உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
30 ஞாயிறு

மோசமான வானிலை, கடல் கொந்தளிப்பு; சிறிய படகுகள் கடலுக்கு செல்லத் தடை.!

இலங்கை செய்திகள் 3 மாதங்கள் முன்
15 பார்வைகள்

“நாடளாவிய ரீதியில் நிலவும் மோசமான வானிலை மற்றும் கடல் கொந்தளிப்பு காரணமாக, மீனவர்களின் பாதுகாப்பைக் கருத்திற்கொண்டு சிறிய மற்றும் பாரம்பரிய படகுகள் மறு அறிவித்தல் வரை கடலுக்குச் செல்வதைத் தவிர்க்க வேண்டும்” என்று கடற்றொழில் மற்றும் நீரியல்வள திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் சுசந்த கஹவத்த விசேட எச்சரிக்கை அறிவிப்பை விடுத்துள்ளார்.

வளிமண்டலவியல் திணைக்களத்தின் தரவுகளை அடிப்படையாகக் கொண்டு இந்த அவசர அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

காங்கேசன்துறை, யாழ்ப்பாணம், மன்னார், புத்தளம் ஊடாகக் கற்பிட்டி வரையான கடற்பிராந்தியங்களில் காற்றின் வேகம் மணித்தியாலத்திற்கு 60 முதல் 70 கிலோமீற்றர் வரை மிகக் கடுமையாக அதிகரிக்கக்கூடும். இதன் காரணமாகக் கடல் அலைகள் மிக உயரமாக எழும்பும் அபாயம் காணப்படுகிறது. எனவே, குறித்த கடற்பிராந்தியங்களில் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபடும் சிறிய மற்றும் பாரம்பரிய படகுகள் மறு அறிவித்தல் வரும் வரை கடலுக்குச் செல்லக் கூடாது என்று பணிப்பாளர் நாயகம் கடுமையாக வலியுறுத்தியுள்ளார்.

இதேவேளை, கற்பிட்டியிலிருந்து சிலாபம், நீர்கொழும்பு, கொழும்பு, காலி, மாத்தறை மற்றும் அம்பாந்தோட்டை ஊடாகப் பொத்துவில் வரையான கடற்பிராந்தியங்களிலும் காற்றின் வேகம் அதிகரிக்கவும், அலைகள் உயரவும் வாய்ப்புள்ளது. இந்தப் பகுதிகளில் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபடும் மீனவர்கள் கடலுக்குச் செல்வதற்கு முன்னர் நிலவும் வானிலை குறித்து மிகுந்த அவதானத்துடன் செயற்பட வேண்டும். பாதுகாப்பான சூழல் இருந்தால் மாத்திரமே மீன்பிடிக்கச் செல்ல வேண்டும் என்றும், அபாயகரமான சூழ்நிலைகளைத் தவிர்க்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

நாடளாவிய ரீதியிலுள்ள மீனவ சமூகத்தினரை நோக்கிப் பணிப்பாளர் நாயகம் விடுத்துள்ள விசேட நினைவூட்டலில் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்.

“மீன்பிடித் தொழிலுக்காகப் புறப்படுவது முதல், கடலில் மீன்பிடிக்கும் காலம் மற்றும் மீண்டும் பாதுகாப்பாகக் கரைக்குத் திரும்பும் வரையிலான முழுமையான காலப்பகுதியில் ‘உயிர்காக்கும் அங்கிகளை’ அணிந்திருப்பது கட்டாயமாகும்.

கடந்த காலங்களில் ஏற்பட்ட விபத்துகளின் போது, உயிர்காக்கும் அங்கிகளை முறையாக அணிந்திருந்த மீனவர்களின் உயிர்கள் பாதுகாக்கப்பட்டன. அவ்வாறு செய்யாதவர்கள் தங்களது பெறுமதியான உயிர்களை இழக்க நேரிட்டது என்பதை மீனவர்கள் அனைவரும் நினைவில் கொள்ள வேண்டும்.” – என்றார்.

எனவே, வளிமண்டலவியல் திணைக்களம் மற்றும் கடற்றொழில் திணைக்களம் ஆகியவற்றால் அவ்வப்போது வெளியிடப்படும் அவசர வானிலை அறிவிப்புகள் குறித்துத் தொடர்ந்து அவதானத்துடன் இருக்குமாறும், தங்களது உயிர்களையும் உடமைகளையும் பாதுகாத்துக்கொண்டு பொறுப்புடன் செயற்படுமாறும் திணைக்களம் மேலும் கேட்டுக்கொண்டுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

நன்னீர் மீன்பிடி உற்பத்திகளின் உணவுக் கண்காட்சி கிளிநொச்சியில் ஆரம்பம்!

வடமாகாண விவசாய அமைச்சின் மீன்பிடி அலகு ஏற்பாடு செய்தநன்னீர் மீன்பிடி உற்பத்திகளின் உணவுக் கண்காட்சி 29.08.2026 இன்று கிளிநொச்சி பசுமைப்பூங்காவில் ஆரம்பமாகியது. இன்று பிற்பகல் மீன்பிடி அலகின்…

66 0 0
இலங்கை செய்திகள்

எச்சரிக்கை!! : எல் நினோ தாக்கத்தால் உணவுப் பற்றாக்குறை மற்றும் மந்தபோஷணை ஏற்படும் அபாயம்!

எல் நினோ தாக்கத்தால் இலங்கையில் கடுமையான உணவுப் பற்றாக்குறை, மந்தபோஷணை ஏற்படும் அபாயம்! – விசேட வைத்தியர் நிபுணர் சமல் சஞ்சீவ எச்சரிக்கை உலகளாவிய ரீதியில் அதிகரித்து…

78 0 0
இலங்கை செய்திகள்

அபிவிருத்தி உத்தியோகத்தர்களை தொடர்ச்சியாக ஏமாற்றும் அநுர அரசு : சஜித் குற்றச்சாட்டு

தேர்தல் காலத்திலும் அதற்குப் பின்னரும் இந்த அரசானது ஒரு இலட்சத்து 50 ஆயிரம் அபிவிருத்தி உத்தியோகத்தர்களையும், 14 ஆயிரத்து 8 பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்களையும் தொடர்ச்சியாக ஏமாற்றி…

29 0 0
இலங்கை செய்திகள்

மாகாண சபைத் தேர்தலை உடனடியாக நடத்துங்கள்! : சஜித் வலியுறுத்தல்!!

அரசு மக்களுக்குச் சிறந்த சேவையைத்தான் ஆற்றி வருவதாகக் கூறினால், உடனடியாக மாகாண சபைத் தேர்தலை நடத்துமாறு தான் சவால் விடுவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.…

50 0 0