உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
30 ஞாயிறு

பாரதிராஜாவின் மறைவுக்கு வடக்கு மாகாண முன்னாள் முதல்வர் சி.வி.விக்னேஸ்வரன் இரங்கல்!

இலங்கை செய்திகள் 3 மாதங்கள் முன்
18 பார்வைகள்

தமிழ் சினிமாத் துறையில் புரட்சியை உண்டு பண்ணிய இயக்குனர் திலகம் பாரதிராஜாவின் மறைவு ஈடு செய்ய முடியாதது என ஓய்வுபெற்ற நீதியரசர் சி.வி.விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்ட இரங்கல் செய்தியிலேயே இதனை தெரிவித்துள்ளார். அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

கலைஞர் கருணாநிதிக்கும் இயக்குநர் இமயத்திற்கும் ஒரு ஒற்றுமையிருந்தது. அது தான் அவர்களின் கட்டைக்குரல். ஆளுமை மிக்க குரல்களை இருவரும் கொண்டிருந்தனர்.

நான் முதலமைச்சராக இருந்த போது பாரதிராஜா யாழ்ப்பாணம் வந்து என்னைச் சந்தித்தார். அவரின் குரலில் இருந்த மிடுக்கைக் கண்டு வியந்தேன். அவர் இருந்த இடம் கலகலப்பாக இருக்கும். சிரிப்புக்கு அளவில்லை. பாசத்திற்குக் குறைவில்லை. அவற்றின் ஊடாக நடைபெற்ற எமது கருத்துப் பரிமாற்றங்கள் இன்றும் செழுமையுடன் மனதில் இருந்து சிலிர்க்க வைக்கின்றன.

சினிமா வாயிலாக தமிழ் மக்கள் மனதில் ஒரு புதிய பரிமாணத்தைப் பரவவிட்டவர் பாரதிராஜா.

அவர் மகனின் மறைவு அவரை மிகவும் வாட்டியது. இன்று மகன் சென்ற இடத்திற்கே தந்தையும் சென்றுவிட்டார். அவருடன் அளவளாவ எனக்கு இறைவன் ஒரு சந்தர்ப்பத்தைத் தந்துதவியிருந்தான் என்பது பெருமையாக இருப்பினும் இனி அவரின் குரல் கேட்க முடியாதென்பது மனதை அரிக்கின்றது; சோகத்தைத் தருகின்றது.

இத் தருணத்தில் எந்த உயரம் சென்றாலும் எவ்வளவு ஆற்றல் மிக்கவனாக அவன் வாழ்ந்தாலும் இறுதிச் சங்கமம் பூமிக்கடியிலேயே என்ற பேருண்மை எம்முன் திரையோடி நின்று திகைப்பையும் மன அவதியையுமே தருகின்றது.

பாரதிராஜா புகழ் என்றென்றும் நிலைப்பதாக!

அவரின் கலை வண்ணமும் கலை உள்ளமும் எமது மக்களை ஊக்கப்படுத்தி எமது சினிமாக்கலைஉலகம் உயர்ச்சி பெற உதவுவனவாக! நண்பர் பாரதிராஜா ஆன்மா சாந்தியடைவதாக என குறிப்பிடப்பட்டுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

நன்னீர் மீன்பிடி உற்பத்திகளின் உணவுக் கண்காட்சி கிளிநொச்சியில் ஆரம்பம்!

வடமாகாண விவசாய அமைச்சின் மீன்பிடி அலகு ஏற்பாடு செய்தநன்னீர் மீன்பிடி உற்பத்திகளின் உணவுக் கண்காட்சி 29.08.2026 இன்று கிளிநொச்சி பசுமைப்பூங்காவில் ஆரம்பமாகியது. இன்று பிற்பகல் மீன்பிடி அலகின்…

63 0 0
இலங்கை செய்திகள்

எச்சரிக்கை!! : எல் நினோ தாக்கத்தால் உணவுப் பற்றாக்குறை மற்றும் மந்தபோஷணை ஏற்படும் அபாயம்!

எல் நினோ தாக்கத்தால் இலங்கையில் கடுமையான உணவுப் பற்றாக்குறை, மந்தபோஷணை ஏற்படும் அபாயம்! – விசேட வைத்தியர் நிபுணர் சமல் சஞ்சீவ எச்சரிக்கை உலகளாவிய ரீதியில் அதிகரித்து…

74 0 0
இலங்கை செய்திகள்

அபிவிருத்தி உத்தியோகத்தர்களை தொடர்ச்சியாக ஏமாற்றும் அநுர அரசு : சஜித் குற்றச்சாட்டு

தேர்தல் காலத்திலும் அதற்குப் பின்னரும் இந்த அரசானது ஒரு இலட்சத்து 50 ஆயிரம் அபிவிருத்தி உத்தியோகத்தர்களையும், 14 ஆயிரத்து 8 பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்களையும் தொடர்ச்சியாக ஏமாற்றி…

28 0 0
இலங்கை செய்திகள்

மாகாண சபைத் தேர்தலை உடனடியாக நடத்துங்கள்! : சஜித் வலியுறுத்தல்!!

அரசு மக்களுக்குச் சிறந்த சேவையைத்தான் ஆற்றி வருவதாகக் கூறினால், உடனடியாக மாகாண சபைத் தேர்தலை நடத்துமாறு தான் சவால் விடுவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.…

50 0 0