உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
30 ஞாயிறு

அரசியல் பழிவாங்கல்களை உடனே நிறுத்துங்கள்! – தயாசிறி ஜயசேகர வலியுறுத்தல்

இலங்கை செய்திகள் 3 மாதங்கள் முன்
25 பார்வைகள்

” முறையான விசாரணைகளின்றி தன்னிச்சையாக நபர்களைக் கைது செய்து பழிவாங்கும் நடவடிக்கைகள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்” என்று நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.

கொழும்பில் இன்று ஊடகவியலாளர்கள் எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்குப் பதிலளிக்கும் போதே அவர் இதனைக் கூறினார்.

“உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் குறித்து நியாயமான விசாரணை நடத்தப்பட வேண்டும். சட்டத்தின்படி செயல்படுங்கள்” என்ற பிரதான வாசகப் பின்னணியில் நின்று ஊடகங்களுக்குக் கருத்து வெளியிட்ட அவர்,

தற்போதைய அரசின் சில நகர்வுகள் வெறும் அரசியல் பழிவாங்கலாகவே பார்க்க முடிகின்றது என்றார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

“இந்தக் கோரத் தாக்குதலுடன் தொடர்புடைய உண்மையான சூத்திரதாரிகள் யார் என்பதைச் சான்றுகளுடன் வெளிக்கொண்டு வருவதை விடுத்து, தங்களுக்குப் பிடிக்காத யாரையாவது ஒருவரைக் கைது செய்து, அவரே பிரதான சூத்திரதாரி எனப் பகிரங்கமாகத் தீர்ப்பளிக்கவே தற்பொழுது சில தரப்பினர் திட்டமிட்டு முயற்சித்து வருகின்றனர்” என்று குற்றம் சாட்டினார்.

முன்னாள் அரச புலனாய்வுப் பிரிவு பிரதானி மேஜர் ஜெனரல் சுரேஷ் சலேக்கு எதிராகத் தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் சட்ட நடவடிக்கைகள் குறித்து ஊடகவியலாளர்கள் இதன்போது கேள்வி எழுப்பினர்.

அதற்குப் பதிலளித்த நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி, “நாங்கள் இங்கு சுரேஷ் சலே என்ற தனிநபரைப் பற்றி மட்டும் பேசவில்லை.

நாட்டின் எந்தவொரு பிரஜையாக இருந்தாலும், அவர் பாதுகாப்புப் பிரிவு உயர் அதிகாரியாக இருந்தாலும் சரி, அவர்களுக்கு எதிராக முறையான மற்றும் சட்டபூர்வமான விசாரணைகள் மட்டுமே நடத்தப்பட வேண்டும்.

எவ்வித அரசியல் உள்நோக்கமும் இன்றி, நாட்டின் பொதுச் சட்டத்துக்கு அமையவே அனைத்து நகர்வுகளும் எடுக்கப்பட வேண்டும் என்பதை நாங்கள் மிகவும் தெளிவாக வலியுறுத்துகிறோம்.” – என்றார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

நன்னீர் மீன்பிடி உற்பத்திகளின் உணவுக் கண்காட்சி கிளிநொச்சியில் ஆரம்பம்!

வடமாகாண விவசாய அமைச்சின் மீன்பிடி அலகு ஏற்பாடு செய்தநன்னீர் மீன்பிடி உற்பத்திகளின் உணவுக் கண்காட்சி 29.08.2026 இன்று கிளிநொச்சி பசுமைப்பூங்காவில் ஆரம்பமாகியது. இன்று பிற்பகல் மீன்பிடி அலகின்…

66 0 0
இலங்கை செய்திகள்

எச்சரிக்கை!! : எல் நினோ தாக்கத்தால் உணவுப் பற்றாக்குறை மற்றும் மந்தபோஷணை ஏற்படும் அபாயம்!

எல் நினோ தாக்கத்தால் இலங்கையில் கடுமையான உணவுப் பற்றாக்குறை, மந்தபோஷணை ஏற்படும் அபாயம்! – விசேட வைத்தியர் நிபுணர் சமல் சஞ்சீவ எச்சரிக்கை உலகளாவிய ரீதியில் அதிகரித்து…

78 0 0
இலங்கை செய்திகள்

அபிவிருத்தி உத்தியோகத்தர்களை தொடர்ச்சியாக ஏமாற்றும் அநுர அரசு : சஜித் குற்றச்சாட்டு

தேர்தல் காலத்திலும் அதற்குப் பின்னரும் இந்த அரசானது ஒரு இலட்சத்து 50 ஆயிரம் அபிவிருத்தி உத்தியோகத்தர்களையும், 14 ஆயிரத்து 8 பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்களையும் தொடர்ச்சியாக ஏமாற்றி…

29 0 0
இலங்கை செய்திகள்

மாகாண சபைத் தேர்தலை உடனடியாக நடத்துங்கள்! : சஜித் வலியுறுத்தல்!!

அரசு மக்களுக்குச் சிறந்த சேவையைத்தான் ஆற்றி வருவதாகக் கூறினால், உடனடியாக மாகாண சபைத் தேர்தலை நடத்துமாறு தான் சவால் விடுவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.…

50 0 0