உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
30 ஞாயிறு

சுரேஷ் சலேவுக்கு நீதி கோரி கொழும்பில் சத்தியாக்கிரகம்!

இலங்கை செய்திகள் 3 மாதங்கள் முன்
22 பார்வைகள்

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள இலங்கை அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சலேவுக்கு நீதி வழங்குமாறு வலியுறுத்தி, கொழும்பு கோட்டைதொடருந்து நிலையத்துக்கு முன்பாக இன்று காலை சத்தியாக்கிரகப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இந்தப் போராட்டத்தில் முன்னாள் அமைச்சர்களான விமல் வீரவன்ச, உதய கம்மன்பில உள்ளிட்ட அரசியல்வாதிகளும், தேசியவாத அமைப்புகளின் பிரதிநிதிகளும், சுரேஷ் சலேவின் குடும்பத்தினரும் கலந்துகொண்டுள்ளனர்.

இதன்போது ஊடகங்களுக்குக் கருத்து வெளியிட்ட முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச,

“மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே இந்த நாட்டுக்காகப் பாரிய சேவையாற்றிய ஒரு சிறந்த அதிகாரி ஆவார். ஆனால், இன்று புலம்பெயர் புலி அமைப்புகளின் தேவைக்காகவும், அரசியல் பழிவாங்கலாகவும் அவர் பழிவாங்கப்படுகின்றார்.

தடுப்புக் காவலில் அவர் மனிதாபிமானமற்ற முறையில் நடத்தப்பட்டு வருகின்றார். அவருக்குச் முறையான நீதி கிடைக்கும் வரை இந்தச் சத்தியாக்கிரகப் போராட்டம் தொடரும்” என்று குறிப்பிட்டார்.

இதன்போது கருத்துத் தெரிவித்த முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பில, “உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகளை நாம் எதிர்க்கவில்லை. ஆனால் அந்த விசாரணைகள் சட்டப் படியும், முறையான வடிவத்திலும் நடக்க வேண்டுமே தவிர, பழிவாங்கலாக அமையக் கூடாது” – என்றார்.

இந்தப் போராட்டத்தில் கலந்துகொண்ட சுரேஷ் சலேவின் தாயார் ஊடகங்களுக்கு முன்னால் கண்ணீர் மல்க மிகவும் உருக்கமான வேண்டுகோள் விடுத்தார்.

அவர் குறிப்பிடுகையில், “இலங்கைத் தாய்மார்கள் எவரும் இனி தங்களது பிள்ளைகளை இராணுவத்தில் சேர்ப்பதற்கு முன்வரக் கூடாது எனக் கேட்டுக்கொள்கின்றேன். நாட்டுக்காக உயிரைக் கொடுத்து உழைத்த என் மகனுக்கே இன்று இந்த நிலைமைதான் ஏற்பட்டுள்ளது. நீங்கள் மீறி உங்கள் பிள்ளைகளை இராணுவத்துக்கு அனுப்பினால், எதிர்காலத்தில் என்னைப் போன்றே நீங்களும் வீதிக்கு இறங்கிப் போராட வேண்டிய அவல நிலை ஏற்படும்” – என்று அழுதுகொண்டே தெரிவித்தார்.

தடுப்புக் காவலில் உள்ள சுரேஷ் சலே, தனக்கு இழைக்கப்படும் அநீதிகளுக்கு எதிராகச் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்து, உடல்நிலை மோசமடைந்த நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் நேற்று இரவு அனுமதிக்கப்பட்டுள்ள பின்னணியில் இந்தப் போராட்டம் தீவிரமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

நன்னீர் மீன்பிடி உற்பத்திகளின் உணவுக் கண்காட்சி கிளிநொச்சியில் ஆரம்பம்!

வடமாகாண விவசாய அமைச்சின் மீன்பிடி அலகு ஏற்பாடு செய்தநன்னீர் மீன்பிடி உற்பத்திகளின் உணவுக் கண்காட்சி 29.08.2026 இன்று கிளிநொச்சி பசுமைப்பூங்காவில் ஆரம்பமாகியது. இன்று பிற்பகல் மீன்பிடி அலகின்…

67 0 0
இலங்கை செய்திகள்

எச்சரிக்கை!! : எல் நினோ தாக்கத்தால் உணவுப் பற்றாக்குறை மற்றும் மந்தபோஷணை ஏற்படும் அபாயம்!

எல் நினோ தாக்கத்தால் இலங்கையில் கடுமையான உணவுப் பற்றாக்குறை, மந்தபோஷணை ஏற்படும் அபாயம்! – விசேட வைத்தியர் நிபுணர் சமல் சஞ்சீவ எச்சரிக்கை உலகளாவிய ரீதியில் அதிகரித்து…

81 0 0
இலங்கை செய்திகள்

அபிவிருத்தி உத்தியோகத்தர்களை தொடர்ச்சியாக ஏமாற்றும் அநுர அரசு : சஜித் குற்றச்சாட்டு

தேர்தல் காலத்திலும் அதற்குப் பின்னரும் இந்த அரசானது ஒரு இலட்சத்து 50 ஆயிரம் அபிவிருத்தி உத்தியோகத்தர்களையும், 14 ஆயிரத்து 8 பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்களையும் தொடர்ச்சியாக ஏமாற்றி…

31 0 0
இலங்கை செய்திகள்

மாகாண சபைத் தேர்தலை உடனடியாக நடத்துங்கள்! : சஜித் வலியுறுத்தல்!!

அரசு மக்களுக்குச் சிறந்த சேவையைத்தான் ஆற்றி வருவதாகக் கூறினால், உடனடியாக மாகாண சபைத் தேர்தலை நடத்துமாறு தான் சவால் விடுவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.…

52 0 0