யானை தாக்கி பெண் ஒருவர் உயிரிழப்பு.!
திருகோணமலை – சேருவில, சுமேதங்கபுர பகுதியில் இன்று வியாழக்கிழமை (11) காலை யானை தாக்கி 73 வயதுடைய வயோதிபப் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
யானை தாக்கி காயமடைந்த குறித்த வயோதிபப் பெண் சேருவில வைத்தியசாலையிருந்து மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.