உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
30 ஞாயிறு

திருடனைக் கண்டுபிடிக்க பொதுமக்களின் உதவியை நாடும் பொலிஸார்.!

இலங்கை செய்திகள் 3 மாதங்கள் முன்
27 பார்வைகள்

வட்டவளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ரொசல்ல கிராம பகுதியில் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் இடம்பெற்றதாக கூறப்படும் திருட்டுச் சம்பவம் தொடர்பில் சந்தேகநபரை அடையாளம் காண பொதுமக்களின் உதவி கோரப்பட்டுள்ளது.

இச் சம்பவத்துடன் தொடர்புடையதாகக் கூறப்படும் CCTV காணொளிக் காட்சிகளில், அடையாளம் தெரியாத ஒருவர் வீடொன்றின் கதவை உடைத்து உள்ளே நுழைந்து, அங்கிருந்த எரிவாயு சிலிண்டரை எடுத்துச் செல்லும் காட்சி பதிவாகியுள்ளது.

சம்பவம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், காணொளியில் பதிவாகியுள்ள நபர் குறித்து ஏதேனும் தகவல்கள் தெரிந்திருந்தால் அல்லது அவரை அடையாளம் காண முடிந்தால், அருகிலுள்ள பொலிஸ் நிலையத்திற்கு அல்லது சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு அறிவிக்குமாறு பொதுமக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

குற்றச்செயல்களைத் தடுப்பதற்கும் குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்துவதற்கும் பொதுமக்களின் ஒத்துழைப்பு அவசியம் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

சம்பந்தப்பட்ட சந்தேக நபரை அடையாளம் காணும் அனைவரும் அருகில் உள்ள பொலிஸ் நிலையத்திற்கு உடன் தகவல் வழங்குமாறு வட்டவளை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

நன்னீர் மீன்பிடி உற்பத்திகளின் உணவுக் கண்காட்சி கிளிநொச்சியில் ஆரம்பம்!

வடமாகாண விவசாய அமைச்சின் மீன்பிடி அலகு ஏற்பாடு செய்தநன்னீர் மீன்பிடி உற்பத்திகளின் உணவுக் கண்காட்சி 29.08.2026 இன்று கிளிநொச்சி பசுமைப்பூங்காவில் ஆரம்பமாகியது. இன்று பிற்பகல் மீன்பிடி அலகின்…

74 0 0
இலங்கை செய்திகள்

எச்சரிக்கை!! : எல் நினோ தாக்கத்தால் உணவுப் பற்றாக்குறை மற்றும் மந்தபோஷணை ஏற்படும் அபாயம்!

எல் நினோ தாக்கத்தால் இலங்கையில் கடுமையான உணவுப் பற்றாக்குறை, மந்தபோஷணை ஏற்படும் அபாயம்! – விசேட வைத்தியர் நிபுணர் சமல் சஞ்சீவ எச்சரிக்கை உலகளாவிய ரீதியில் அதிகரித்து…

81 0 0
இலங்கை செய்திகள்

அபிவிருத்தி உத்தியோகத்தர்களை தொடர்ச்சியாக ஏமாற்றும் அநுர அரசு : சஜித் குற்றச்சாட்டு

தேர்தல் காலத்திலும் அதற்குப் பின்னரும் இந்த அரசானது ஒரு இலட்சத்து 50 ஆயிரம் அபிவிருத்தி உத்தியோகத்தர்களையும், 14 ஆயிரத்து 8 பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்களையும் தொடர்ச்சியாக ஏமாற்றி…

31 0 0
இலங்கை செய்திகள்

மாகாண சபைத் தேர்தலை உடனடியாக நடத்துங்கள்! : சஜித் வலியுறுத்தல்!!

அரசு மக்களுக்குச் சிறந்த சேவையைத்தான் ஆற்றி வருவதாகக் கூறினால், உடனடியாக மாகாண சபைத் தேர்தலை நடத்துமாறு தான் சவால் விடுவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.…

53 0 0