பார்வைகள்

யாழ்ப்பாணம், சுழிபுரம் பகுதியில் பொதுமக்களின் ஆரோக்கியத்துக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில், சுகாதாரச் சீர்கேட்டுடன் ஐஸ்கிறீம் விற்பனையில் ஈடுபட்ட ஒருவருக்கு 6 மாத கால ஒத்திவைத்த சிறைத்தண்டனையும் அபராதமும் விதித்து மல்லாகம் நீதிவான் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

சங்கானை சுகாதார மருத்துவ அதிகாரி பணிமனைக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள உணவகங்கள் மற்றும் நடமாடும் வியாபார நிலையங்கள் என்பன அண்மைக்காலமாகத் தொடர்ச்சியாகப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றன.

இதற்கமைய, கடந்த வாரம் சங்கானை, சுழிபுரம் மற்றும் அராலி ஆகிய பொதுச்சுகாதாரப் பரிசோதகர் பிரிவுகளில் திடீர் சோதனைகள் முன்னெடுக்கப்பட்டன. இதன்போது, மூன்று பாண் விற்பனை வாகனங்கள், ஒரு ஐஸ்கிறீம் விற்பனை வாகனம் மற்றும் சில உணவகங்கள் கடுமையான சுகாதாரச் சீர்கேடுகளுடன் இயங்கி வந்தமை கண்டறியப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, சுகாதார விதிமுறைகளை மீறிச் செயற்பட்ட 10 வர்த்தகத் தரப்பினருக்கு எதிராகச் சங்கானை சுகாதாரப் பிரிவினரால் மல்லாகம் நீதிவான் நீதிமன்றத்தில் நேற்றுமுன்தினம் வியாழக்கிழமை வழக்குகள் தொடரப்பட்டன.

இவ்வழக்குகள் அன்றைய தினமே விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்ட 9 தரப்பினருக்கு மொத்தம் ஒரு இலட்சம் ரூபா அபராதம் விதிக்கப்பட்டது.

அதேவேளை, சுழிபுரம் பகுதியில் அசுத்தமான முறையில் ஐஸ்கிறீம் விற்பனையில் ஈடுபட்ட குற்றவாளிக்கு 6 மாத காலத்துக்கு ஒத்திவைக்கப்பட்ட 6 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதுடன், 23 ஆயிரம் ரூபா பண அபராதமும் விதித்து நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

காணாமல் ஆக்கப்பட்டோர் தின நிகழ்வுகளில் தமிழரசுக் கட்சி கலந்துகொள்ளாது.!

இலங்கையில் இம்முறை நடைபெறும் சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான தின நிகழ்வுகளில் இலங்கைக் தமிழரசுக் கட்சி கலந்துகொள்வதில்லை என்று அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இது தொடர்பில் இலங்கைக் தமிழரசுக்…

67 0 0
இலங்கை செய்திகள்

உலக வர்த்தக மையமாக வடக்கை மாற்றுங்கள்! – மனோ கணேசன் எம்.பி வலியுறுத்தல்

உலக வர்த்தக மையமாகவடக்கை மாற்றுங்கள்! வட இலங்கையின் பொருளாதார வளர்ச்சிக்கான மிகப்பெரிய மூலோபாய வாய்ப்புகள் பலாலி சர்வதேச வானூர்தி நிலையமும் காங்கேசன்துறை துறைமுகமும் ஆகும் என்று தமிழ்…

62 0 0
இலங்கை செய்திகள்

பொதுச் சுகாதார உத்தியோகத்தர்களை வாகனத்தால் மோதி அச்சுறுத்த முயன்ற புலம்பெயர் தமிழர்.!

யாழ். வடமராட்சி, தொண்டைமானாறு செல்வச்சந்நிதி ஆலயப் பகுதியில் கடமையிலிருந்த பொதுச் சுகாதார உத்தியோகத்தர்கள் மீது வாகனத்தால் மோதி இடையூறு விளைவிக்க முயன்றார் என்று புலம்பெயர் தமிழர் ஒருவர்…

57 0 0
இலங்கை செய்திகள்

கோர விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் படுகாயம்.!

மட்டக்களப்பு – கல்முனை பிரதான வீதியின் ஆரையம்பதிப் பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை (28) மாலை இடம்பெற்ற பாரிய வீதி விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தை, தாய்…

49 0 0