உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
30 ஞாயிறு

மணற்காடு புனித அந்தோனியார் ஆலய திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற போட்டிகள்.!

இலங்கை செய்திகள் 3 மாதங்கள் முன்
31 பார்வைகள்

மணற்காடு புனித அந்தோனியார் ஆலயத்தின் வருடாந்த திருவிழாவை முன்னிட்டு, புனித யோசேவாஸ் இளையோர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் மாபெரும் மரதன் ஓட்டப் போட்டியும், துவிச்சக்கரவண்டி போட்டியும் இன்று (07.06.2026) ஞாயிற்றுக்கிழமை மிக விமர்சையாக நடாத்தப்பட்டன.

இன்று காலை 7.00 மணியளவில் அம்பன் பாடசாலைக்கு முன்பாக இரு போட்டிகளும் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டன.

போட்டிகளில் கலந்துகொண்ட வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் இலக்கை நோக்கி மிக விறுவிறுப்பாகவும் உற்சாகத்துடனும் போட்டியிட்டனர். இப்போட்டிகளானது நிர்ணயிக்கப்பட்ட தூரத்தைக் கடந்து, மணற்காடு புனித அந்தோனியார் ஆலயத்தை வந்தடைந்தன.

இந்த நிகழ்வில் மணற்காடு பங்குத்தந்தை அருட்திருல் ஜோன் குரூஸ் அடிகளார் தலைமையில் இந்நிகழ்வுகள் அனைத்தும் சிறப்புற இடம்பெற்றன.

இப்போட்டிகளில் வீரர்களை உற்சாகப்படுத்துவதற்காக பெருந்திரளானோர் கலந்துகொண்டனர்.

அருட்சகோதரிகள் பகுதி மக்கள் மற்றும் அயலூர் பொதுமக்கள், இளைஞர்கள், யுவதிகள் போட்டியின் போது பாதையெங்கும் கூடியிருந்து போட்டியில் பங்கேற்ற வீர, வீராங்கனைகளை கைதட்டி, ஆரவாரம் செய்து உற்சாகப்படுத்தியமை நிகழ்வுக்கு மேலும் உயிர் ஊட்டுவதாக அமைந்தது.

இத்திருவிழா போட்டிகள் அனைத்தும் எவ்வித தடங்கலுமின்றி மிக வெற்றிகரமாகவும், எழுச்சியோடும் நிறைவடைந்தன.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

நன்னீர் மீன்பிடி உற்பத்திகளின் உணவுக் கண்காட்சி கிளிநொச்சியில் ஆரம்பம்!

வடமாகாண விவசாய அமைச்சின் மீன்பிடி அலகு ஏற்பாடு செய்தநன்னீர் மீன்பிடி உற்பத்திகளின் உணவுக் கண்காட்சி 29.08.2026 இன்று கிளிநொச்சி பசுமைப்பூங்காவில் ஆரம்பமாகியது. இன்று பிற்பகல் மீன்பிடி அலகின்…

74 0 0
இலங்கை செய்திகள்

எச்சரிக்கை!! : எல் நினோ தாக்கத்தால் உணவுப் பற்றாக்குறை மற்றும் மந்தபோஷணை ஏற்படும் அபாயம்!

எல் நினோ தாக்கத்தால் இலங்கையில் கடுமையான உணவுப் பற்றாக்குறை, மந்தபோஷணை ஏற்படும் அபாயம்! – விசேட வைத்தியர் நிபுணர் சமல் சஞ்சீவ எச்சரிக்கை உலகளாவிய ரீதியில் அதிகரித்து…

81 0 0
இலங்கை செய்திகள்

அபிவிருத்தி உத்தியோகத்தர்களை தொடர்ச்சியாக ஏமாற்றும் அநுர அரசு : சஜித் குற்றச்சாட்டு

தேர்தல் காலத்திலும் அதற்குப் பின்னரும் இந்த அரசானது ஒரு இலட்சத்து 50 ஆயிரம் அபிவிருத்தி உத்தியோகத்தர்களையும், 14 ஆயிரத்து 8 பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்களையும் தொடர்ச்சியாக ஏமாற்றி…

31 0 0
இலங்கை செய்திகள்

மாகாண சபைத் தேர்தலை உடனடியாக நடத்துங்கள்! : சஜித் வலியுறுத்தல்!!

அரசு மக்களுக்குச் சிறந்த சேவையைத்தான் ஆற்றி வருவதாகக் கூறினால், உடனடியாக மாகாண சபைத் தேர்தலை நடத்துமாறு தான் சவால் விடுவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.…

53 0 0