உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
29 சனி

கடந்த இரண்டரை ஆண்டுகளில் நீரில் மூழ்கி 1,093 பேர் உயிரிழப்பு.!

இலங்கை செய்திகள் 3 மாதங்கள் முன்
28 பார்வைகள்

இலங்கையில் நடப்பு 2026ஆம் ஆண்டில் இதுவரையிலான காலப்பகுதியில் மாத்திரம் நீரில் மூழ்கியமையால் 122 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன என்று பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

இது குறித்து ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த பொலிஸ் ஊடகப் பேச்சாளர் எஃப்.யு. வூட்லர், இவ்வாறு உயிரிழந்தவர்களில் 113 ஆண்களும் 9 பெண்களும் அடங்குகின்றனர் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த இரண்டு வருடங்களில் நீரில் மூழ்கி உயிரிழந்தவர்களின் புள்ளிவிவரங்களை அவர் மேலும் வெளியிடுகையில், 2024 ஆம் ஆண்டில் 510 ஆண்கள் மற்றும் 85 பெண்கள் உட்பட 595 உயிரிழப்புகளும், 2025ஆம் ஆண்டில் 309 ஆண்கள் மற்றும் 67 பெண்கள் உட்பட 376 உயிரிழப்புகளும் பதிவாகியுள்ளன என்று தெரிவித்துள்ளார்.

பொலிஸ் ஊடகப் பேச்சாளரின் தரவுகளின்படி, கடந்த 2024 ஆம் ஆண்டு முதல் 2026ஆம் ஆண்டின் இதுவரையான காலப்பகுதி வரை, நாட்டில் நீரில் மூழ்கியமையால் மொத்தம் 1,093 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளதுடன், இவர்களில் பெரும்பானோர் இளைஞர்கள் என்றும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

எனவே, விடுமுறை நாட்களிலும், குறிப்பாக வரவிருக்கும் பொசன் பௌர்ணமி பண்டிகைக் காலத்திலும் ஆறுகள், குளங்கள் மற்றும் கடல் போன்ற நீர்நிலைகளுக்கு அருகில் செல்லும் பிள்ளைகள் மற்றும் இளைஞர்கள் குறித்துப் பெற்றோர்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்பட வேண்டும் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் விசேட கோரிக்கை விடுத்துள்ளார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

நன்னீர் மீன்பிடி உற்பத்திகளின் உணவுக் கண்காட்சி கிளிநொச்சியில் ஆரம்பம்!

வடமாகாண விவசாய அமைச்சின் மீன்பிடி அலகு ஏற்பாடு செய்தநன்னீர் மீன்பிடி உற்பத்திகளின் உணவுக் கண்காட்சி 29.08.2026 இன்று கிளிநொச்சி பசுமைப்பூங்காவில் ஆரம்பமாகியது. இன்று பிற்பகல் மீன்பிடி அலகின்…

60 0 0
இலங்கை செய்திகள்

எச்சரிக்கை!! : எல் நினோ தாக்கத்தால் உணவுப் பற்றாக்குறை மற்றும் மந்தபோஷணை ஏற்படும் அபாயம்!

எல் நினோ தாக்கத்தால் இலங்கையில் கடுமையான உணவுப் பற்றாக்குறை, மந்தபோஷணை ஏற்படும் அபாயம்! – விசேட வைத்தியர் நிபுணர் சமல் சஞ்சீவ எச்சரிக்கை உலகளாவிய ரீதியில் அதிகரித்து…

72 0 0
இலங்கை செய்திகள்

அபிவிருத்தி உத்தியோகத்தர்களை தொடர்ச்சியாக ஏமாற்றும் அநுர அரசு : சஜித் குற்றச்சாட்டு

தேர்தல் காலத்திலும் அதற்குப் பின்னரும் இந்த அரசானது ஒரு இலட்சத்து 50 ஆயிரம் அபிவிருத்தி உத்தியோகத்தர்களையும், 14 ஆயிரத்து 8 பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்களையும் தொடர்ச்சியாக ஏமாற்றி…

27 0 0
இலங்கை செய்திகள்

மாகாண சபைத் தேர்தலை உடனடியாக நடத்துங்கள்! : சஜித் வலியுறுத்தல்!!

அரசு மக்களுக்குச் சிறந்த சேவையைத்தான் ஆற்றி வருவதாகக் கூறினால், உடனடியாக மாகாண சபைத் தேர்தலை நடத்துமாறு தான் சவால் விடுவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.…

49 0 0