உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
30 ஞாயிறு

பிரபாகரனின் மகன் பாலச்சந்திரனின் படுகொலை ஒரு போர்க்குற்றமே!

இலங்கை செய்திகள் 3 மாதங்கள் முன்
26 பார்வைகள்

தமிழீழ விடுதலைப் புலிகளின் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் இளைய மகன் பாலச்சந்திரனின் படுகொலையானது ஒரு போர்க்குற்றமாகும் எனத் தெரிவித்துள்ள ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம், அது தொடர்பில் முறையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்,

“பிரபாகரனின் மகன் பாலச்சந்திரன் படுகொலை செய்யப்பட்டார் என்று பிரிட்டனின் ‘சனல் 4’ ஊடகம் செய்தி வெளியிட்டிருந்த நிலையில், அந்த ஊடகம் பொய் கூறுகின்றது என்று பிரிட்டனில் உள்ள இலங்கைத் தூதரகம் அப்போது மறுப்புத் தெரிவித்திருந்தது.

எனினும், சனல் – 4 ஊடகம் வெளியிட்ட ஆவணப்படத்தில் பாலச்சந்திரன் படுகொலை செய்யப்பட்டமை தொடர்பான தெளிவான ஆதாரங்கள் மற்றும் தகவல்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன.

பாலச்சந்திரன் படுகொலை செய்யப்படுவதற்கு முன்னதாக, அவர் இராணுவப் பதுங்கு குழி ஒன்றில் உணவுடன் அமர்ந்திருப்பது போன்ற ஒளிப்படம் முதலில் வெளிவந்திருந்தது.

அதனைத் தொடர்ந்து, அவர் மார்பில் துப்பாக்கிச் சன்னங்கள் பாய்ந்த நிலையில் சடலமாகக் கிடப்பது போன்ற அடுத்த ஒளிப்படம் வெளியானது. அவர் பிரபாகரனின் மகனாகவே இருந்தாலும், ஒரு சிறுவனுக்கு இவ்வாறு நடந்திருக்கக்கூடாது.

கடந்த கால வரலாறுகளை நாம் உற்றுநோக்க வேண்டும். ஜே.வி.பி.யின் தலைவர் ரோஹண விஜேவீர படுகொலை செய்யப்பட்ட போது, அவருடைய குடும்ப உறுப்பினர்கள் அப்போதைய அரசால் முழுமையாகப் பாதுகாக்கப்பட்டனர்.

அதேபோன்று, உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலின் சூத்திரதாரியான ஷஹ்ரான் ஹாஷிம் உயிரிழந்த போதும், அவரது மனைவியும் மகளும் சட்டத்தினூடாகப் பாதுகாப்பாக வாழ்கின்றனர்.

நிலைமை இவ்வாறு இருக்கையில், பிரபாகரனின் 12 வயது மகன் பாலச்சந்திரன் மட்டும் ஏன் படுகொலை செய்யப்பட வேண்டும்? எனவே, இந்த விவகாரத்தை ஒரு பாரதூரமான போர்க்குற்றமாகக் கருதி, முறையான விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும்.” – என்றார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

நன்னீர் மீன்பிடி உற்பத்திகளின் உணவுக் கண்காட்சி கிளிநொச்சியில் ஆரம்பம்!

வடமாகாண விவசாய அமைச்சின் மீன்பிடி அலகு ஏற்பாடு செய்தநன்னீர் மீன்பிடி உற்பத்திகளின் உணவுக் கண்காட்சி 29.08.2026 இன்று கிளிநொச்சி பசுமைப்பூங்காவில் ஆரம்பமாகியது. இன்று பிற்பகல் மீன்பிடி அலகின்…

63 0 0
இலங்கை செய்திகள்

எச்சரிக்கை!! : எல் நினோ தாக்கத்தால் உணவுப் பற்றாக்குறை மற்றும் மந்தபோஷணை ஏற்படும் அபாயம்!

எல் நினோ தாக்கத்தால் இலங்கையில் கடுமையான உணவுப் பற்றாக்குறை, மந்தபோஷணை ஏற்படும் அபாயம்! – விசேட வைத்தியர் நிபுணர் சமல் சஞ்சீவ எச்சரிக்கை உலகளாவிய ரீதியில் அதிகரித்து…

74 0 0
இலங்கை செய்திகள்

அபிவிருத்தி உத்தியோகத்தர்களை தொடர்ச்சியாக ஏமாற்றும் அநுர அரசு : சஜித் குற்றச்சாட்டு

தேர்தல் காலத்திலும் அதற்குப் பின்னரும் இந்த அரசானது ஒரு இலட்சத்து 50 ஆயிரம் அபிவிருத்தி உத்தியோகத்தர்களையும், 14 ஆயிரத்து 8 பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்களையும் தொடர்ச்சியாக ஏமாற்றி…

28 0 0
இலங்கை செய்திகள்

மாகாண சபைத் தேர்தலை உடனடியாக நடத்துங்கள்! : சஜித் வலியுறுத்தல்!!

அரசு மக்களுக்குச் சிறந்த சேவையைத்தான் ஆற்றி வருவதாகக் கூறினால், உடனடியாக மாகாண சபைத் தேர்தலை நடத்துமாறு தான் சவால் விடுவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.…

50 0 0