உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
30 ஞாயிறு

இனி ஒருபோதும் அரசியலுக்கு வரமாட்டேன்.!

இலங்கை செய்திகள் 3 மாதங்கள் முன்
23 பார்வைகள்

தான் இனி ஒருபோதும் தீவிர அரசியலுக்கு வரப்போவதில்லை என்று முன்னாள் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

தென்னிலங்கை ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலின்போது, எதிர்காலத்தில் எத்தனை கோரிக்கைகள் விடுக்கப்பட்டாலும் மீண்டும் அரசியலுக்கு வரும் எண்ணம் இல்லையா என எழுப்பப்பட்ட கேள்விக்கே அவர் இவ்வாறு பதிலளித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் கூறுகையில்,
“இல்லை, நான் இனிமேல் அரசியலுக்கு வருவதற்கு எதிர்பார்க்கவில்லை. அதேவேளை, நான் அமைச்சராகப் பதவி வகித்த காலப்பகுதியில் எனக்கு வழங்கப்பட்ட பொறுப்புகள் அனைத்தையும் நாட்டுக்காக முழு அர்ப்பணிப்புடன் நிறைவேற்றியுள்ளேன்.” – என்று குறிப்பிட்டுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்திலேயே அலி சப்ரி முதன்முறையாக அரசியலுக்குள் பிரவேசித்தார். அப்போது அவருக்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஊடாக நாடாளுமன்றத் தேசியப் பட்டியல் உறுப்பினர் பதவி வழங்கப்பட்டதுடன், நீதி அமைச்சராகவும் அவர் நியமிக்கப்பட்டார்.

நாட்டில் கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்ட வேளையில் அவர் தனது அமைச்சுப் பதவியைத் துறந்தார். எனினும், அதன் பின்னர் ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாகப் பொறுப்பேற்ற அவசர சூழலில், நாட்டின் நிதி அமைச்சராகவும், பின்னர் வெளிவிவகார அமைச்சராகவும் கடமையாற்றி சர்வதேச ரீதியில் நாட்டின் நலனுக்காகப் பங்காற்றியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

நன்னீர் மீன்பிடி உற்பத்திகளின் உணவுக் கண்காட்சி கிளிநொச்சியில் ஆரம்பம்!

வடமாகாண விவசாய அமைச்சின் மீன்பிடி அலகு ஏற்பாடு செய்தநன்னீர் மீன்பிடி உற்பத்திகளின் உணவுக் கண்காட்சி 29.08.2026 இன்று கிளிநொச்சி பசுமைப்பூங்காவில் ஆரம்பமாகியது. இன்று பிற்பகல் மீன்பிடி அலகின்…

74 0 0
இலங்கை செய்திகள்

எச்சரிக்கை!! : எல் நினோ தாக்கத்தால் உணவுப் பற்றாக்குறை மற்றும் மந்தபோஷணை ஏற்படும் அபாயம்!

எல் நினோ தாக்கத்தால் இலங்கையில் கடுமையான உணவுப் பற்றாக்குறை, மந்தபோஷணை ஏற்படும் அபாயம்! – விசேட வைத்தியர் நிபுணர் சமல் சஞ்சீவ எச்சரிக்கை உலகளாவிய ரீதியில் அதிகரித்து…

81 0 0
இலங்கை செய்திகள்

அபிவிருத்தி உத்தியோகத்தர்களை தொடர்ச்சியாக ஏமாற்றும் அநுர அரசு : சஜித் குற்றச்சாட்டு

தேர்தல் காலத்திலும் அதற்குப் பின்னரும் இந்த அரசானது ஒரு இலட்சத்து 50 ஆயிரம் அபிவிருத்தி உத்தியோகத்தர்களையும், 14 ஆயிரத்து 8 பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்களையும் தொடர்ச்சியாக ஏமாற்றி…

31 0 0
இலங்கை செய்திகள்

மாகாண சபைத் தேர்தலை உடனடியாக நடத்துங்கள்! : சஜித் வலியுறுத்தல்!!

அரசு மக்களுக்குச் சிறந்த சேவையைத்தான் ஆற்றி வருவதாகக் கூறினால், உடனடியாக மாகாண சபைத் தேர்தலை நடத்துமாறு தான் சவால் விடுவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.…

53 0 0