உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
30 ஞாயிறு

சங்கீத்ஷனை ஜனாதிபதி பொது மன்னிப்பில் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்!

இலங்கை செய்திகள் 3 மாதங்கள் முன்
19 பார்வைகள்

“பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு நீண்டகாலமாகச் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சங்கீத்ஷனைப் பொதுமன்னிப்பின் அடிப்படையிலோ அல்லது கருணை அடிப்படையிலோ ஜனாதிபதி உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்” என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் கோரிக்கை விடுத்துள்ளார்.

யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சங்கீத்ஷனை இன்று நேரில் சென்று பார்வையிட்டு, நலம் விசாரித்த பின்னர் ஊடகங்களுக்குக் கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் குறிப்பிடுகையில்,

“சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சங்கீத்ஷனை நான் இன்று நேரடியாகச் சென்று பார்வையிட்டு, அவருடன் விரிவாகப் பேசியிருக்கின்றேன். இவரின் மறியல் விவகாரம் மற்றும் விடுதலை தொடர்பில் ஜனாதிபதிக்கு ஏற்கனவே எழுத்து மூலமான அவசர கடிதம் ஒன்றையும் அனுப்பி வைத்திருக்கிறேன்.

நாளை முதல் நான்கு நாள்களுக்கு நாடாளுமன்ற அமர்வுகள் நடக்கவுள்ளன. இந்தக் காலப்பகுதியில் ஜனாதிபதியை நேரடியாகச் சந்தித்துக் கலந்துரையாடுவதற்கான நேரத்தையும் கோரியுள்ளோம்.

இந்தச் சந்திப்பின் போது, சங்கீத்ஷனின் விடுதலை குறித்து ஜனாதிபதியுடன் மிக முக்கியமாகப் பேசவுள்ளோம். பொதுமன்னிப்பின் அடிப்படையிலாவது அவரைச் சிறையிலிருந்து விடுவிக்க வேண்டும் என்று ஜனாதிபதியிடம் நாங்கள் நேரடியாக வலியுறுத்துவோம்.

சங்கீத்ஷன் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளமையால் சாதாரண நீதிவான் நீதிமன்றம் ஒன்றின் மூலம் அவருக்குப் பிணையைப் பெற்றுக்கொள்ள முடியாத சட்டச் சூழல் நிலவுகின்றது.

அவர் பிணையில் வெளிவர வேண்டுமென்றால் கூட உயர்நீதிமன்றம் சென்றே அதற்கான வழிமுறைகளை முன்னெடுக்க வேண்டும். இது மிகவும் காலதாமதத்தை ஏற்படுத்தும்.

ஆனால், நாட்டின் ஜனாதிபதிக்குரிய விசேட அதிகாரத்தைப் பயன்படுத்தி, பொதுமன்னிப்பின் அடிப்படையில் அல்லது ஜனாதிபதியின் கருணையின் கீழ் சங்கீத்ஷனின் விடுதலை தொடர்பில் உடனடியாக இறுதி முடிவை மேற்கொள்ள முடியும். இதற்காகவே நான் ஜனாதிபதிக்குக் கடிதம் அனுப்பியுள்ளேன்.

ஆகவே, அவரை விடுதலை செய்வதற்கான முழுமையான சட்ட முயற்சிகளையும் தற்போதைய அரசு முன்னெடுத்து, அவரை உடனடியாக சிறையிலிருந்து விடுவிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கின்றேன்.” – என்றார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

நன்னீர் மீன்பிடி உற்பத்திகளின் உணவுக் கண்காட்சி கிளிநொச்சியில் ஆரம்பம்!

வடமாகாண விவசாய அமைச்சின் மீன்பிடி அலகு ஏற்பாடு செய்தநன்னீர் மீன்பிடி உற்பத்திகளின் உணவுக் கண்காட்சி 29.08.2026 இன்று கிளிநொச்சி பசுமைப்பூங்காவில் ஆரம்பமாகியது. இன்று பிற்பகல் மீன்பிடி அலகின்…

67 0 0
இலங்கை செய்திகள்

எச்சரிக்கை!! : எல் நினோ தாக்கத்தால் உணவுப் பற்றாக்குறை மற்றும் மந்தபோஷணை ஏற்படும் அபாயம்!

எல் நினோ தாக்கத்தால் இலங்கையில் கடுமையான உணவுப் பற்றாக்குறை, மந்தபோஷணை ஏற்படும் அபாயம்! – விசேட வைத்தியர் நிபுணர் சமல் சஞ்சீவ எச்சரிக்கை உலகளாவிய ரீதியில் அதிகரித்து…

81 0 0
இலங்கை செய்திகள்

அபிவிருத்தி உத்தியோகத்தர்களை தொடர்ச்சியாக ஏமாற்றும் அநுர அரசு : சஜித் குற்றச்சாட்டு

தேர்தல் காலத்திலும் அதற்குப் பின்னரும் இந்த அரசானது ஒரு இலட்சத்து 50 ஆயிரம் அபிவிருத்தி உத்தியோகத்தர்களையும், 14 ஆயிரத்து 8 பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்களையும் தொடர்ச்சியாக ஏமாற்றி…

31 0 0
இலங்கை செய்திகள்

மாகாண சபைத் தேர்தலை உடனடியாக நடத்துங்கள்! : சஜித் வலியுறுத்தல்!!

அரசு மக்களுக்குச் சிறந்த சேவையைத்தான் ஆற்றி வருவதாகக் கூறினால், உடனடியாக மாகாண சபைத் தேர்தலை நடத்துமாறு தான் சவால் விடுவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.…

52 0 0