உணவகம் ஒன்றில் தீ விபத்து; மூவர் உயிரிழப்பு.!
தலவத்துகொட சந்திக்கு அருகில் உள்ள உணவகம் ஒன்றில் இன்று (09) முற்பகல் ஏற்பட்ட தீ விபத்தில் மூவர் காயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளனர்.
குறித்த உணவகத்தில் ஏற்பட்ட தீயைக் கட்டுப்படுத்துவதற்காக கோட்டே மாநகர சபைக்குச் சொந்தமான 3 தீயணைப்பு வாகனங்கள் ஈடுபடுத்தப்பட்டன.
சமையல் எரிவாயு கசிவு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
சம்பவம் தொடர்பாக தலங்கம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.