உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
30 ஞாயிறு

என்னைச் சிறையிலடைக்க கோட்டாவுக்கு ஆலோசனை வழங்கியதே சுரேஷ் சலேதான்.!

இலங்கை செய்திகள் 3 மாதங்கள் முன்
24 பார்வைகள்

“ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்தில், எவ்வித நியாயமான காரணங்களுமின்றி என்னைக் கைது செய்து சிறையில் அடைப்பதற்கான அனைத்து சூழ்ச்சித் திட்டங்களையும், ஆலோசனைகளையும் வழங்கியது இதே சுரேஷ் சலேதான்” என்று முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா குற்றம் சாட்டியுள்ளார்.

தற்போது தடுப்புக் காவலில் உள்ள சுரேஷ் சலேவுக்கு ஆதரவாக முன்னெடுக்கப்படும் பிரச்சாரங்கள் குறித்து ஊடகங்களுக்கு இன்று கருத்து வெளியிடும் போதே அவர் தனக்கு நேர்ந்த கடந்த கால அரசியல் பழிவாங்கல்களின் பின்னணியை இவ்வாறு அம்பலப்படுத்தியுள்ளார்.

அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
“ஒரு மதுப் போத்தலுக்கும், சோற்றுப் பார்சலுக்கும் மற்றும் வெறும் ஆயிரம் ரூபாய் பணத்துக்கும் ஆசைப்பட்டு, சமூக ஊடகங்கள் வாயிலாக வதந்திகளைப் பரப்பி, இன்றும் ராஜபக்ஷக்களுக்கும் அவர்களின் சகாக்களுக்கும் முட்டுக்கொடுக்கும் நபர்கள் குறித்து நான் பரிதாபப்படுகின்றேன். கடந்த காலத்தில் எனக்கு இழைக்கப்பட்ட அரசியல் பழிவாங்கல்களின் உண்மையான சூத்திரதாரிகள் இவர்கள்தான் என்பதை நாடு அறிந்துகொள்ள வேண்டும்.

ராஜபக்ஷ அரசிடம் நான் எவ்வித குற்றச்சாட்டுகளோ அல்லது முறையான சிவில் நீதிமன்ற விசாரணைகளோ இன்றி, கடற்படைத் தலைமையகத்தில் உள்ள விசேட முகாம் ஒன்றில் சுமார் 8 மாதங்கள் தொடர்ச்சியாகத் தடுத்து வைக்கப்பட்டிருந்தேன். ஜன்னல்கள் மற்றும் கதவுகள் அனைத்தும் தடித்த பலகைகளால் முழுமையாக அடைக்கப்பட்ட, வெளிச்சமோ காற்றோ வராத ஒரு சிறிய அறையிலேயே நான் மிருகத்தனமாக அடைத்து வைக்கப்பட்டிருந்தேன்.

எனவே, சிறைச்சாலைகள் மற்றும் சித்திரவதைக் கூடங்கள், தடுப்புக்காவல் முகாம்களில் அடைக்கப்பட்டு இருப்பவர்களின் வேதனை மற்றும் அனுபவங்கள் என்ன என்பது குறித்த முழுமையான அறிவும் அனுபவமும் இந்த சுரேஷ் சலேவுக்கு மிக நன்றாகவே உண்டு.

இந்த சுரேஷ் சலே மற்றும் கபில ஹெந்தவிதாரண போன்ற பாதுகாப்புப் பிரிவு உயர் அதிகாரிகளின் முறையற்ற ஆலோசனைகளையும், நச்சு வழிகாட்டல்களையும் பெற்றுக்கொண்டே கோட்டாபய ராஜபக்ஷ அன்று என்னைச் சிறையிலடைத்துப் பழிவாங்கினார்.

இந்தப் பழிவாங்கல் நடவடிக்கைகள் என் மீது மட்டுமன்றி, எவ்வித அரசியல் தொடர்புமற்ற எனது குடும்பத்தினர் மீதும் திட்டமிட்டு அரச அதிகார பலத்துடன் கட்டவிழ்த்து விடப்பட்டது. நான் பழிவாங்கப்பட்டு இராணுவக் காவலில் கைது செய்யப்பட்ட அந்தத் துயரமான தினமன்று, எனது மனைவியைக் கூடக் காலை 4 மணி வரை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினர் கொடூரமான முறையில் தடுத்து வைத்து, கடுமையான விசாரணைக்கு உட்படுத்தியிருந்தனர்.” – என்றார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

நன்னீர் மீன்பிடி உற்பத்திகளின் உணவுக் கண்காட்சி கிளிநொச்சியில் ஆரம்பம்!

வடமாகாண விவசாய அமைச்சின் மீன்பிடி அலகு ஏற்பாடு செய்தநன்னீர் மீன்பிடி உற்பத்திகளின் உணவுக் கண்காட்சி 29.08.2026 இன்று கிளிநொச்சி பசுமைப்பூங்காவில் ஆரம்பமாகியது. இன்று பிற்பகல் மீன்பிடி அலகின்…

66 0 0
இலங்கை செய்திகள்

எச்சரிக்கை!! : எல் நினோ தாக்கத்தால் உணவுப் பற்றாக்குறை மற்றும் மந்தபோஷணை ஏற்படும் அபாயம்!

எல் நினோ தாக்கத்தால் இலங்கையில் கடுமையான உணவுப் பற்றாக்குறை, மந்தபோஷணை ஏற்படும் அபாயம்! – விசேட வைத்தியர் நிபுணர் சமல் சஞ்சீவ எச்சரிக்கை உலகளாவிய ரீதியில் அதிகரித்து…

78 0 0
இலங்கை செய்திகள்

அபிவிருத்தி உத்தியோகத்தர்களை தொடர்ச்சியாக ஏமாற்றும் அநுர அரசு : சஜித் குற்றச்சாட்டு

தேர்தல் காலத்திலும் அதற்குப் பின்னரும் இந்த அரசானது ஒரு இலட்சத்து 50 ஆயிரம் அபிவிருத்தி உத்தியோகத்தர்களையும், 14 ஆயிரத்து 8 பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்களையும் தொடர்ச்சியாக ஏமாற்றி…

29 0 0
இலங்கை செய்திகள்

மாகாண சபைத் தேர்தலை உடனடியாக நடத்துங்கள்! : சஜித் வலியுறுத்தல்!!

அரசு மக்களுக்குச் சிறந்த சேவையைத்தான் ஆற்றி வருவதாகக் கூறினால், உடனடியாக மாகாண சபைத் தேர்தலை நடத்துமாறு தான் சவால் விடுவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.…

50 0 0