உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
30 ஞாயிறு

இலங்கையில் புற்றுநோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு.!

இலங்கை செய்திகள் 3 மாதங்கள் முன்
44 பார்வைகள்

இலங்கையில் புற்றுநோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கின்ற நிலையில் அவர்களுக்கான சிகிச்சை வழங்கலில் நோயாளர்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என புற்றுநோய் வைத்திய நிபுணரும் தேசிய புற்றுநோயியல் நிறுவன ஆலோசகருமான வைத்திய கலாநிதி நடராஜா ஜெயக்குமாரன் தெரிவித்தார்.

நேற்று புதன்கிழமை யாழ்ப்பாண பல்கலைக்கழக நூலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற மறைந்த பேராசிரியர் நாகலிங்கம் சுந்தரலிங்கம் ஞாபகார்த்த நிகழ்வில் பேருரை ஆற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,
புற்றுநோய் இலங்கையில் மட்டுமல்ல உலகத்தில் உள்ள பல நாடுகளில் தாக்கம் அதிகரித்துள்ள தன்மையை கொண்டுள்ளது.

இந்தப் புற்றுநோய் உருவாவதற்கு பல்வேறு காரணங்கள் காணப்படுகின்ற நிலையில் பொதுவாக உணவுப் பழக்கங்கள் இந்த நோய்க்கு ஆரம்ப கர்த்தாவாக அமைகிறது.

உலகமயமாக்கலின் விளைவாக இரசாயன உரங்கள், கிருமி நாசினிகள் உணவு பொருட்களுக்கு அதிகம் பயன்படுத்தப்படுகின்றமையால் புற்றுநோயின் தாக்கம் அதிகரித்துச் செல்கின்றது.

உடற்பயிற்சி மற்றும் பாதுகாப்பான உணவு பழக்கவழக்கங்களை கடைப்பிடிப்பதன் மூலம் இந்த நோய் வராமல் பாதுகாத்துக் கொள்ள முடியும்.

இலங்கையை பொறுத்தவரையில் புற்றுநோய்க்கான சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருகின்ற நிலையில் சுகாதார அமைச்சு நோயாளர்களின் உரிமைகள் பாதுகாக்கப்படுவதற்கான ஏற்பாடுகளையும் வழங்கியிருக்கிறது.

இலங்கையில் புற்றுநோயாளர் ஒருவர் தனது சிகிச்சையை விரும்பிய இடத்தில் பெறுவதற்கான உத்தரவாதங்கள் வழங்கப்பட்டுள்ள நிலையில் விரும்பிய இடங்களில் சிகிச்சைகளை பெற முடியும்.

ஆகவே புற்றுநோயையை வராமல் தடுப்பதற்கு சுகாதார வழிகாட்டல்கள் மற்றும் வாழ்க்கை முறைகளில் மாற்றங்களை கொண்டு வந்தால் தடுக்க முடியும் என அவர் மேலும் தெரிவித்தார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

நன்னீர் மீன்பிடி உற்பத்திகளின் உணவுக் கண்காட்சி கிளிநொச்சியில் ஆரம்பம்!

வடமாகாண விவசாய அமைச்சின் மீன்பிடி அலகு ஏற்பாடு செய்தநன்னீர் மீன்பிடி உற்பத்திகளின் உணவுக் கண்காட்சி 29.08.2026 இன்று கிளிநொச்சி பசுமைப்பூங்காவில் ஆரம்பமாகியது. இன்று பிற்பகல் மீன்பிடி அலகின்…

64 0 0
இலங்கை செய்திகள்

எச்சரிக்கை!! : எல் நினோ தாக்கத்தால் உணவுப் பற்றாக்குறை மற்றும் மந்தபோஷணை ஏற்படும் அபாயம்!

எல் நினோ தாக்கத்தால் இலங்கையில் கடுமையான உணவுப் பற்றாக்குறை, மந்தபோஷணை ஏற்படும் அபாயம்! – விசேட வைத்தியர் நிபுணர் சமல் சஞ்சீவ எச்சரிக்கை உலகளாவிய ரீதியில் அதிகரித்து…

76 0 0
இலங்கை செய்திகள்

அபிவிருத்தி உத்தியோகத்தர்களை தொடர்ச்சியாக ஏமாற்றும் அநுர அரசு : சஜித் குற்றச்சாட்டு

தேர்தல் காலத்திலும் அதற்குப் பின்னரும் இந்த அரசானது ஒரு இலட்சத்து 50 ஆயிரம் அபிவிருத்தி உத்தியோகத்தர்களையும், 14 ஆயிரத்து 8 பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்களையும் தொடர்ச்சியாக ஏமாற்றி…

29 0 0
இலங்கை செய்திகள்

மாகாண சபைத் தேர்தலை உடனடியாக நடத்துங்கள்! : சஜித் வலியுறுத்தல்!!

அரசு மக்களுக்குச் சிறந்த சேவையைத்தான் ஆற்றி வருவதாகக் கூறினால், உடனடியாக மாகாண சபைத் தேர்தலை நடத்துமாறு தான் சவால் விடுவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.…

50 0 0