உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
30 ஞாயிறு

யாழ். போதனா வைத்தியசாலையின் மருந்து களஞ்சியசாலையில் ஏற்பட்ட தீ விபத்து தொடர்பில் விரிவான விசாரணை!

இலங்கை செய்திகள் 3 மாதங்கள் முன்
26 பார்வைகள்

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் மருந்து களஞ்சியசாலையில் அண்மையில் ஏற்பட்ட தீ விபத்து தொடர்பில் முறையான மற்றும் விரிவான விசாரணைகளை முன்னெடுக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளதாக பிரதி சுகாதார அமைச்சர் ஹங்சக விஜேமுனி தெரிவித்துள்ளார்.

இன்று (10) நடைபெற்ற நாடாளுமன்ற அமர்வின் போது, யாழ். வைத்தியசாலை தீ விபத்து விவகாரம் மற்றும் அதற்கு எதிராக அரசாங்கம் எடுத்துள்ள தற்போதைய நடவடிக்கைகள் குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனா கேள்வி எழுப்பினார்.

அதற்குப் பதிலளிக்கும் போதே பிரதி அமைச்சர் இந்த விபரங்களை வெளியிட்டார்.

இந்தத் தீ விபத்தின் பின்னணி குறித்து பிரதி சுகாதார அமைச்சர் நாடாளுமன்றில் மேலும் விளக்குகையில்:

“யாழ்ப்பாண வைத்தியசாலையின் மருந்து களஞ்சியசாலையில் இடம்பெற்ற தீ விபத்தானது மிகவும் அபாயகரமான ஒன்றாகும்.

குறிப்பாக, நாட்டில் உள்ள மருந்துகள் மற்றும் அவற்றின் இருப்புக்கள் தொடர்பான விபரங்கள் அனைத்தும் முழுமையாக டிஜிட்டல் மயப்படுத்தப்பட்டு வரும் இதே காலகட்டத்தில் இந்த விபத்து சம்பவித்துள்ளமையானது, பெரும் வினோதமாகவும் சந்தேகத்திற்குரியதாகவும் பார்க்கப்படுகின்றது.”

இந்த விபத்து நேர்ந்த உடனடியாகவே, நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனா இது குறித்துச் சுகாதார அமைச்சுக்கு உத்தியோகபூர்வமாக முறைப்பாடு செய்திருந்தார் என்பதைப் பிரதி அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

அவரது முறைப்பாடு கிடைக்கப்பெற்ற கணமே, இச்சம்பவத்தின் உண்மைப் பின்னணியைக் கண்டறிவதற்கென உரிய உயர்மட்ட விசாரணைகளை ஆரம்பிக்குமாறு துறைசார் அதிகாரிகளுக்குத் தான் பணிப்புரை விடுத்ததாக அவர் குறிப்பிட்டார்.

இந்தத் தீ விபத்தின் பின்னணியில் ஏதேனும் முறைகேடுகள் அல்லது திட்டமிட்ட சதிச் செயல்கள் காணப்படுகின்றனவா என்பது உள்ளிட்ட பல கோணங்களில் விசாரணைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளதாகவும், அதனடிப்படையிலான முழுமையான விசாரணை அறிக்கை மற்றும் அதன் முன்னேற்றங்கள் மிக விரைவில் கிடைக்கப்பெறும் என எதிர்பார்ப்பதாகவும் பிரதி சுகாதார அமைச்சர் ஹங்சக விஜேமுனி நாடாளுமன்றில் மேலும் உறுதியளித்தார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

நன்னீர் மீன்பிடி உற்பத்திகளின் உணவுக் கண்காட்சி கிளிநொச்சியில் ஆரம்பம்!

வடமாகாண விவசாய அமைச்சின் மீன்பிடி அலகு ஏற்பாடு செய்தநன்னீர் மீன்பிடி உற்பத்திகளின் உணவுக் கண்காட்சி 29.08.2026 இன்று கிளிநொச்சி பசுமைப்பூங்காவில் ஆரம்பமாகியது. இன்று பிற்பகல் மீன்பிடி அலகின்…

65 0 0
இலங்கை செய்திகள்

எச்சரிக்கை!! : எல் நினோ தாக்கத்தால் உணவுப் பற்றாக்குறை மற்றும் மந்தபோஷணை ஏற்படும் அபாயம்!

எல் நினோ தாக்கத்தால் இலங்கையில் கடுமையான உணவுப் பற்றாக்குறை, மந்தபோஷணை ஏற்படும் அபாயம்! – விசேட வைத்தியர் நிபுணர் சமல் சஞ்சீவ எச்சரிக்கை உலகளாவிய ரீதியில் அதிகரித்து…

78 0 0
இலங்கை செய்திகள்

அபிவிருத்தி உத்தியோகத்தர்களை தொடர்ச்சியாக ஏமாற்றும் அநுர அரசு : சஜித் குற்றச்சாட்டு

தேர்தல் காலத்திலும் அதற்குப் பின்னரும் இந்த அரசானது ஒரு இலட்சத்து 50 ஆயிரம் அபிவிருத்தி உத்தியோகத்தர்களையும், 14 ஆயிரத்து 8 பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்களையும் தொடர்ச்சியாக ஏமாற்றி…

29 0 0
இலங்கை செய்திகள்

மாகாண சபைத் தேர்தலை உடனடியாக நடத்துங்கள்! : சஜித் வலியுறுத்தல்!!

அரசு மக்களுக்குச் சிறந்த சேவையைத்தான் ஆற்றி வருவதாகக் கூறினால், உடனடியாக மாகாண சபைத் தேர்தலை நடத்துமாறு தான் சவால் விடுவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.…

50 0 0