உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
30 ஞாயிறு

2029 இற்கு முன் ரணில் மீண்டும் ஜனாதிபதி; ராஜித அதிரடி அறிவிப்பு.!

இலங்கை செய்திகள் 3 மாதங்கள் முன்
24 பார்வைகள்

இலங்கையில் 2029ஆம் ஆண்டுக்கு முன்னரே ரணில் விக்கிரமசிங்க மீண்டும் ஜனாதிபதியாவார் என்றும், நாட்டின் நலனுக்காக அந்தச் சவாலை அவர் ஏற்பார் என்றும் முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

தென்னிலங்கை ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது,
“இலங்கை இரண்டாவது தடவையும் வங்குரோத்து நிலையை அடைந்தால், அதிலிருந்து மீண்டெழுவது மிகவும் கடினம் என ரணில் விக்கிரமசிங்க ஏற்கனவே சுட்டிக்காட்டியிருந்தார். எனவே, அவ்வாறானதொரு துரதிர்ஷ்டவசமான நிலை ஏற்படுவதற்கு முன்னர் ரணில் விக்கிரமசிங்கவிடம் ஆட்சி ஒப்படைக்கப்பட்டால், அவர் சர்வதேச நாடுகளுடன் பேச்சு நடத்தி நாட்டுக்காகச் சிறந்த பலன்களைப் பெற்றுக்கொடுப்பார்.

மக்களிடம் உண்மைகளைக் கூறிக்கொண்டே ஆட்சியைப் பொறுப்பேற்க வேண்டும். தம்மால் நெருக்கடிகளைத் தீர்க்க முடியும் என்பதைச் செயலில் காட்டிய ஒரே தலைவர் ரணில் விக்கிரமசிங்க மட்டுமே ஆவார். அவரது பொருளாதார மீட்சித் திட்டங்களைச் சர்வதேச நாடுகளின் பிரதிநிதிகள் கூடப் பாராட்டியுள்ளனர்.

நாட்டை மீட்டெடுக்கும் இந்த முக்கிய பயணத்தில் ரணில் விக்கிரமசிங்க நிச்சயம் இணைந்துகொள்வார். தேவைப்பட்டால் அவரைப் பலவந்தமாகவேனும் நாம் மீண்டும் அழைத்து வருவோம்.

பொருளாதார நெருக்கடியை மக்களால் தாங்கிக்கொள்ள முடியாத ஒரு கட்டத்தில், நாட்டில் மீண்டும் ஒரு புரட்சி வெடிக்கும். கடுமையான பொருளாதாரப் பின்னடைவைச் சந்தித்த கிரீஸ் நாட்டில் குறுகிய காலத்தில் நான்கு தடவைகள் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது.

இலங்கையிலும் தற்போது புதியதொரு அரசியல் கலாச்சாரமே நிலவுகின்றது. எனவே, 2029ஆம் ஆண்டுக்கு முன்னரே ரணில் விக்கிரமசிங்க மீண்டும் ஜனாதிபதியாகப் பதவியேற்கக்கூடிய சாத்தியக்கூறுகள் உள்ளன.” – என்று ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

நன்னீர் மீன்பிடி உற்பத்திகளின் உணவுக் கண்காட்சி கிளிநொச்சியில் ஆரம்பம்!

வடமாகாண விவசாய அமைச்சின் மீன்பிடி அலகு ஏற்பாடு செய்தநன்னீர் மீன்பிடி உற்பத்திகளின் உணவுக் கண்காட்சி 29.08.2026 இன்று கிளிநொச்சி பசுமைப்பூங்காவில் ஆரம்பமாகியது. இன்று பிற்பகல் மீன்பிடி அலகின்…

74 0 0
இலங்கை செய்திகள்

எச்சரிக்கை!! : எல் நினோ தாக்கத்தால் உணவுப் பற்றாக்குறை மற்றும் மந்தபோஷணை ஏற்படும் அபாயம்!

எல் நினோ தாக்கத்தால் இலங்கையில் கடுமையான உணவுப் பற்றாக்குறை, மந்தபோஷணை ஏற்படும் அபாயம்! – விசேட வைத்தியர் நிபுணர் சமல் சஞ்சீவ எச்சரிக்கை உலகளாவிய ரீதியில் அதிகரித்து…

81 0 0
இலங்கை செய்திகள்

அபிவிருத்தி உத்தியோகத்தர்களை தொடர்ச்சியாக ஏமாற்றும் அநுர அரசு : சஜித் குற்றச்சாட்டு

தேர்தல் காலத்திலும் அதற்குப் பின்னரும் இந்த அரசானது ஒரு இலட்சத்து 50 ஆயிரம் அபிவிருத்தி உத்தியோகத்தர்களையும், 14 ஆயிரத்து 8 பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்களையும் தொடர்ச்சியாக ஏமாற்றி…

31 0 0
இலங்கை செய்திகள்

மாகாண சபைத் தேர்தலை உடனடியாக நடத்துங்கள்! : சஜித் வலியுறுத்தல்!!

அரசு மக்களுக்குச் சிறந்த சேவையைத்தான் ஆற்றி வருவதாகக் கூறினால், உடனடியாக மாகாண சபைத் தேர்தலை நடத்துமாறு தான் சவால் விடுவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.…

53 0 0