உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
30 ஞாயிறு

யாழ். கலாசார மத்திய நிலையத்தின் நோக்கத்தை இழக்க முடியாது – முன்னாள் முதல்வர் யோகேஸ்வரி.!

இலங்கை செய்திகள் 3 மாதங்கள் முன்
27 பார்வைகள்

யாழ்ப்பாணம் கலாசார மத்திய நிலையம் அதன் கட்டுமானத்தின் நோக்குடனும் மிடுக்குடனும் இருக்க வேண்டுமே தவிர கால ஓட்டத்துக்கு ஏற்ப பெயர் மாற்றங்களை திணிப்பதும் நோக்கங்களை மாற்றுவதுமாக இருக்கக் கூடாது என யாழ் மாநகரின் முன்னாள் முதல்வர் யோகேஸ்வரி பற்குணராஜா வலியுறுத்தியுள்ளார்.

அத்துடன் யாழ்ப்பாணத்தின் அடையாளமாகவும் தமிழ் மக்களின் கலாசார மையமாகவும் இருக்கும் இந்த கலாசார மையத்தை யாழ் மாநகரசபையே முழுமையாகப் பொறுப்பேற்று செயற்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

யாழ். மாநகரின் மாதாந்த அமர்வு இன்றையதினம் முதல்வர் திருமதி மதிவதனி தலைமையில் நடைபெற்றது. இதன்போது கலாசார மத்திய நிலையத்தின் பராமரிப்பு குறித்து விவாதிக்கப்பட்ட போது இவ்வாறு கூறிய அவர் மேலும் கூறுகையில்,

யாழ்ப்பாணம் கலாசார மத்திய நிலையம், யுத்தம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்ட பின்னரான காலத்தில் அன்றைய மகிந்த ராஜபக்ச அரசில் அமைச்சராக இருந்த டக்ளஸ் தேவானந்தாவின் முயற்சியால்தான் கொண்டுவரப்பட்டது.

அன்று இந்தியா சென்றிருந்த அரச குழாமில் இருந்த டக்ளஸ் தேவானந்தா, 50 ஆயிரம் வீட்டுத்திட்டம் உள்ளிட்ட பல்வேறு வரப்பிரசாதங்களை கேட்டுப் பெற்றிருந்தார். அதில் ஒன்றுதான் இந்த கலாசார மத்திய நிலையமும்.

நான் முதல்வராக இருந்த காலத்தில் இந்த திட்டம் நடைபெற்றதால் இதன் தாற்பரியங்கள் அனைத்தும் நன்கு உணர்ந்தவராக இருக்கின்றேன்.

அதன் வெளிப்பாடாகவே இந்த கலாசார மத்திய நிலையம் யாழ் மாநகரின் பொறுப்பில் இருக்க வேண்டும் என வலியுறுத்துகின்றேன்.

அத்துடன் யாழ்ப்பாணத்தின் கலாசார மத்திய நிலையமாக கொண்டுவரப்பட்ட இந்த கலாசார நிலையத்தின் பெயர் எக்காரணம் கொண்டும் மாற்றப்பட முடியாத ஒன்றாகும்.

எனவே, இந்த கலாசார நிலையம் ஆரம்பிக்கப்பட்ட நோக்கத்தை திசை திருப்பாது அதன் பெயரும் மாண்பும் பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

நன்னீர் மீன்பிடி உற்பத்திகளின் உணவுக் கண்காட்சி கிளிநொச்சியில் ஆரம்பம்!

வடமாகாண விவசாய அமைச்சின் மீன்பிடி அலகு ஏற்பாடு செய்தநன்னீர் மீன்பிடி உற்பத்திகளின் உணவுக் கண்காட்சி 29.08.2026 இன்று கிளிநொச்சி பசுமைப்பூங்காவில் ஆரம்பமாகியது. இன்று பிற்பகல் மீன்பிடி அலகின்…

63 0 0
இலங்கை செய்திகள்

எச்சரிக்கை!! : எல் நினோ தாக்கத்தால் உணவுப் பற்றாக்குறை மற்றும் மந்தபோஷணை ஏற்படும் அபாயம்!

எல் நினோ தாக்கத்தால் இலங்கையில் கடுமையான உணவுப் பற்றாக்குறை, மந்தபோஷணை ஏற்படும் அபாயம்! – விசேட வைத்தியர் நிபுணர் சமல் சஞ்சீவ எச்சரிக்கை உலகளாவிய ரீதியில் அதிகரித்து…

74 0 0
இலங்கை செய்திகள்

அபிவிருத்தி உத்தியோகத்தர்களை தொடர்ச்சியாக ஏமாற்றும் அநுர அரசு : சஜித் குற்றச்சாட்டு

தேர்தல் காலத்திலும் அதற்குப் பின்னரும் இந்த அரசானது ஒரு இலட்சத்து 50 ஆயிரம் அபிவிருத்தி உத்தியோகத்தர்களையும், 14 ஆயிரத்து 8 பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்களையும் தொடர்ச்சியாக ஏமாற்றி…

28 0 0
இலங்கை செய்திகள்

மாகாண சபைத் தேர்தலை உடனடியாக நடத்துங்கள்! : சஜித் வலியுறுத்தல்!!

அரசு மக்களுக்குச் சிறந்த சேவையைத்தான் ஆற்றி வருவதாகக் கூறினால், உடனடியாக மாகாண சபைத் தேர்தலை நடத்துமாறு தான் சவால் விடுவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.…

50 0 0