உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
29 சனி

சட்டவிரோதமாக தேயிலைக் கழிவுகளை ஏற்றிச் சென்ற வாகனம் கைப்பற்றல்.!

இலங்கை செய்திகள் 3 மாதங்கள் முன்
25 பார்வைகள்

ஹட்டன் பகுதியில் நடைபெற்ற அதிரடி நடவடிக்கையில், அனுமதிப்பத்திரமின்றி பெருமளவில் தேயிலைக் கழிவுகளை ஏற்றிச் சென்ற டிப்பர் வாகனம் கைப்பற்றப்பட்டதுடன் அதன் சாரதியும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அக்கரப்பத்தனையில் இருந்து குளியாப்பிட்டிய நோக்கி சுமார் 6000 கிலோ தேயிலைக் கழிவுகள் ஏற்றிச் சென்ற குறித்த வாகனம், ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியின் செனன் பகுதியில் வைத்து ஹட்டன் பொலிஸ் ஊழல் தடுப்புப் பிரிவினரால் நேற்று (11) இரவு மறித்து சோதனை செய்யப்பட்டது.

சோதனையின் போது, குறித்த கழிவு தேயிலைக்கு தேவையான எந்தவொரு முறையான அனுமதிப்பத்திரமும் இல்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டது.

இதையடுத்து, வாகனத்தின் சாரதி உடனடியாக கைது செய்யப்பட்டார்.

கைப்பற்றப்பட்ட டிப்பர் வாகனத்துடன் சந்தேகநபர் இன்று (12) ஹட்டன் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளதாக ஹட்டன் குற்றத்தடுப்பு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

நன்னீர் மீன்பிடி உற்பத்திகளின் உணவுக் கண்காட்சி கிளிநொச்சியில் ஆரம்பம்!

வடமாகாண விவசாய அமைச்சின் மீன்பிடி அலகு ஏற்பாடு செய்தநன்னீர் மீன்பிடி உற்பத்திகளின் உணவுக் கண்காட்சி 29.08.2026 இன்று கிளிநொச்சி பசுமைப்பூங்காவில் ஆரம்பமாகியது. இன்று பிற்பகல் மீன்பிடி அலகின்…

60 0 0
இலங்கை செய்திகள்

எச்சரிக்கை!! : எல் நினோ தாக்கத்தால் உணவுப் பற்றாக்குறை மற்றும் மந்தபோஷணை ஏற்படும் அபாயம்!

எல் நினோ தாக்கத்தால் இலங்கையில் கடுமையான உணவுப் பற்றாக்குறை, மந்தபோஷணை ஏற்படும் அபாயம்! – விசேட வைத்தியர் நிபுணர் சமல் சஞ்சீவ எச்சரிக்கை உலகளாவிய ரீதியில் அதிகரித்து…

72 0 0
இலங்கை செய்திகள்

அபிவிருத்தி உத்தியோகத்தர்களை தொடர்ச்சியாக ஏமாற்றும் அநுர அரசு : சஜித் குற்றச்சாட்டு

தேர்தல் காலத்திலும் அதற்குப் பின்னரும் இந்த அரசானது ஒரு இலட்சத்து 50 ஆயிரம் அபிவிருத்தி உத்தியோகத்தர்களையும், 14 ஆயிரத்து 8 பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்களையும் தொடர்ச்சியாக ஏமாற்றி…

27 0 0
இலங்கை செய்திகள்

மாகாண சபைத் தேர்தலை உடனடியாக நடத்துங்கள்! : சஜித் வலியுறுத்தல்!!

அரசு மக்களுக்குச் சிறந்த சேவையைத்தான் ஆற்றி வருவதாகக் கூறினால், உடனடியாக மாகாண சபைத் தேர்தலை நடத்துமாறு தான் சவால் விடுவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.…

49 0 0