உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
30 ஞாயிறு

மானிப்பாய் பிரதேச சபையின் ஊழல் அம்பலம்!

இலங்கை செய்திகள் 3 மாதங்கள் முன்
20 பார்வைகள்

மானிப்பாய் பிரதேச சபையின் உறுப்பினர் ஒருவரிடம் கட்டணம் அறவிடப்படாமல் மயானத்தில் சடலம் எரிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டு, அந்த விடயம் சர்ச்சைக்கு உள்ளான நிலையில் ஒரு மாதத்தின் பின் அவசர அவசரமாக கட்டணம் அறவிடப்பட்டு பற்றுச்சீட்டு வழங்கிய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இது குறித்து மேலும் தெரியவருகையில்,

கடந்த ஏப்ரல் மாதம் 04ஆம் திகதி மானிப்பாய் பிரதேச சபையின் உறுப்பினர் ஒருவரது தந்தையின் சடலமானது விளாவெளி இந்து மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.

ஆனால் மயானத்துக்கான கட்டணம் அறவிடப்படவில்லை.

அந்த மாத சபை கூட்டம் நடைபெற்று, கணக்கறிக்கை அனைத்தும் தயாரித்து முடித்த பின்னர் 5ஆம் மாதத்தில் குறித்த பிரச்சினையானது சர்ச்சைக்குள்ளாகி பேசுபொருளானது.

இந்த விடயம் ஏனைய உறுப்பினர்களுக்கு தெரியவந்த நிலையில் உறுப்பினர்கள் இது குறித்து கேள்வி எழுப்ப ஆரம்பித்தனர்.

விடுமுறை தினமாக இருந்தாலும் குறித்த வட்டாரத்தில் உள்ள பொது நூலகத்தில் உள்ள படிவத்தினை வாங்கி நிரப்பிய பின்னர் அங்கு உப பற்றுச்சீட்டு ஒன்று வழங்கப்பட்ட பின்னரே சடலத்தை எரிப்பதற்கான அனுமதி வழங்தப்படும்.

பின்னர் அந்த வருமானம் பிரதான கணக்கறிக்கைக்கு கொண்டு செல்லப்படும். இது அனைவருக்கும் பொதுவான நடைமுறை.

ஆனால் இதனால் நடைமுறை குறித்த உறுப்பினர் விடயத்தில் கடைப்பிடிக்கப்படவில்லை.

இந்த விடயமானது பூதாகரமாக மாறிய நிலையில் கடந்த 25.05.2026 அன்று அவசர அவசரமாக அந்த உறுப்பினர் அழைக்கப்பட்டு கட்டணம் அறவிடப்பட்டு பற்றுச்சீட்டு வழங்கப்பட்டது.

உறுப்பினருக்கு தனிப்பட்ட முறையில் இந்த விடயத்தில் சலுகை வழங்க முற்பட்டு அது வெளிப்பட்ட நிலையில் இவ்வாறு பற்றுச்சீட்டு வழங்தப்பட்டதா என உறுப்பினர்கள் கடந்த சபை கூட்டத்திலும் கேள்வி எழுப்பினர்.

வடக்கு மாகாண சபையின், உள்ளூராட்சி சபைகளின் கீழ் உள்ள மயானங்களை ஒழுங்குபடுத்தல் தொடர்பான நியதிச் சட்டத்தின் அடிப்படையில் உரிய ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்பதுடன், பிரதேச தவிசாளர் அல்லது அதிகாரம் பெற்ற எவரேனும் உத்தியோகத்தரால் விநியோகிக்கப்பட்ட அனுமதிப்பத்திரம் இன்றி பிரதேச சபைக்குச் சொந்தமான ஏதேனும் தகன நிலையத்தில் எந்தவோர் பூதவுடலும் தகனம் செய்யப்படுதல் ஆகாது என அந்த நியதிச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இருப்பினும் இவை அனைத்தையும் உதாசீனம் செய்துவிட்டே பிரதேச சபையின் மயானத்துக்குள் அந்த சடலமானது எரிக்கப்பட்ட நிலையில் சர்ச்சை எழுந்துள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

நன்னீர் மீன்பிடி உற்பத்திகளின் உணவுக் கண்காட்சி கிளிநொச்சியில் ஆரம்பம்!

வடமாகாண விவசாய அமைச்சின் மீன்பிடி அலகு ஏற்பாடு செய்தநன்னீர் மீன்பிடி உற்பத்திகளின் உணவுக் கண்காட்சி 29.08.2026 இன்று கிளிநொச்சி பசுமைப்பூங்காவில் ஆரம்பமாகியது. இன்று பிற்பகல் மீன்பிடி அலகின்…

63 0 0
இலங்கை செய்திகள்

எச்சரிக்கை!! : எல் நினோ தாக்கத்தால் உணவுப் பற்றாக்குறை மற்றும் மந்தபோஷணை ஏற்படும் அபாயம்!

எல் நினோ தாக்கத்தால் இலங்கையில் கடுமையான உணவுப் பற்றாக்குறை, மந்தபோஷணை ஏற்படும் அபாயம்! – விசேட வைத்தியர் நிபுணர் சமல் சஞ்சீவ எச்சரிக்கை உலகளாவிய ரீதியில் அதிகரித்து…

74 0 0
இலங்கை செய்திகள்

அபிவிருத்தி உத்தியோகத்தர்களை தொடர்ச்சியாக ஏமாற்றும் அநுர அரசு : சஜித் குற்றச்சாட்டு

தேர்தல் காலத்திலும் அதற்குப் பின்னரும் இந்த அரசானது ஒரு இலட்சத்து 50 ஆயிரம் அபிவிருத்தி உத்தியோகத்தர்களையும், 14 ஆயிரத்து 8 பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்களையும் தொடர்ச்சியாக ஏமாற்றி…

28 0 0
இலங்கை செய்திகள்

மாகாண சபைத் தேர்தலை உடனடியாக நடத்துங்கள்! : சஜித் வலியுறுத்தல்!!

அரசு மக்களுக்குச் சிறந்த சேவையைத்தான் ஆற்றி வருவதாகக் கூறினால், உடனடியாக மாகாண சபைத் தேர்தலை நடத்துமாறு தான் சவால் விடுவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.…

50 0 0