உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
30 ஞாயிறு

சாய்ந்தமருதில் அல்-குர்ஆன் மத்ரஸா ஆசிரியர்களுக்கான விசேட வழிகாட்டல் கருத்தரங்கு.!

இலங்கை செய்திகள் 3 மாதங்கள் முன்
32 பார்வைகள்

சாய்ந்தமருது – மாளிகைக்காடு ஜும்ஆப் பெரிய பள்ளிவாசலில், அல்குர்ஆன் மத்ரஸா ஆசிரியர்களுக்கான விசேட வழிகாட்டல் கருத்தரங்கும் மாலையில் பள்ளிவாசல் மற்றும் மத்ரஸா நிர்வாகிகளுடனான சந்திப்பும் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சாய்ந்தமருது – மாளிகைக்காடு கிளையின் காரியாலயத்திலும் 06 ஆம் திகதி சனிக்கிழமை சிறப்பாக இடம்பெற்றது.

இந்நிகழ்வு அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சாய்ந்தமருது – மாளிகைக்காடு கிளையின் ஏற்பாட்டில், அதன் தலைவர் அஷ்ஷேய்க் எம்.எம். மீராஸாஹிப் சலீம் (ஷர்க்கி) தலைமையில் இடம்பெற்றது.

நிகழ்வுகளுக்கான அனுசரணையை சாய்ந்தமருது – மாளிகைக்காடு ஜும்ஆப் பெரிய பள்ளிவாசல் தலைவரும் பைத்துஸ்ஸகாத் நிறுவனத்தின் தலைவரும் வர்த்தக சங்கத்தின் தலைவரும் தொழிலதிபருமான அல்ஹாஜ் எம்.எஸ்.எம். முபாறக் வழங்கியிருந்தார்.

அல்குர்ஆன் மத்ரஸா கல்வித் தரத்தை மேம்படுத்தும் நோக்குடன் ஏற்பாடு செய்யப்பட்ட இக்கருத்தரங்கு, மத்ரஸா ஆசிரியர்களுக்கான வழிகாட்டல் மற்றும் கல்வி தரநிலைகள் தொடர்பான முக்கிய அம்சங்களை மையமாகக் கொண்டிருந்தது.

நிகழ்வில் பிரதான வளவாளர்களாகவும் சிறப்பு விருந்தினர்களாகவும் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் நிறைவேற்றுக்குழு உறுப்பினரும் குர்ஆன் மத்ரஸா விவகாரப் பிரிவின் செயலாளருமான அஷ்ஷெய்க் ஏ.சி.எம். பாஸில் (ஹுமைதி), குர்ஆன் மத்ரஸா விவகாரப் பிரிவின் இணைப்பாளர் அஷ்ஷேய்க் அஃலம் (நூராணி), ஊடக இணைப்பாளர் அஷ் ஷெய்க் பஸால் (ஹுமைதி) மற்றும் கொழும்பு மாவட்ட பயிற்றுவிப்பாளர் அஷ்ஷெய்க் அஸ்வர் அலி (தப்லீகி) ஆகியோர் கலந்து கொண்டு வழிகாட்டல் உரைகளை வழங்கினர்.

நிகழ்வை அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சாய்ந்தமருது – மாளிகைக்காடு கிளையின் செயலாளர் நப்றாஸ் ஹனீபா (ரஹ்மானி) நெறிப்படுத்தினார்.

இக்கருத்தரங்கில் மத்ரஸா ஆசிரியர்களின் கல்வி முறைகள், மாணவர் வளர்ச்சி அணுகுமுறைகள், கற்பித்தல் நுட்பங்கள் மற்றும் சமகால கல்வி சவால்களை எதிர்கொள்வது போன்ற விடயங்கள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது.

இந்நிகழ்வு, அல்குர்ஆன் கல்வி துறையில் தரநிலையை உயர்த்தும் நோக்குடன் ஆசிரியர்களுக்கு தொழில்நுட்ப ரீதியான மற்றும் கல்வி ரீதியான வழிகாட்டுதலை வழங்கியமை முக்கியமான முயற்சியாக அமைந்தது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

நன்னீர் மீன்பிடி உற்பத்திகளின் உணவுக் கண்காட்சி கிளிநொச்சியில் ஆரம்பம்!

வடமாகாண விவசாய அமைச்சின் மீன்பிடி அலகு ஏற்பாடு செய்தநன்னீர் மீன்பிடி உற்பத்திகளின் உணவுக் கண்காட்சி 29.08.2026 இன்று கிளிநொச்சி பசுமைப்பூங்காவில் ஆரம்பமாகியது. இன்று பிற்பகல் மீன்பிடி அலகின்…

74 0 0
இலங்கை செய்திகள்

எச்சரிக்கை!! : எல் நினோ தாக்கத்தால் உணவுப் பற்றாக்குறை மற்றும் மந்தபோஷணை ஏற்படும் அபாயம்!

எல் நினோ தாக்கத்தால் இலங்கையில் கடுமையான உணவுப் பற்றாக்குறை, மந்தபோஷணை ஏற்படும் அபாயம்! – விசேட வைத்தியர் நிபுணர் சமல் சஞ்சீவ எச்சரிக்கை உலகளாவிய ரீதியில் அதிகரித்து…

81 0 0
இலங்கை செய்திகள்

அபிவிருத்தி உத்தியோகத்தர்களை தொடர்ச்சியாக ஏமாற்றும் அநுர அரசு : சஜித் குற்றச்சாட்டு

தேர்தல் காலத்திலும் அதற்குப் பின்னரும் இந்த அரசானது ஒரு இலட்சத்து 50 ஆயிரம் அபிவிருத்தி உத்தியோகத்தர்களையும், 14 ஆயிரத்து 8 பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்களையும் தொடர்ச்சியாக ஏமாற்றி…

31 0 0
இலங்கை செய்திகள்

மாகாண சபைத் தேர்தலை உடனடியாக நடத்துங்கள்! : சஜித் வலியுறுத்தல்!!

அரசு மக்களுக்குச் சிறந்த சேவையைத்தான் ஆற்றி வருவதாகக் கூறினால், உடனடியாக மாகாண சபைத் தேர்தலை நடத்துமாறு தான் சவால் விடுவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.…

53 0 0