உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
29 சனி

தேர்தலை ஒத்தி வைத்ததால் தான் மக்கள் எங்களை வீட்டுக்கு அனுப்பினார்கள்!

இலங்கை செய்திகள் 3 மாதங்கள் முன்
37 பார்வைகள்

மாகாண சபைத் தேர்தலை உரிய காலத்தில் நடத்தாத காரணத்தாலேயே கடந்த காலங்களில் மக்கள் எம்மை வீட்டுக்கு அனுப்பினார்கள்.

எனவே கடந்த காலத் தவறுகளில் இருந்து தற்போதைய அரசு பாடம் கற்றுக்கொள்வது அவசியம் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொருளாளர் லசந்த அழகியவண்ண தெரிவித்தார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறுகையில்,

“மாகாண சபைத் தேர்தலை உடனடியாக நடத்துமாறு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி சார்பாகவும், கூட்டு எதிரணி சார்பிலும் நாம் தொடர்ச்சியாக அரசிடம் கோரிக்கை விடுத்து வருகின்றோம்.

‘உங்களது ஆட்சிக்காலத்திலும் தேர்தல் ஒத்திவைக்கப்படவில்லையா?’ என எம்மைக் பார்த்துச் சிலர் கேள்வி எழுப்பலாம். ஆம், அன்று நாம் தேர்தலை ஒத்திவைத்தது முற்றிலும் தவறுதான்.

அதற்கான தகுந்த பதிலைத்தான் மக்கள் அடுத்த வந்த தேர்தல் ஊடாக எமக்கு வழங்கினார்கள்.

தேர்தலை நடத்தத் தவறிய எமது கட்சியை நிராகரித்த மக்கள், தேர்தலை முறையாக நடத்துவோம் எனக் கூறி ஆட்சிக்கு வந்த தற்போதைய தரப்பினரை ஆதரித்தனர்.

எனவே, தேர்தல் ஒத்திவைப்புத் தொடர்பில் கடந்த கால வரலாற்றில் இருந்து அரசு பாடங்களைக் கற்றுக்கொண்டால் நல்லது. எமது தரப்பு எப்போதும் மாகாண சபைத் தேர்தல் உடனடியாக நடத்தப்பட வேண்டும் என்ற உறுதியான நிலைப்பாட்டிலேயே உள்ளது.” – என்றார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

அபிவிருத்தி உத்தியோகத்தர்களை தொடர்ச்சியாக ஏமாற்றும் அநுர அரசு : சஜித் குற்றச்சாட்டு

தேர்தல் காலத்திலும் அதற்குப் பின்னரும் இந்த அரசானது ஒரு இலட்சத்து 50 ஆயிரம் அபிவிருத்தி உத்தியோகத்தர்களையும், 14 ஆயிரத்து 8 பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்களையும் தொடர்ச்சியாக ஏமாற்றி…

24 0 0
இலங்கை செய்திகள்

மாகாண சபைத் தேர்தலை உடனடியாக நடத்துங்கள்! : சஜித் வலியுறுத்தல்!!

அரசு மக்களுக்குச் சிறந்த சேவையைத்தான் ஆற்றி வருவதாகக் கூறினால், உடனடியாக மாகாண சபைத் தேர்தலை நடத்துமாறு தான் சவால் விடுவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.…

46 0 0
இலங்கை செய்திகள்

காணாமல் ஆக்கப்பட்டோர் தின நிகழ்வுகளில் தமிழரசுக் கட்சி கலந்துகொள்ளாது.!

இலங்கையில் இம்முறை நடைபெறும் சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான தின நிகழ்வுகளில் இலங்கைக் தமிழரசுக் கட்சி கலந்துகொள்வதில்லை என்று அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இது தொடர்பில் இலங்கைக் தமிழரசுக்…

72 0 0
இலங்கை செய்திகள்

உலக வர்த்தக மையமாக வடக்கை மாற்றுங்கள்! – மனோ கணேசன் எம்.பி வலியுறுத்தல்

உலக வர்த்தக மையமாகவடக்கை மாற்றுங்கள்! வட இலங்கையின் பொருளாதார வளர்ச்சிக்கான மிகப்பெரிய மூலோபாய வாய்ப்புகள் பலாலி சர்வதேச வானூர்தி நிலையமும் காங்கேசன்துறை துறைமுகமும் ஆகும் என்று தமிழ்…

65 0 0