உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
30 ஞாயிறு

நாகர்கோவில் காட்டில் போர்க்கால கையெறி குண்டு மீட்பு!

இலங்கை செய்திகள் 3 மாதங்கள் முன்
18 பார்வைகள்

மருதங்கேணி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாகர்கோவில் கிழக்கு பகுதியில் உள்ள காட்டுப்பகுதியில், யுத்த காலத்தில் பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் கையெறி குண்டு ஒன்று இன்று (08) கண்டெடுக்கப்பட்டுள்ளது.

இன்று மாலை 6:20 மணியளவில், நாகர்கோவில் கிழக்கு வனப்பகுதியில் உள்ள பனை மரமொன்றின் அடியில் இந்த கையெறி குண்டு இருப்பதை அவதானித்த பொதுமக்கள், அது குறித்து மருதங்கேணி பொலிஸ் நிலையத்திற்கு தகவல் வழங்கியுள்ளனர்.

தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த மருதங்கேணி பொலிஸார், குண்டு இருக்கும் பகுதியை அடையாளப்படுத்தி, அதன் பாதுகாப்பிற்காக இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்களை பணியில் அமர்த்தியுள்ளனர்.

இவ்விடயம் தொடர்பான அறிக்கை நாளை (09.06.2026) பருத்தித்துறை நீதவான் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு, நீதிமன்ற உத்தரவின் பேரில் குண்டை செயலிழக்கச் செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

நன்னீர் மீன்பிடி உற்பத்திகளின் உணவுக் கண்காட்சி கிளிநொச்சியில் ஆரம்பம்!

வடமாகாண விவசாய அமைச்சின் மீன்பிடி அலகு ஏற்பாடு செய்தநன்னீர் மீன்பிடி உற்பத்திகளின் உணவுக் கண்காட்சி 29.08.2026 இன்று கிளிநொச்சி பசுமைப்பூங்காவில் ஆரம்பமாகியது. இன்று பிற்பகல் மீன்பிடி அலகின்…

67 0 0
இலங்கை செய்திகள்

எச்சரிக்கை!! : எல் நினோ தாக்கத்தால் உணவுப் பற்றாக்குறை மற்றும் மந்தபோஷணை ஏற்படும் அபாயம்!

எல் நினோ தாக்கத்தால் இலங்கையில் கடுமையான உணவுப் பற்றாக்குறை, மந்தபோஷணை ஏற்படும் அபாயம்! – விசேட வைத்தியர் நிபுணர் சமல் சஞ்சீவ எச்சரிக்கை உலகளாவிய ரீதியில் அதிகரித்து…

81 0 0
இலங்கை செய்திகள்

அபிவிருத்தி உத்தியோகத்தர்களை தொடர்ச்சியாக ஏமாற்றும் அநுர அரசு : சஜித் குற்றச்சாட்டு

தேர்தல் காலத்திலும் அதற்குப் பின்னரும் இந்த அரசானது ஒரு இலட்சத்து 50 ஆயிரம் அபிவிருத்தி உத்தியோகத்தர்களையும், 14 ஆயிரத்து 8 பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்களையும் தொடர்ச்சியாக ஏமாற்றி…

31 0 0
இலங்கை செய்திகள்

மாகாண சபைத் தேர்தலை உடனடியாக நடத்துங்கள்! : சஜித் வலியுறுத்தல்!!

அரசு மக்களுக்குச் சிறந்த சேவையைத்தான் ஆற்றி வருவதாகக் கூறினால், உடனடியாக மாகாண சபைத் தேர்தலை நடத்துமாறு தான் சவால் விடுவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.…

52 0 0